Vitamins that solve the motherhood problem of women!
Studies have found that married women can conceive more easily by consuming nutrient-rich foods.
The researchers also said that women should not hesitate to take vitamin supplements.
There are many reasons for infertility in women. A recent study found that not getting enough vitamins in the body is also a major cause of infertility.
Studies also show that consuming nutritious vitamin-rich foods can help women conceive.
Fertility problem
58 women with infertility were studied. They were divided into two groups, one group was given vitamin tablets and the other group was given folic acid tablets. They were also provided with healthy and balanced meals for all of them.
At the start of the study, both groups of women had irregular menstrual cycles, the main cause of pregnancy.
At the end of the study, 60 percent of the women given the daily vitamins, or 18 out of 30, became pregnant, while only 25 percent of the women given the folic acid did.
Folic acid is a vitamin
The study also suggests that women taking vitamin pills are more likely to get pregnant faster than taking folic acid pills on their own.
Dr. Agarwal, who led the study, said that although folic acid is essential for pregnancy, the main feature of this study was that those who took the vitamin had a higher chance of becoming pregnant and had no side effects.
Vitamin C, B6
Researchers have also reported that women’s fertility problems are solved by consuming foods rich in vitamin C and vitamin B6. All the women who were subjected to this study were almost equal in terms of age, body weight, etc. Similarly, women who drink alcohol and smoke were not included in this study.
How to know symptoms of Breast Cancer
How to know symptoms of Lung Cancer?
How to know symptoms of Low Sperm Count?
பெண்களின் தாய்மை பிரச்சினையை தீர்க்கும் வைட்டமின்கள்!
திருமணமான பெண்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் எளிதில் கருத்தரிக்க முடியும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
பெண்கள் வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் எடுக்கத் தயங்கக் கூடாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
பெண்கள் மலட்டுத்தன்மைக்கு பல காரணங்கள் உள்ளன. உடலில் போதுமான வைட்டமின்கள் கிடைக்காததும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சத்தான வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது பெண்களுக்கு கருத்தரிக்க உதவும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருவுறுதல் பிரச்சினை
கருத்தரித்தலில் குறைபாடு உடைய 58 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு வைட்டமின் மாத்திரைகளும், மற்றொரு குழுவுக்கு ஃபோலிக் அமிலம் மாத்திரைகளும் அளிக்கப்பட்டன. கூடவே அவர்களுக்கு ஆரோக்கியமான, சமச்சீரான உணவுகளும் அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டன.
ஆய்வின் தொடக்கத்தில் இந்த இரண்டு குழுவில் இடம்பெற்ற பெண்களுக்கும் கர்ப்பத்திற்கு முக்கிய காரணமாக விளங்கும் மாதவிலக்கு சுழற்சி சீரான முறையில் இல்லாமல் இருந்தது.
ஆய்வின் முடிவில் தினமும் வைட்டமின்கள் வழங்கப்பட்ட பெண்களில் 60 சதவிகித பெண்கள் அதாவது 30 பேரில் 18 பேர், கர்ப்பம் தரித்தனர்.அதே சமயம் ஃபோலிக் அமிலம் கொடுக்கப்பட்ட பெண்களில் 25 சதவிகிதத்தினர் மட்டுமே கர்ப்பம் தரித்தனர்.
போலிக் அமிலம் – வைட்டமின்
பெண்கள் தாங்களாகவே ஃபோலிக் அமிலம் மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு கர்ப்பமடைய எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட, வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதினால் விரைவாக கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
ஃபோலிக் அமிலம் கர்ப்பம் தரிப்பதற்கு அவசியமான ஒன்றுதான் என்றாலும், அதைக்காட்டிலும் வைட்டமின் எடுத்துக்கொண்டவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதும், பக்கவிளைவுகள் இல்லாமல் இருப்பதும் இந்த ஆய்வின் முக்கிய அம்சம் என்று ஆய்வுக்கு தலைமை ஏற்ற டாக்டர் அகர்வால் தெரிவித்துள்ளார்.
வைட்டமின் சி, பி6
வைட்டமின் சி, வைட்டமின் பி6 உள்ள உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதன் மூலம் பெண்களின் கருவுறுதல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் அனைவருமே வயது,உடல் எடை போன்றவற்றில் ஏறக்குறைய சமமானவர்களாகவே இருந்தனர்.அதேப்போன்று மது அருந்தும் மற்றும் புகைக்கும் பெண்களும் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More:
Some tips to have a healthy delivery
சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்…