spoil the beauty of men
spoil the beauty of men
Listen to this article

7 things that spoil the beauty

Beauty is not only for women but also for men. But we think that beauty is only for women because women give more importance than men.

Because men don’t have proper time to maintain beauty. They are working tirelessly to bring the family to a better state. Also many people lose their beauty due to over-indulgence in work and responsibility.

Apart from that, the beauty of men is affected by many activities like smoking for style, sleeping to spoil the beauty in the name of sleep.

If these things continue for a long time, you will get the look of aging at a young age. It doesn’t often require makeup. It is enough to avoid the activities that spoil the beauty and use only a few beauty products.

Well, now read what are these beauty spoiling practices, correct them and look good in front of women.

Sleeping on the toilet

When sleeping on the side or stomach, the face is pressed against the pillow. By sleeping for such a long time, skin pores cannot breathe and wrinkles occur. So you should never sleep with your face pressed

Avoiding moisturizer

And men tend not to use moisturizer. Because some people don’t like to use it. If you avoid it because you don’t want to, then the skin will become dull and dry. So it is better to apply moisturizer daily before going to bed and after showering.

Soap

Men always use only face soap as they don’t use beauty products. If you use soap like this all the time, the skin will become dry and eventually wrinkles will appear. So it is better to avoid soap and buy and use face wash sold in stores for men.

Smoking

Everyone knows that smoking is bad for health. Moreover, it is a known fact that cancer will be caused by catching these. But smoking too much can affect your health and beauty.

That means lines on the skin and wrinkles around the mouth. So if you want to look beautiful, it is better to avoid them.

Mobile

A mobile phone is much dirtier than a toilet at home. Because the mobile can be said to be the home of bacteria. That size puts them in a lot of places, gets on a lot of people’s hands, and harbors countless bacteria.

When you talk on a cell phone that is full of such bacteria, the bacteria in it comes to the face and causes blackheads, acne and many other infections on the skin. So avoid keeping your mobile in plain sight.

dandruff

Men are more prone to dandruff as they move around a lot. Dandruff doesn’t just cause itching. It also affects the skin. Also, when the head itches, we put our hands on the head.

Then we put the same hands on the face. This causes many skin problems. So keep your scalp clean by using good anti-dandruff shampoos.

Sun light

Men are not bulletproof. How sun rays on women cause problems. Similarly, if it falls on men, there will be problems.

Men are the ones who go out in excess. During this cycle, excessive sun rays fall on the skin, causing skin cancer and many other infections.

So always apply sunscreen lotion half an hour before going out in the sun and then go. This protects the skin and prevents wrinkles.

How to know of Rheumatic Heart Disease?

How to know Symptoms of Skin Infections?

How to know symptoms of Vaginal Cancer?

How to know symptoms of Strep Throat?

How to know symptoms of Breast Cancer

ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்

அழகு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான். ஆனால், ஆண்களை விட பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அழகு என்பது பெண்களுக்கு மட்டுமே என்று நினைக்கிறோம்.

ஏனெனில் ஆண்களுக்கு அழகை பராமரிக்க சரியான நேரம் இல்லை. குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர அயராது உழைத்து வருகின்றனர். மேலும் வேலையில் அதிக நாட்டம் மற்றும் பொறுப்புணர்வு காரணமாக பலர் அழகை இழந்து விடுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஸ்டைலுக்காக புகைபிடிப்பது, தூக்கம் என்ற பெயரில் அழகை கெடுக்க தூங்குவது என பல செயல்களால் ஆண்களின் அழகு பாதிக்கப்படுகிறது.

இந்த விஷயங்கள் நீண்ட நாட்கள் தொடர்ந்தால், இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறுவீர்கள். இதற்கு அடிக்கடி மேக்கப் போடச் சொல்வதில்லை. அழகைக் கெடுக்கும் செயல்களைத் தவிர்த்துவிட்டு சில அழகு சாதனப் பொருட்களை மட்டும் பயன்படுத்தினால் போதும்.

சரி, இப்போது இது போன்ற அழகைக் கெடுக்கும் நடைமுறைகள் என்னவென்று படித்து, அவற்றைத் திருத்தி, பெண்களின் முன் அழகாக இருங்கள்.

குப்புற தூங்குவது
தூங்கும் போது பக்கவாட்டிலோ அல்லது குப்புறப் படுத்து தூங்குவதால், முகமானது தலையணையில் அழுத்தப்படுகிறது. இவ்வாறு நீண்ட நேரம் தூங்குவதால், சருமத்துளைகளால் சுவாசிக்க முடியாமல், சுருக்கங்கள் ஏற்படுகின்றது. ஆகவே எப்போதும் முகத்தை அழுத்தும்படியாக தூங்காமல் இருக்க வேண்டும்

மாய்ச்சுரைசரை தவிர்ப்பது
மேலும் ஆண்கள் மாய்ச்சுரைசரை பயன்படுத்தாமல் இருப்பார்கள். ஏனெனில் அதைப் பயன்படுத்துவதை சிலர் விரும்பமாட்டார்கள். விருப்பமில்லை என்பதற்காக அதை தவிர்த்தால், பின் சருமம் மென்மையிழந்து, வறட்சியடைந்துவிடும். எனவே தினமும் படுக்கும் முன்னும், குளித்தப் பின்னரும் மாய்ச்சுரைசரை தடவுவது நல்லது.

spoil the beauty


சோப்பு
ஆண்கள் அழகுப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என்பதற்காக எப்போதும் முகத்திற்கு சோப்பை மட்டுமே பயன்படுத்துவர். இவ்வாறு எப்போதும் சோப்பை பயன்படுத்தினால், சருமம் வறட்சியடைந்துவிடுவதோடு, நாளடைவில் சுருக்கங்களும் வந்துவிடும். ஆகவே சோப்பைத் தவிர்த்து, ஆண்களுக்கென்று கடைகளில் விற்கும் ஃபேஸ் வாஷ்ஷை வாங்கி, பயன்படுத்துவது நல்லது.

புகைப்பிடித்தல்
அனைவருக்குமே புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பது நன்கு தெரியும். அதிலும் இவற்றை பிடிப்பதால், புற்றுநோய் வரும் என்பதும் தெரிந்த விஷயமே. ஆனால் அந்த சிகரெட்டை அதிகம் பிடிப்பதால், உடல் ஆரோக்கியம் கெடுவதோடு, அழகும் தான் பாதிக்கப்படும்.

அதாவது சருமத்தில் கோடுகள் மற்றும் வாயைச் சுற்றிலும் சுருக்கங்கள் ஏற்படும். ஆகவே அழகாக காணப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டால், இவற்றை தவிர்ப்பது நல்லது.

மொபைல்
மொபைலானது வீட்டில் இருக்கும் டாய்லெட்டை விட மிகவும் அசுத்தமானது. ஏனெனில் அந்த மொபைலை பாக்டீரியாவின் இருப்பிடம் என்று சொல்லலாம். அந்த அளவு அவற்றை பல இடங்களில் வைப்பதோடு, நிறைய பேரின் கைகளுக்கு சென்று, எண்ணற்ற பாக்டீரியாவை அதில் வைத்திருக்கும்.

அத்தகைய பாக்டீரியா அதிகம் நிறைந்துள்ள மொபைலை காதுகளில் வைத்து பேசும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்திற்கு வந்து, கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் பல தொற்றுநோய்களை சருமத்தில் வரவழைக்கின்றன. ஆகவே மொபைலை எப்போதும் கண்ட இடங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

பொடுகு
ஆண்கள் பல இடங்களுக்கு சுற்றுவதால், தலையில் பொடுகு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு வரும் பொடுகு அரிப்பை மட்டும் உண்டாக்குவதில்லை. சருமத்தையும் பாதிக்கிறது. அதுவும் எப்படியெனில், தலை அரிக்கும் போது கைகளை தலையில் வைக்கிறோம்,

பின் அதேக் கைகளை முகத்திலும் வைக்கிறோம். இதனால் பல சருமப் பிரச்சனைகள் வருகின்றன. ஆகவே நல்ல ஆன்டி-டான்ட்ரப் ஷாம்புகளை பயன்படுத்தி, தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சூரியஒளி
ஆண்கள் ஒரு புல்லட் ப்ரூஃப் இல்லை. எப்படி பெண்களின் மீது சூரிய கதிர்கள் பட்டால் பிரச்சனைகள் வருகிறதோ. அதேப் போல் ஆண்களின் மீது பட்டாலும் பிரச்சனைகள் ஏற்படும்.

அதிலும் அளவுக்கு அதிகமாக வெளியே சுற்றுவது ஆண்கள் தான். அவ்வாறு சுற்றும் போது அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்கள் சருமத்தில் படுவதால், சரும புற்றுநோய்கள் வருவதோடு, பல தொற்றுநோய்களும் வரும்.

ஆகவே எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது, அரை மணிநேரத்திற்கு முன்னரே சன் ஸ்கிரீன் லோசனை தடவி, பின்னர் செல்ல வேண்டும். இதனால் சருமமானது பாதுகாக்கப்படுவதோடு, சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

Actions that kill sperm in men

ஆண்களின் ஸ்பெர்ம்களை கொல்லும் செயல்கள்.