Sex is our shield
Sex is our shield
Listen to this article

Sex is our protective shield!

A recent report by experts involved in the study of sex has encouraged couples. Wedding

According to the study, all the nerves and cells in the body are rejuvenated through intercourse and the chance of cancer can be reduced through marital intercourse.

Heart disease is prevented by:

In their report, they noted that endorphins, which are released at the peak of sex, help digest food, remove wrinkles from the body, and rejuvenate the skin.

According to the report, the body becomes stronger through marital relationship and the chances of heart diseases are reduced. People living in most countries of the world, not just India, have misconceptions about the relationship between the heart and sex. However, experts who have studied say that sex does not affect a healthy heart

In fact, happily engaging in sex with like-minded people can save you from the risk of heart attack. In that way, sex acts as a protective shield for us. Let’s see how in detail.

How many stages in a relationship?

Researchers have divided the events of the relationship into the rising stage, the rebellious stage, the peak stage, and the rebound stage. During these four stages, the heart undergoes a variety of healthy changes, they say.

Cardiologists who have studied the causes of heart attacks have divided them into three categories. That is, lack of adequate exercise for the heart, excess body weight and autism are the main reasons. They solemnly say that sex has the power to overcome these three causes.

A couple’s age is closely related to the physiological changes that occur in their bodies. Although all the physiological changes that occur during marriage are the same, the time taken for this and the nature of the relationship may vary from person to person.

Physiological changes

A couple in their twenties goes through more physiological changes than other couples. Being on the brink of puberty, the sympathetic nervous system in the body becomes over-active and not only the blood pressure rises but also the heart rate multiplies.

Blood pressure levels can rise as high as 220/110 during climax. Within a couple of minutes of peaking, the blood pressure returns to normal.

Similarly, at the peak of sexual intercourse, the heart beats at a rate of about 180 beats per minute. But doctors say that within a minute of recovery from the peak, the heart rate returns to its old level.

Changes in heart rate and blood pressure during intercourse in older adults are smaller than physiological changes in younger couples.

Exciting exercise

The results of various studies suggest that intercourse is the best form of exercise that has many benefits for the body. The movements that occur during intercourse not only strengthen the muscles in that area but also the muscles in the spine.

In addition, bony structures such as small spines in the spinal cord are prevented from undergoing degenerative changes.

Experts have said that these are proven facts and the possibility of minor ailments such as colds and body aches is also reduced due to sex. They also report that bones and muscles also get stronger.

As more calories are digested, unwanted fats are burned and body fat is prevented. Either way, there is no doubt that lovers will definitely appreciate this exciting workout.

Sex is our protective shield

How to know of Rheumatic Heart Disease?

How to know Symptoms of Skin Infections?

How to know symptoms of Vaginal Cancer?

How to know symptoms of Strep Throat?

How to know symptoms of Breast Cancer

செக்ஸ் நமக்கு பாதுகாப்புக் கவசம்!

பாலியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள நிபுணர்களின் சமீபத்திய அறிக்கை தம்பதியினரை உற்சாகப்படுத்தியுள்ளது. திருமணம்

உடலுறவின் மூலம் உடலில் உள்ள அனைத்து நரம்புகள் மற்றும் செல்கள் புத்துணர்ச்சி பெறுவதாகவும், தாம்பத்திய உறவின் மூலம் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதய நோய் தடுக்கப்படுகிறது:

உடலுறவின் போது உச்சக்கட்டத்தில் வெளியாகும் எண்டோர்பின்கள், உணவு செரிமானம் ஆவதோடு, உடலில் உள்ள சுருக்கங்களை நீக்கி, சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்வதாக அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

தாம்பத்திய உறவின் மூலம் உடல் வலுவடைவதோடு, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகளில் வாழும் மக்கள் இதயத்திற்கும் பாலினத்திற்கும் இடையிலான உறவைப் பற்றி தவறான எண்ணங்களைக் கொண்டுள்ளனர். ஆனால், உடலுறவினால் ஆரோக்கியமான இதயம் பாதிக்கப்படாது என்பது குறித்து ஆய்வு செய்த வல்லுனர்கள் உறுதியாக கூறுகின்றனர்

உண்மையில் ஒத்த மனத்துடன் உடலுறவில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதால் மாரடைப்பு ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அந்த வகையில் உடலுறவு என்பது நமக்கான பாதுகாப்புக் கவசமாகவே செயல்படுகிறது. எப்படி என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

உறவில் எத்தனை நிலைகள்?

உறவின் நிகழ்வுகளை எழுச்சி நிலை, கிளர்ச்சி நிலை, உச்ச நிலை, மீள் நிலை என ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர். இந்த நான்கு நிலைகனிலும், இதயமானது பலவகையான ஆரோக்கியமான மாற்றங்களை அடைவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்புக்கான காரணங்களை ஆராய்ந்த இதய மருத்துவர்கள் அவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அதாவது இதயத்துக்குப் போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உடலின் எடை அதிகமாதல், மன இறுக்கம் ஆகியவைதான் அடிப்படையான காரணங்கள். இந்த மூன்று காரணங்களையும் வெல்லக்கூடிய ஆற்றல், உடலுறவுக்கு உண்டு என ஆணித்தரமாகக் கூறுகிறார்கள்.

தம்பதிகளின் வயதுக்கும், அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்களுக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தாம்பத்யத்தின் போது ஏற்படும் உடலியல் மாற்றங்கள் யாவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இதற்காக எடுத்துக் கொண்ட நேரம் உறவின் தன்மை போன்றவை ஒவ்வொருவருக்கும் மாறுபடக்கூடும்.

உடலியல் மாற்றங்கள்

Sex is our protective shield

தம்பதியர்களின் வயது இருபதாக இருந்தால் அவர்களின் உடலில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் மற்ற தம்பதியர்களைவிட அதிகமாக இருக்கும். இளமையின் விளிம்பில் இருப்பதால் உடலில் உள்ள பரிவு நரம்பு அமைப்பு அளவுக்கு அதிகமாகச் செயல்பட்டு ரத்த அழுத்தத்தின் அளவு உயர்வதோடு அல்லாமல் இதயத்துடிப்பின் அளவும் பன்மடங்கு அதிகமாகிறது.

உச்சக்கட்ட உறவின் போது ரத்த அழுத்தத்தின் அளவானது 220/110 என்ற அளவுக்கு உயரும். இவ்வாறு உச்ச நிலைக்குச் சென்ற ஓரிரு நிமிடங்களில் மறுபடியும் சாதாரண ரத்த அழுத்த நிலைக்கு மீள்கிறது.

இதுபோல் உடலுறவின் உச்சநிலையில் ஒரு நிமிடத்துககு இதயம் சுமார் 180 என்ற அளவுக்கு மிகவும் வேகமாகத்துடிக்கும். ஆனால் உச்ச நிலையில் இருந்து மீண்ட ஒரு நிமிடத்துக்குள் இதயத்துடிப்பானது பழைய நிலைக்கு திரும்பிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வயதானவர்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடும்போது இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் இளம் வயது தம்பதிகள் ஈடுபடும்போது ஏற்படும் உடலியல் மாற்றங்களைவிடக் குறைவானவே இருக்கும்.

Sex is our protective shield

உற்சாகமான உடற்பயிற்சி

பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள், தாம்பத்ய உறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றன. உறவின் போது ஏற்படும் அசைவுகளினால் அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன.

அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முட்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.

இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகளே என நிபுணர்கள் தெரிவித்துள்ளதோடு உடலுறவினால் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும் வாய்ப்பும் குறைகிறதாம். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட வலிமை கூடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக கலோரிகள் கரைக்கப்படுவதால் தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் குண்டாவதும் தடுக்கப்படுகிறது. எது எப்படியோ, இந்த உற்சாகமான இந்த உடற்பயிற்சியினை காதலர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

Some tips to have a healthy delivery

சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்… கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும்.