To Read this Post , Use Translator for Your language

How to know symptoms of colon cancer? - healthtamil.com
What are symptoms of colon cancer?
What are symptoms of colon cancer?
Listen to this article

What are the symptoms of colon cancer?

Cancer has the power to destroy every organ in the body, says Dr. Raja, an oncologist at Apollo Hospitals.

Here he himself explains about cancer symptoms and their nature… Cancer affects all organs like stomach, throat, breast, liver, intestines… There are many causes of this disease.

They depend on the organ affected by the cancer. Improper diet is the main cause of colon and rectal cancer. This cannot be the only reason.

Many factors such as genetics and heredity are responsible for the appearance of cancer. Cancer is usually curable with drugs if it is detected at an early stage.

But when the symptoms appear in the advanced stage of the disease, the chance of recovery is very low. The reason is that if they have colon cancer, they will be constipated.

But this problem is very common. They fail to seek the advice of a doctor because of stomach problems and constipation. If cancer is diagnosed later, the stage cannot be controlled by drugs.

Surgery can be partially controlled with radiation and chemotherapy. Although bowel cancer is a common name, it varies from person to person. Everyone’s germs vary depending on their physical condition and genetics.

But, currently we are following treatment methods like medicine, radiation and chemotherapy.

At the same time, depending on the nature of the disease, although there are some changes in the medicine pills and the treatment method, individual pills cannot be given to everyone.

But there is no doubt that the next decade will see many changes in the field of medicine. Early detection of cancer is extremely rare.

That’s because even when our body changes, we ignore them. After the disease germs spread in the body, we seek the help of a doctor. If colon cancer is affected, there will be difficulty in defecation.

Bleeding during stool. If you have problems like constipation, pain while passing stool, sudden weight loss, it is important to consult a doctor immediately and get checked. This is what he said.

How to know of Rheumatic Heart Disease?

How to know Symptoms of Skin Infections?

How to know symptoms of Vaginal Cancer?

How to know symptoms of Strep Throat?

How to know symptoms of Breast Cancer

குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன?

உடல் உறுப்புகள் அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் புற்றுநோய்க்கு உண்டு என்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ராஜா.

புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் அவற்றின் தன்மை குறித்து அவரே இங்கு விளக்குகிறார்… புற்றுநோய் வயிறு, தொண்டை, மார்பகம், கல்லீரல், குடல் என அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது… இந்த நோய்க்கு பல காரணங்கள் உள்ளன.

அவை புற்றுநோயால் பாதிக்கப்படும் உறுப்பைப் பொறுத்தது. முறையற்ற உணவு முறையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்க்கு முக்கிய காரணம். இதை மட்டுமே காரணம் என்று கூற முடியாது.

மரபணு, பரம்பரை போன்ற பல காரணிகள் புற்று நோய் தோன்றுவதற்குக் காரணம். பொதுவாக, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் மருந்துகளால் குணப்படுத்த முடியும்.

ஆனால் நோயின் முற்றிய நிலையில் அறிகுறிகள் தென்படும் போது, ​​குணமடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. காரணம், அவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருந்தால், அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.

colon cancer

ஆனால் இந்த பிரச்சனை மிகவும் பொதுவானது. வயிற்றில் பிரச்சனை வந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும் என்பதால் மருத்துவரின் ஆலோசனையை பெற தவறிவிடுகிறார்கள். பின்னர் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அந்த நிலையில் மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாது.

கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி மூலம் அறுவை சிகிச்சையை ஓரளவு கட்டுப்படுத்தலாம். குடல் புற்றுநோய் என்பது பொதுவான பெயர் என்றாலும், இது நபருக்கு நபர் மாறுபடும். ஒவ்வொருவருடைய நோய்க் கிருமிகளும் அவரவர் உடல் நிலை மற்றும் மரபணுக்களைப் பொறுத்து மாறுபடும்.

 ஆனால், தற்போது மருந்து, கதிர்வீச்சு, கீமோதெரபி போன்ற சிகிச்சை முறைகளையே பின்பற்றி வருகிறோம்.

அதே சமயம் நோயின் தன்மைக்கேற்ப மருந்து மாத்திரைகளிலும், சிகிச்சை முறையிலும் சில மாற்றங்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி மாத்திரைகள் கொடுக்க முடியாது.

colon cancer

ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் மருத்துவத் துறையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் அரிது.

அதற்குக் காரணம், நம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அவற்றைப் புறக்கணிக்கிறோம். நோய் கிருமிகள் உடலில் பரவிய பிறகு, மருத்துவரின் உதவியை நாடுகிறோம். குடல் புற்றுநோய் பாதிக்கப்பட்டால், மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.

மலத்தின் போது இரத்தப்போக்கு. மலச்சிக்கல், மலம் கழிக்கும் போது வலி, திடீரென எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Attention of breastfeeding mothers!

தாய்ப்பால் கொடுப்பவர்கள் கவனத்திற்கு! 

Does the child want to be smart?

குழந்தை புத்திசாலி ஆக வேண்டுமா?