நீங்கள் தினசரி செய்ய வேண்டிய வேலைகளை (மனம் மற்றும் உடல் சோர்வினால் ) பிறகு செய்து கொள்ளலாம் என்று ஒதுக்காமல் முடிந்த வரை அப்பொழுதே செய்யப்பாருங்கள். ( அதிக நேரம் எடுத்தாலும் ).
பசியுணர்ச்சி இல்லாவிட்டாலும் அந்தந்த வேளைகளில் நல்ல சத்தான உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.
நாள்தோறும் சரியான நேரத்தில் படுக்கைக்கு சென்று, சரியான நேரத்தில் எழுந்து விடுங்கள்.
தூக்கம் வராவிட்டாலும் படுக்கையில் படுத்துக்கொண்டே புத்தகம் படித்துகொண்டோ, தொலைகாட்சி பார்த்துகொண்டோ இருங்கள்.
தூக்கம் வரவில்லை என்பதற்காக படுக்கையை விட்டு எழுந்து செல்லாதீர்கள்)
காலையில் விழித்தவுடன் உடனே எழுந்து விடுங்கள்.
உடல் மற்றும் மன அசதியினால், தூக்கத்தில் திருப்தி இல்லாத நிலை இருந்தாலும் கூட மேலும் படுக்கையில் படுக்காமல் உடனே எழுந்து விடுங்கள்.
இப்படி செய்தால் சில மணி நேரங்களில் நீங்கள் ஒருவாரான மனமலர்ச்சி அடைவீர்கள்.
அப்படி செய்யாமல் படுக்கையில், உறங்கினால், தூக்கமும் வராமல் மேலும் உடல் மற்றும் மனச்சோர்வை அடைவீர்கள்.
மனச்சோர்வு நோயால் ஏற்படும் தாம்பத்திய உறவுகளில் ஆர்வமின்மை நோய் குணமானவுடன் குணமாகும். எனவே இதைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.
மனச்சோர்வுக்கான சுய மருந்தாக மதுவைப் பயன்படுத்த வேண்டாம்.

அது மனச்சோர்வை அதிகரிக்கும்.
உங்கள் மனச்சோர்வுக்குக் காரணமான குடும்பப் பிரச்சனைகள், பணப் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இது நடைபயிற்சி அல்லது உங்களுக்கு பிடித்த விளையாட்டாக இருக்கலாம்.
மேலும் செய்ய வேண்டியது:
நீங்கள் உங்கள் மருத்துவரிடம் சென்று உங்கள் அறிகுறிகளைக் கூறினால், அவர் உங்களுக்கு மனச்சோர்வு உள்ளதா, அப்படியானால், அது எவ்வளவு தீவிரமானது என்பதைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிப்பார்.
Read More:
The Symptoms of Depression
மனச்சோர்வின் விளக்கம் மன அழுத்தம் உள்ளவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக இந்த தாள் தயார் செய்யப்பட்டுள்ளது.