To Read this Post , Use Translator for Your language

How to know Foods that prevent tooth decay - healthtamil.com
Foods that prevent tooth decay
Foods that prevent tooth decay
Listen to this article

Foods that prevent tooth decay!

One of the most common dental problems that everyone has is wisdom teeth. It has no age. From small children to adults, many people suffer from this problem.

There are many reasons why wisdom teeth come in like this. The most important thing is that eating a lot of sweets can easily attack the teeth.

So to keep your teeth healthy, brush your teeth twice a day and rinse your mouth with water after every meal.

It is well known that some foods are good for teeth and some foods are bad. Also, if the teeth do not have enough nutrients, the teeth are easily attacked by germs.

So they should eat foods rich in fiber and calcium to give them strength. Now let’s see some foods that fight germs without causing any harm to teeth!!!

Sweet fruits…

If you eat fruits like grapes and peaches, they get stuck in the cavities of the teeth and the sweets in them stay in the cavities and cause damage.

So then you should eat fruits that are less sweet and foods that are high in fiber. This will keep the teeth healthy. For example, you can eat cucumber.
Fibrous vegetables

Some vegetables contain more fiber than other foods. Especially carrots and green leafy vegetables are rich in fiber. These prevent denting of the property.
Cereals

Even unrefined grains are good for teeth. In particular, whole grains like rye, sorghum and brown rice are also great for fighting tooth decay.

Raisins
Raisins contain some flavonoids and photophenol, which can control the germs that cause bad breath. In the end any property will be dented.

Seafood
Seafood such as prawns and oysters are rich in calcium and phosphorus. They make the teeth strong and protect them from germs.

Unsweetened chewing gum
Chewing gum in general can be very damaging to the teeth. But while chewing them like that, some acids are produced in the mouth. Thus they form a large protective film for the teeth. So it is better to eat unsweetened chewing gum.

Mint leaves
Mint in general is a natural disinfectant. So after eating any sweets, if you immediately put some mint leaves in your mouth and chew them, the germs will not stay in the teeth. Dental problems need special attention: Cancer is more likely

Tooth is an important organ in the body. If a minor problem occurs in the teeth, it affects not only the teeth but other parts of the body.

A common dental problem is tooth decay. It needs to be treated at an early stage, otherwise it can affect the entire tooth.

Sometimes the tooth breaks in two. Then, the fractured tooth, tongue and cheek area will be punctured. It can turn into cancer.

Dental caries can be treated with root canals and ceramic dentures can be implanted. The next dental problem is pulpitis.

Wearers should not use it 24 hours a day. Wear only fifteen hours a day. You must take it off before going to bed at night.

Continuous wear can damage the barrier bone. There are billions of bacteria in our mouth. If the food stuck in the teeth is not cleaned properly, bad breath and gum problems will occur. Bacteria can spread to the stomach and other organs through saliva.

This causes red eyes, skin rashes and joint pain. Clean the mouth thoroughly with water after every meal. If the teeth are good, the body will be healthy.

The beauty of the face is the pearly teeth. If those teeth are not brushed properly, they are eroded by bacteria and decay. Especially nowadays many people are losing their teeth at a young age.

How to know types of Breast Pain?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கும் உணவுகள்!

அனைவருக்கும் இருக்கும் பொதுவான பல் பிரச்சனைகளில் ஒன்று ஞானப் பற்கள். அதற்கு வயது இல்லை. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.

இவ்வாறு சொத்தைப் பற்கள் வருவதற்கு வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான விஷயம் நிறைய இனிப்புகளை சாப்பிடுவதால் பற்கள் எளிதில் கிருமிகளால் தாக்கப்படும்.

எனவே உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கி, ஒவ்வொரு உணவிற்கும் பிறகு உங்கள் வாயை தண்ணீரில் கழுவவும்.

சில உணவுகள் பற்களுக்கு நல்லது, சில உணவுகள் கெட்டது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும், பற்களில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால், பற்கள் எளிதில் கிருமிகளால் தாக்கப்படும்.

எனவே அவர்களுக்கு வலிமை அளிக்க நார்ச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். இப்போது பற்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கிருமிகளை எதிர்த்துப் போராடும் சில உணவுகளைப் பார்ப்போமா!!!

இனிப்பில்லாத பழங்கள்….

திராட்சை மற்றும் பீச் போன்ற பழங்களை சாப்பிட்டால், அவை பற்களின் துவாரங்களில் சிக்கிக் கொண்டு, அதில் உள்ள இனிப்புகள் துவாரங்களில் தங்கி கேடு விளைவிக்கும்.

ஆகவே அப்போது இனிப்புகள் குறைவாக உள்ள பழங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். உதாரணமாக வெள்ளரிக்காயை சாப்பிடலாம்.
நார்ச்சத்துள்ள காய்கறிகள்

மற்ற உணவுப் பொருட்களை விட சில காய்கறிகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கும். அதிலும் கேரட், பச்சை இலைக்காய்கறிகள் போன்றவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சொத்தைப் பற்கள் ஏற்படாமல் தடுக்கும்.
தானியங்கள்

சுத்திகரிக்கப்படாமல் இருக்கும் தானியங்கள் கூட பற்களுக்கு சிறந்தது. அதிலும் சொரசொரப்பான தானியங்களான கம்பு, சோளம் மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவை கூட பற்களில் ஏற்படும் சொத்தைகளை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.


உலர் திராட்சைகள்
உலர் திராட்சைகளில் ஒரு சில ப்ளேவோனாய்டுகள் மற்றும் போட்டோபீனால் இருப்பதால், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளை கட்டுப்படுத்தும். இறுதியில் எந்த சொத்தைப் பற்கள் வராமல் இருக்கும்.

கடல் உணவுகள்
கடல் உணவுகளான இறால், கடல் சிப்பிகள் போன்றவற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை பற்களை வலுவாக்கி, கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கின்றன.


இனிப்பில்லாத சூயிங் கம்
சாதாரணமாக சூயிங் கம் பற்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அவ்வாறு அவற்றை மெல்லும் போது வாயில் ஒருசில அமிலங்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அவை பற்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பு படலத்தை உண்டாக்குகின்றன. ஆகவே அதற்கு இனிப்பில்லாத சூயிங் கம்மை சாப்பிட்டால் நல்லது.

புதினா இலைகள்
பொதுவாக புதினா ஒரு இயற்கை கிருமிநாசினி. ஆகவே எந்த ஒரு இனிப்புகளை சாப்பிட்டாலும், உடனே சில புதினா இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், பற்களில் கிருமிகள் தங்காமல் இருக்கும். பல் பிரச்னைக்கு சிறப்பான கவனம் தேவை: புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்

உடலில் உள்ள முக்கிய உறுப்பு பல். பற்களில் சிறு பிரச்னை ஏற்பட்டால், அது பற்களை மட்டும் இல்லாமல் உடலில் உள்ள மற்ற உறுப்புகளை பாதிக்கும்.

பல்லில் ஏற்படும் பொதுவான பிரச்சனை சொத்தை. இதற்கு ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் அது பல் முழுதையும் பாதிக்கும்.

சிலசமயம் பல் இரண்டாக உடைந்து போகும். அப்போது, உடைந்த கூறான பல், நாக்கு மற்றும் கன்னப் பகுதியில் குத்தி காயம் ஏற்படும். இது புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உண்டு.



பல் சொத்தையை வேர் வைத்தியம் செய்து, செராமிக் செயற்கை பல்லை பொருத்தலாம். பல்லின் அடுத்த பிரச்சனை பல்செட்.

இதை அணிபவர்கள் இருபத்து நாலு மணிநேரமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் மட்டுமே அணியணும். இரவு படுக்கும் போதும் கண்டிப்பாக கழட்டணும்.

தொடர்ந்து அணிவதால் தடை எலும்பில் பாதிப்பு ஏற்படும். நம் வாயில் பலகோடி பாக்டீரியாக்கள் உள்ளன. பல் இடுக்கில் சிக்கிக் கொள்ளும் உணவுகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துற்நாற்றம், ஈறு பிரச்னை ஏற்படும். பாக்டீரியாக்கள் எச்சில் மூலமாக வயிற்றுக்கும் மற்ற உறுப்புக்கும் பரவும்.

இதனால் கண்கள் சிவப்பாகும், சருமத்தில் தேமல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பல் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


முகத்திற்கு அழகு முத்துபோன்ற பற்கள் தான். அந்த பற்களை உரியமுறையில் பேணா விட்டால், பாக்டீரியாக்களால் அரிக்கப்பட்டு சிதைந்து போய் விடுகின்றன. குறிப்பாக தற்போது இளம் வயதிலேயே பலர் பற்களை பறிகொடுத்து வருகின்றனர்.

Read More:

Some eating habits for a healthy baby

ஆரோக்கியமான குழந்தைக்கு சில உணவு பழக்கங்கள்…