Kidney stone problem
“Due to today’s diet, kidney stone problems have become commonplace for most people. The pain it causes is unmatched by any other pain in my experience.”
When I had lower back pain four years ago I first thought it was a gas problem, but the extent of the pain
It kept piling up and became unbearable. If you go to the doctor, he recommends a scan.
In the scan report the doctor told me that I have two kidney stones of 5mm and 9mm which can be removed only through surgery.
He also said that the medical expenses would be `30,000/-. Well, if you ask if after this surgery you will not have this problem again, there is no guarantee, it depends on your diet and the amount of water you drink daily.
I came home assuring that I’ll return tomorrow. So much so that since a friend of mine had the same problem, I have been consuming banana juice and banana extract regularly, but it seems that I have lost the habit of drinking water.
So surrendered to Google, after an hour of searching, a cured saint had published the name of the vegetable + the name of the liquid.
The name of the vegetable is French beans and the name of the liquid is water (what we drink at home everyday).
( ¼ ) quarter kg of French beans (available in all shops) for Rs.10, remove the seeds, boil in water (at least 2 hours), grind it well in a mixer and drink it, after 10 minutes, add 2 liters of water (if you can’t drink it in one go for a while It is better if you can drink more.
As soon as I drank this (at 5 pm), at 3 ½ in the morning (until then I was drinking water often, where to sleep in pain…) 5 small stones came out during urination.
The pain is excruciating until the stone reaches the urinary bladder through the small pipe from the kidney, and then until the urine comes out of the bladder, blocking the urinary tract, it becomes a story of urine coming…but not coming…
Instead of panicking, we should increase the amount of water we drink, as the bladder becomes full and the urination becomes uncontrollable.
Then, if we urinate with great pressure, it will come out. Because the stones do not have a SHAPE, they can tear and bleed internally, which will heal in a day.
The next day the eighth scan came back with a report that there were no stones.
Since then I have been taking this once a week and my stone problem is gone..its gone…
Let’s make sure that no more stones are formed. Drink up to 3 liters of water daily.
What are causes undeveloped breasts?
How to know Breast pain prevention?
How to know Causes of breast pain?
How to know types of Breast Pain?
‘இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்.
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans), திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு), விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும்.
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்.
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால், வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…
இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
Foods that prevent tooth decay
பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கும் உணவுகள்!