What is the cure for ulcers?
There are old people..like small children, they are always holding biscuits etc. in their hands and eating.
Say ulcer if asked. People with ulcers should not keep the stomach empty. You should eat something more often.
What is an ulcer? Our stomach has a delicate membrane to protect it. Digestive water is secreted and digested with food. If the food is too spicy, sour or salty, it can irritate the thyroid system.
Small ruptures of the membrane can cause direct damage to the stomach or intestines. This is due to abdominal pain, sour belching, heartburn, indigestion in the throat. It is an ulcer.
Why do ulcers occur?
The first reason is not eating on time, skipping breakfast, postponing lunch, drinking coffee and tea frequently to fill the stomach.
Many people have the habit of taking pills immediately for a simple headache or fever. Any problem like this by itself and taking pills frequently will inevitably lead to ulcers. The reason for this is taking very powerful antibiotics.
We see a doctor for some ailment. The doctor will prescribe an antibiotic. When giving antibiotics, it is necessary to give a tablet containing B-complex and Lactobacillus. Some doctors do not do this.
Even though doctors have prescribed it, there are people who say they don’t need nutritional pills and buy antibiotics only. Many of you have felt stomach ache and chest irritation after taking certain types of medicine.. this is the reason.
Too much coffee, tea, fast food items, cigarettes, cola drinks, pickles, spicy foods…all these are causes of ulcers! Some people take medication over time for certain problems like arthritis.
Tablets can be a little strong. There should be food accordingly. Otherwise, it can lead to ulcers. Rarely, ulcers can also be hereditary in some people. Often there are emotional ulcers.
Weight loss, anemia, vomiting… all these can be symptoms of ulcer. If any symptoms persist daily, see a doctor immediately. Ulcers can be completely cured. There are treatments to get rid of it.
Not to come…? Timely meals and balanced meals – both are important. Reduce anger. Tips for Ulcer sufferers… Avoid high fiber foods. You can eat it by making instant rice porridge, aval and borila porridge.
Even greens and vegetables should be boiled, mashed and eaten. You can add more buttermilk instead of milk. Do not drink strong coffee or tea. Too much talib, sweets, fried foods, semi-ripe and unripe fruits, green vegetables (including onion, cucumber), ginger, garam masala, spicy gravies – all these should be avoided.
You can eat three times a day without stuffing your nose, eat little and often. Bite into anything, chew well and eat patiently. Just like telling people with diabetes, people with ulcers… should not feast… should not fast!
How to know to protect kidney?
How to know most common breast problem
Way and Mode of Breastfeeding
How to know Diets for Kidney Stones Patients?
What are benefits in breast milk?
வயசுல பெரியவங்களா இருப்பாங்க..சிறு குழந்தைகளைப் போல் எப்போதும் பிஸ்கட் போன்றவற்றை கையில் வைத்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.
கேட்டால் அல்சர் என்று சொல்லுங்கள். அல்சர் உள்ளவர்கள் வயிற்றை காலியாக வைக்கக்கூடாது. நீங்கள் அடிக்கடி ஏதாவது சாப்பிட வேண்டும்.
அல்சர் என்றால் என்ன? நமது வயிற்றைப் பாதுகாக்க ஒரு மென்மையான சவ்வு உள்ளது. செரிமான நீர் உணவுடன் சுரக்கப்பட்டு ஜீரணமாகிறது. உணவு மிகவும் காரமான, புளிப்பு அல்லது காரம் இருந்தால், அது தைராய்டு அமைப்பை எரிச்சலூட்டும்.
சவ்வு வில் ஏற்படும் சிறிய சிதைவுகள், வயிறு அல்லது குடலுக்கு நேரடி சேதம் ஏற்படும். இதற்குக் காரணம் அடிவயிற்று வலி, புளிப்பு ஏப்பம், நெஞ்செரிச்சல், தொண்டையில் செரிக்கப்படாத உணர்வு. இது ஒரு அல்சர்.
முதல் காரணம், சரியான நேரத்தில் சாப்பிடாதது, காலை உணவைத் தவிர்ப்பது, மதிய உணவைத் தள்ளிப் போடுவது, வயிற்றை நிரப்ப அடிக்கடி காபி, டீ குடிப்பது.
சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம்.
ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பி-காம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை.
டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், ‘சத்து மாத்திரை வேணாம்’னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க.. காரணம் இதுதான்.
அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்… இதெல்லாமும் அல்சருக்கு காரணம்! மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர்.
மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.
எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி… இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு.
வராம இருக்க…? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு – ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும். அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்… நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம்.
கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி- இதெல்லாம் அறவே தவிர்க்கணும்.
மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும். நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்… விருந்தும் கூடாது… விரதமும் கூடாது!
Read More:
Some tips to have a healthy delivery
சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்… கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும்.