What is heart disease and symptoms?
What is heart disease and symptoms?
Listen to this article

What is heart disease? இதய நோய் என்றால் என்ன? Cardiovascular diseases can refer to conditions affecting the heart and its blood vessels. In the current era, heart diseases are one of the most common causes of death and include conditions such as arrhythmia, coronary artery disease and congenital heart disease. Both myocardial infarction and heart failure are the most common types of heart disease worldwide.

இதய நோய்கள் என்பது இதயம் மற்றும் அதன் இரத்தக் குழாய்களுக்கு பாதிப்பேற்படுத்தும் நிலையைக் குறிக்கக்கூடியது. தற்போதைய காலகட்டத்தில், இதய நோய்கள் என்பது மரணம் ஏற்படுவதற்கு மிக பொதுவான காரணிகளுள் ஒன்றாக இருப்பதோடு அர்ஹித்மியா, கரோனரி தமனி நோய் மற்றும் பிறப்பு இதய நோய் போன்ற நிலைகளையும் உட்கொண்டிருக்கிறது. மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பு ஆகிய இரண்டுமே உலகளவில் இருக்கும் பொதுவான இதயநோய் வகைகளாகும்.

  • இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

அதிரோஸ்கிளிரோஸிஸ் நோயை (குறுகலான இரத்தக் குழாய்) சார்ந்த அறிகுறிகளுள் அடங்குபவை:

மார்பு இறுக்கம், வலி ​​(பொதுவாக ஆண்களுக்கு ஏற்படக்கூடியது) மற்றும் அசௌகரியம் (பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடியது).

மூச்சு திணறல்.

நெஞ்சு வலி பரவி தாடை, கழுத்து, பின்புறம் மற்றும் அடி வயிறு போன்ற உறுப்புகளையும் பாதிப்பது.

கைகள் மற்றும் கால்களில் ஏற்படக்கூடிய உணர்வின்மை, வலி மற்றும் பலவீனம்.

அர்ஹித்மியாவை சார்ந்த அறிகுறிகள் பின்வருமாறு:

இதயத்தில் ஏற்படும் படபடப்பான உணர்ச்சி.

நெஞ்சு படபடத்தல் மற்றும் தலைச்சுற்றல்.

டச்சிகார்டியா (வேகமான இதயத் துடிப்பு).

பிராடிகார்டியா (மெதுவான இதய துடிப்பு).

சுவாசிக்க முடியாத தன்மை.

இதய குறைபாடுகள் அல்லது இதய செயலிழப்பை சார்ந்து ஏற்படக்கூடிய அறிகுறிகள் பின்வருமாறு:

கைக்குழந்தைகளின் நிறத்தில் ஏற்படும் மாற்றம் அதாவது வெளிறிய, நீல நிற சருமமாக மாறுதல்.

தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத்திணறல் ஏற்படுவதால் கைகுழந்தைகளின் இடை அதிகரிப்பு மோசமானதாகாக இருக்கும், இக்காரணத்தால் குழந்தைகளுக்கு உணவின் மேல் வெறுப்பேற்படுகிறது.

கைகள், கால்கள் மற்றும் வயிற்றில் ஏற்படும் வீக்கம்.

உடல் பயிற்சிக்கு பிறகு அல்லது சில உடல் செயற்பாடுகளை செய்தப்பிறகு ஒருவர் மிக எளிதாக சோர்வை உணரலாம்.

இதய நோய் தொற்றுக்களை சார்ந்த அறிகுறிகள் பின்வருமாறு:

இரவில் ஏற்படும் வியர்வை மற்றும் குளிர்.

இருமல்.

இதயத்தின் முணுமுணுப்பு.

கை மற்றும் கால் விரல்கள், அடிவயிறு, இதயம் ஆகியவற்றில் ஏற்படும் வலி.

இதய நோய்களுக்கான காரணங்கள் நோயின் வகைக்கேற்ப வேறுபடுகிறது மேலும் அவற்றுள் அடங்கும் காரணங்கள் பின்வருமாறு:

அதிரோஸ்கிளிரோஸிஸ் இதய நோய்: ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், சரீர உழைப்பில்லாத வாழ்க்கை முறை, அதிக எடையுடன் இருத்தல் மற்றும் புகைபிடித்தல்.

அர்ஹித்மியாஸ்: பிறப்பு இதய நோய் (பிறந்ததிலிருந்து இருக்கக்கூடியது), நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், போதைப்பொருள் துஷ்பிரயோகம், புகைபிடித்தல் மற்றும் மன அழுத்தம்.

இதய குறைபாடுகள்: கர்ப்பகாலத்தில் உட்கொள்ளும் சில மருந்துகள் அல்லது கர்ப்பிணி தாயின் சில ஆரோக்கிய நிலைகள் அல்லது மரபணு காரணிகள் போன்றவைகள் கரு வளர்ச்சியின் போது அதன் இதயத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள்.

இதய நோய்த்தொற்றுகள்: பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அல்லது ஒட்டுண்ணிகள் போன்றவைகள் இரத்த ஓட்டத்தின் மூலம் இருதயத்தை அடைவதன் காரணமாக ஏற்படக்கூடியது. ருமேடிக் இதய நோய், சிஃபிலிஸ், வால்வுலர் இதய நோய்கள் மற்றும் இதயம் அல்லது பற்களில் ஏற்படும் பிளவுக்கான அறுவை சிகிச்சை போன்றவைகள் இதயத்தில் அதிக நோய்த்தொற்றினை ஏற்படுத்துகின்றன.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

மருத்துவ வரலாறு மற்றும் உடலியல் சோதனைகளுடன் பல ஆய்வுகள் இதய நோய்களைக் கண்டறிய உதவிபுரிகின்றன.

heart disease

கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைட் அளகளை மதிப்பீடு செய்வதற்கு இரத்த சோதனை மேற்கொள்தல்.

அழுத்த சோதனை.

எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈசிஜி).

எக்கோ கார்டியோகிராம் (2டி எக்கோ).

டில்ட் சோதனைகள்.

எலெக்ட்ரோபிசியல் சோதனைகள்.

கொரோனரி ஆஞ்சியோகிராம்.

சி.டி. (கம்ப்யூட்டேட் டோமோகிராபி) ஸ்கேன்.

இதய நோய்களுக்கான சிகிச்சைகள், மருந்துகள் மட்டுமின்றி பல வாழ்க்கைமுறை மாற்றங்களிலும் ஈடுபடுகிறது. புகை பிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதலை தடுத்தல் அவசியம்.

உங்கள் மருத்துவர் உங்களை குறைந்த-கொலுப்புடைய-உணவு பழக்கத்திற்கு மாறவும் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடவும் அல்லது தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு   நடைபயிற்சி மேற்கொள்ளவும் அறிவுறுத்தக்கூடும். உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் லிப்போப்ரோடீன் கொலஸ்ட்ரால் குறைந்த-அடர்த்தி அளவுகளை குறைக்கவும் மருந்துகள் தேவைப்படலாம்.

இந்நோயின் வகை மற்றும் தீவிரம், ஆகியவற்றை பொறுத்து உங்கள் மருத்துவர் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கக்கூடும். இதயத்தில் இருக்கும் கொரோனரி தமனிகளில் ஏற்படும்.

அடைப்புகளுக்கு உலோகத்தாலான ஸ்டென்ட் பொருத்துதல்(அஞ்சியோபிளாஸ்ட்டி) அல்லது அடைப்புகள் கொண்ட இரத்த நாளங்களுக்காக புதிய பாதையினை உருவாக்க (பைபாஸ் அறுவை சிகிச்சை) கால்களிலிருந்தோ அல்லது நெஞ்சு பகுதியிலிருந்தோ  அடைப்பில்லாத இரத்த குழாய்களை எடுத்து இதயத்தில் பொருத்துதல்(அறுவை சிகிச்சையில் உயிரிழைமத்தை இடம் மாற்றிப் பொருந்தவைத்தல் கிராப்ட் எனப்படுகிறது) ஆகியவைகள் மேற்கொள்ளப்படும்.

Home remedies to increase libido

பாலுர்ணவை அதிகரிக்க வீட்டு வைத்தியம் –

Increase Sexuality for Men and Women?

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுணர்வை அதிகரிக்க குறிப்புகள்.