symptoms of the disease Hepatitis C
symptoms of the disease Hepatitis C
Listen to this article

What is Hepatitis C?

Hepatitis C (hepatitis C) is an inflammation of the liver caused by the hepatitis C virus (HCV). It is spread primarily through the blood. The disease develops as an acute infection and in 80% of infected people, it progresses to a chronic condition.

Acute infection lasts for a maximum of 6 months.It resolves without any treatment.Long-term infection lasts for a long time. It can lead to liver and cancer (carcinoma). Chronic infection lasts for too long and can lead to liver cirrhosis or cancer.

Based on the genotype, HCV is classified into 6 types from 1 to 6. Genotype 3 is most commonly reported in India, followed by genotype 1. Identifying the genotype is very important for proper treatment.

According to the World Health Organization, the prevalence of HCV infection is between 0.5% – 1% in the Indian subcontinent against 1.6% worldwide.It is a population-threatening disease.

What are the main effects and symptoms of the disease?

Severe condition:

It takes between 2 weeks and 6 months before you start showing symptoms. 80% of people who are affected do not show any symptoms. However, the following symptoms may appear:

Weakness.

Nausea.

vomiting

loss of appetite

Yellowing of the eyes and skin.

Abdominal discomfort (pain).

Chronic condition:

At a later stage, the following appear:

Abdominal fluid accumulation and associated bacterial infection.

Blood in the stool or vomit.

Black stools.

Difficulty breathing.

Joint Pain.

What are the main causes of infection?

HCV is mainly transmitted through blood in the following ways:

Sharing of personal belongings of drug users such as used needles, razors, etc.

Use of used needles and syringes in hospitals.

Inadequate disinfection of medical equipment.

Use of cultured blood for transfusion.

Other transfer methods include:

Transmission through sexual contact.

Transmission from mother to child.

Infection is not spread by sharing contaminated food and water or household items.

How is it diagnosed and treated?

If the above symptoms are present, a doctor should be consulted. The doctor may order blood tests to measure liver function tests and anti-HCV (non-HCV) HCV ribosomal (HCV R) antibodies to test for the presence of the virus. He will recommend DNA tests. This test can detect the presence of the virus within a week.

A liver tissue test is done to determine the extent of liver damage. A conventional form of HCV testing is done before starting treatment.

Directly acting antiviral drugs are new drugs for Hepatitis C infection. Duration of treatment with these new drugs is 6 months. Since these new drugs are not universally used, conventional treatment methods are widely used.

Currently, there is no vaccine to prevent infection, but infection can be largely prevented by reducing exposure to the virus (sharing needles and syringes with infected individuals, avoiding blood transfusions, and sexual contact).

Properly following the dosage prescribed by your doctor can help you recover from the infection and improve your quality of life.

  • கல்லீரல் அழற்சி வகை சி (ஹெபாடைடிஸ் சி) என்றால் என்ன?

கல்லீரல் அழற்சி வகை சி (ஹெபாடைடிஸ் சி) என்பது ஹெபாடிடிஸ் சி வைரஸால் (ஹெச்.சி.வி) கல்லீரலில் ஏற்படும் அழற்சியே ஆகும்.இது இரத்தத்தின் வழியாக முதன்மையாக பரவுகிறது.இந்த நோய் ஒரு கடுமையான நோய்த்தொற்றாக உருவாகிறது பாதிக்கப்பட்ட 80% மக்களிடத்தில், இது நாள்பட்ட நிலைமைக்கு முன்னேறுகிறது.

கடுமையான நோய்த்தொற்றானது அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை நீடிக்கும்.இது எந்தவொரு சிகிச்சையும் இன்றி குணமைடைகிறது.நீண்ட காலமாக நீண்ட காலமாக நீடிக்கும். இது ஈரல் மற்றும் புற்றுநோய்க்கு (புற்றுநோய்) வழிவகுக்கும்.நாள்பட்ட நோய்த்தொற்றானது அதிகப்படியான நேரத்திற்கு நீடித்து, கல்லீரல் இழைநார் வளர்ச்சி அல்லது புற்றுநோய்க்கு வழிவகுக்கக்கூடும்.

மரபுசார் வடிவத்தின் அடிப்படையில், ஹெச்.சி.வி1 முதல் 6 வரையிலான 6 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.மரபுசார் வடிவம் 3 இந்தியாவில் மிகவும் பொதுவாகப் பதிவாகியுள்ளது.இதனைத் தொடர்ந்து மரபுசார் வடிவம் 1 பதிவாகியுள்ளது.மரபுசார் வடிவத்தை அடையாளம் காணுதல், சரியான சிகிச்சையளிக்க மிகவும் முக்கியமானதாகும்.

உலக சுகாதார அமைப்பின்படி, ஹெச்.சி.வி நோய்த்தொற்றின் பாதிப்பு உலகம் முழுவதும் 1.6% உள்ளதற்கு எதிராக இந்திய துணைக் கண்டத்தில் 0.5% – 1% க்கு இடையில் உள்ளது.இது மக்களை அச்சுறுத்தும் நோயாகும்.

  • நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கடுமையான நிலை:

உங்களுக்கு அறிகுறிகள் தோன்ற 2 வாரங்கள் முதல் 6 மாதங்கள் வரை ஆகும்.பாதிக்கப்பட்டவர்களில் 80% மக்கள், எந்த அறிகுறிகளையும் காட்டுவது இல்லை.இருப்பினும் பின்வரும் அறிகுறிகள் தோன்றக்கூடும்:

பலவீனம்.

குமட்டல்.

வாந்தி.

பசியின்மை.

கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல். 

வயிற்றில் அசௌகரியம் (வலி).

நாள்பட்ட நிலை:

பிந்தைய கால கட்டத்தில், பின்வருவன தோன்றும்:

அடிவயிற்றில் திரவம் குவிதல் மற்றும் அதனோடு தொடர்புடைய பாக்டீரியா நோய்த்தொற்று ஏற்படுதல்.

மலம் அல்லது வாந்தியில் இரத்தம் வெளியேறுதல். 

கருநிறத்திலான மலம்.

சுவாசிப்பிதில் சிரமம்.

மூட்டு வலி.

  • நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஹெச்.சி.வி முக்கியமாக இரத்தத்தின் வழியாக பின்வரும் வழிகளில் பரவுகின்றது:

போதைப் பொருள்கள் பயன்படுத்துவோர் உபயோகித்த ஊசிகள், ரேஸர்கள் போன்ற அவர்களுது தனிப்பட்ட பொருட்களை பகிர்தல்.

மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மற்றும் சிரிஞ்ச்களின் பயன்பாடு.

மருத்துவ உபகரணங்களில் சரியாக நோய்நுண்ம நீக்கம் செய்யாமை.

நுண்கிருமிகள் நிறைந்த இரத்ததை குருதி மாற்றத்திற்கு பயன்படுத்துதல்.

பிற பரிமாற்ற முறைகள் பின்வருமாறு:

பாலியல் தொடர்பு வழியாக பரவுதல்.

அம்மாவிடமிருந்து குழந்தைக்கு பரவுதல்.

நோய்த்தொற்றானது மாசடைந்த உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் அல்லது வீட்டில் உள்ள பொருட்களை பகிர்வதன் மூலம் பரவுவதில்லை.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மேற்கூறப்பட்ட அறிகுறிகள் இருப்பின், மருத்துவரை அணுக வேண்டும்.மருத்துவர் கல்லீரலின் இயக்குநீரின் அளவுகளை அறிய இரத்த பரிசோதனைகள் மற்றும் வைரஸ் இருக்கின்றதா என்று சோதிக்க ஹெச்.சி.வி பிறபொருளெதிரி (ஹெச்.சி.வி-அல்லாத) ஹெச்.சி.வி இரைபோ கருவமிலம் (ஹெச்.சி.வி ஆர்.என்.ஏ) சோதனைகளைப் பரிந்துரை செய்வார்.இந்த சோதனை மூலம் வைரஸ் இருக்கின்றதா என்று ஒரு வாரத்தில் கண்டுபிடிக்க முடியும்.

கல்லீரல் சேதத்தின் அளவைக் கண்டறிய கல்லீரல் திசுப் பரிசோதனை செய்யப்படுகிறது.ஹெச்.சி.வி-ன் மரபுசார் வடிவ சோதனை சிகிச்சை துவங்குவதற்கு முன்பே மேற்கொள்ளப்படுகிறது.

நேரடியாகச் செயற்படும் வைரசுக்கு எதிரான மருந்துவகைகள் கல்லீரல் அழற்சி வகை சி நோய்தொற்றுக்கு கொடுக்கப்படும் புதிய மருந்து வகைகள் ஆகும்.இப்புதிய மருந்துகளின் துணைகொண்டு நடைபெறும் சிகிச்சையின் கால அவகாசமானது 6 மாதங்கள் ஆகும்.இந்த புதிய மருந்துகள் அனைவராலும் உபயோகிக்கும் வகையில் இல்லாமையால், வழக்கமான சிகிச்சை முறைகளே பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

தற்போது, ​​நோய்தொற்றை தடுப்பதற்கான எந்த தடுப்பூசியும் இல்லை, ஆனால் வைரஸிற்கு  வெளிப்படுவதைக் குறைப்பதன் மூலம் நோய் தாக்குதலை அதிக அளவில் தடுக்க முடியும்.(பாதிக்கப்பட்ட நபர்களுடனான ஊசி மற்றும் சிரிஞ்ச்களின் பகிர்வு, இரத்த மாற்றம் மற்றும் பாலியல் ரீதியான தொடர்பை தவிர்த்தல்).

உங்கள் மருத்துவரால் பரிந்துதுரைக்கப்பட்ட மருந்தூட்டத்தை  முறையாக கடைப்பிடிப்பன் மூலம் நோய்த் தொற்றிலிருந்து எளிதில் மீண்டு வந்து, வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

Read More:

Increase Sexuality for Men and Women?

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலுணர்வை அதிகரிக்க குறிப்புகள்.

Causes of Sexual dysfunction factors?

ஆண்கள் மற்றும் பெண்களில் விறைப்புத்தன்மையுடன் தொடர்புடைய காரணிகள்.