‘Custard Apple’- Some more interesting facts!
‘Custard Apple’- Some more interesting facts!
Listen to this article

How to know the Custard Apple interesting facts

What is the reason why custard apple is called ‘custard apple’?

In our country this fruit is known as Seethapalam and is called ‘Custard Apple’ in English. This fruit got its name because of its ‘custard’ ice cream-like taste.

Custard Apple fruit is not available throughout the year. The tree bears fruit only in a certain season. The pods that bear fruit on the mature branches of the dense, low-height Custard Apple fruit tree are plucked as pods after they are well developed. They ripen after picking.

Many people are reluctant to eat Custard Apple because of the large amount of seeds in it. Apart from sowing these seeds, you can also grow Custard Apple trees using padiyan. The West Indian Islanders were the first to cultivate the fruit trees.

Today, this fruit tree is grown all over the world to attract everyone with its taste and smell. Everyone likes its smell and taste, so it is used to make jams, jellies and ice creams.

Some people eat a lot of processed foods. Some people are addicted to smoking. Some people drink a lot of tea and coffee. Some people also have a habit of drinking alcohol. All of them need potassium daily to prevent these effects from occurring in the body.

Because this nutrient cannot be stored in the body. So when you have to eat it every day, you can eat cheetah fruit which is rich in this nutrient!

What are benefits in breast milk?

How to know Common Breastfeeding Problems

what Attention of breastfeeding mothers!

சீத்தாப்பழம் – மேலும் சில சுவாரஸ்ய தகவல்கள்!

சீத்தாப்பழம் ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்று அழைக்கப்படுவதன் காரணம் என்ன?

நம் நாட்டில் சீதாப்பழம் என்று அழைக்கப்படும் இப்பழம் ஆங்கிலத்தில் ‘கஸ்டர்ட் ஆப்பிள்’ என்றழைக்கப்படுகிறது. ‘கஸ்டர்ட்’ என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.

சீத்தாப்பழம் வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட பருவத்தில்தான் மரத்தில் காய்க்கும். அடர்ந்து, உயரம் குறைவாக உள்ள சீதாப்பழ மரத்தின் முற்றிய கிளைகளில் காய்க்கும் காய்களை, நன்கு வளர்ந்த பிறகு காயாகவே பறித்து விடுவார்கள். பறித்த பிறகே பழுக்க வைப்பார்கள்.

சீதாப்பழத்தை பலர் சாப்பிடத் தயங்குவது அதில் அதிகமாக உள்ள விதைகளின் காரணமாகத்தான். இந்த விதைகளை விதைத்து மட்டுமல்லாமல், பதியன் வைத்தும் சீதாப்பழ மரங்களை வளர்க்கலாம். முதன் முதலில் மேற்கு இந்தியத் தீவினர்களால்தான் சீதாப்பழ மரங்கள் வளர்க்கப்பட்டன.

இதன் சுவையும், மணமும் எல்லோரையும் கவரவே இன்று உலகில் எல்லா இடங்களிலும் இப்பழ மரம் வளர்க்கப்படுகிறது. இதன் மணமும் சுவையும் எல்லோருக்கும் பிடித்திருப்பதால், இதனை ஜாம், ஜெல்லி மற்றும் ஐஸ்கிரீம், பழரசங்கள் செய்யப் பயன்படுத்துகிறார்கள்.

சிலர் நிறைய பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவார்கள். சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கமிருக்கும். அதிக அளவு டீ, காபி சாப்பிடுவர் சிலர். இன்னும் சிலருக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கும். இவர்கள் அனைவருக்குமே, இவற்றின் பாதிப்பு உடலில் ஏற்படாமலிருக்க பொட்டாசியம் சத்து அன்றாடம் தேவைப்படுகிறது.

ஏனெனில் இந்த சத்தினையும் உடலில் தேக்கி வைக்க முடியாது. எனவே தினமும் சாப்பிட வேண்டியுள்ள போது, இந்த சத்தினை நிறைய கொண்டிருக்கும் சீதாப்பழத்தை சாப்பிடலாமே!

Read More:

can prevent kidney stone formation?

கிழே  குறிப்பிட்ட  உணவுப் பழக்கங்களை பின்பற்றினால், சிறுநீரக கல் உருவாகும் நிலை தடுக்கப்படும்!