To Read this Post , Use Translator for Your language

How to know water age expiry? - healthtamil.com
Does water age expiry?
Does water age expiry?
Listen to this article

Does water age expiry?

Everyone knows that ‘water does not spoil’. But is only water sold in bottles and cans marked with an expiry date?

As long as you don’t open the bottled water, it’s harmless. However, its taste is constantly changing. If not sealed properly, its plastic bottle will make the water taste bad.

Exposure to sunlight can also cause changes in plastic, causing it to deteriorate and change the taste of water. That is why it is said that if you buy water in bottles and cans, you should keep it in a place where it does not get wet or exposed to sunlight, and there should not be any paint, fuel or drying chemicals near it.

Once the bottle is opened, it should be used within a maximum of 1 week. Otherwise there is a risk that algae and bacteria will start to grow and affect the health of the drinker. It doesn’t mean that you can keep unopened water bottles for any number of days. Expiry date is marked on water bottles because it also has an expiry date.

60 percent of ‘water cans’ supplied to households are substandard.

Doctors have warned that drinking such substandard water can lead to pneumonia and lung damage.

With the onset of summer, the thirst for water also increases. Many people have the habit of drinking water, cold drinks, buttermilk etc. when they are thirsty.

Cold drinks and buttermilk sold unsanitarily on roadsides cause many people to suffer from hoarseness, cough and cold during hot season.

Regarding the prevention of such throat problems during hot weather, Dr. Ilango, Tamil Nadu Branch President of Public Health Association of India and former Director of Public Health Department of Tamil Nadu said:

Especially in urban areas, 20 liter ‘wadan cans’ are used for drinking water. Many people think that buying drinking water in cans is hygienic.

But that is completely wrong. For example, water cans are supplied from Kanchipuram district to Chennai and its suburbs. Except for a few establishments, many of them have the ISI-specific label, but the water supply does not meet the standards specified by the World Health Organization.

In fact, 60 percent of 100 percent of ‘water cans’ are defective.

By drinking such substandard water cans continuously, our body gets matured to accept certain water.

But all of a sudden, when you eat cold drinks, buttermilk, borehole, well water ice cream etc. in some place or at a relative’s or friend’s house, you get an allergy in your throat.

Due to this, children to adults suffer from hoarse throat, cold, fever etc. There is a risk that it can turn into a pneumonia infection and affect the lungs.

The World Health Organization has warned that pneumonia caused by a lung infection can become a life-threatening infection that does not respond to any medication.

And in the past few months, it has been revealed that most of the deaths in India, from children to adults, are due to respiratory infections.

We should make it a habit to drink distilled water in any season be it winter or summer to protect ourselves from pneumonia which affects the lungs.

People who suffer from hoarseness should be examined by an ear, nose and throat (ENT) doctor.

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

How to know Diets for Kidney Stones Patients?

What are benefits in breast milk?

தண்ணீருக்குமா வயதாகும்?

தண்ணீர் கெடாது’ என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பாட்டில்கள் மற்றும் கேன்களில் விற்கப்படும் தண்ணீரில் மட்டும் காலாவதி தேதி குறிப்பிடப்படுகிறதா?

நீங்கள் பாட்டில் தண்ணீரைத் திறக்காத வரை, அது பாதிப்பில்லாதது. இருப்பினும், அதன் சுவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. சரியாக மூடப்படாவிட்டால், அதன் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை மோசமாக சுவைக்கும்.

சூரிய ஒளியின் வெளிப்பாடு கூட பிளாஸ்டிக்கில் மாற்றங்களை ஏற்படுத்தும், இது மோசமடைவதற்கும் நீரின் சுவையை மாற்றுவதற்கும் காரணமாகிறது. அதனால்தான் பாட்டில், கேன்களில் தண்ணீர் வாங்கினால் ஈரம் படாத, சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன் அருகில் பெயிண்ட், எரிபொருட்கள், உலர்த்தும் ரசாயனங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்றும் கூறப்படுகிறது.

பாட்டிலைத் திறந்தவுடன், அது அதிகபட்சம் 1 வாரத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் பாசிகள் மற்றும் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பித்து குடிப்பவரின் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது. திறக்கப்படாத தண்ணீர் பாட்டில்களை எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்று அர்த்தமில்லை. தண்ணீர் பாட்டில்களில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டுள்ளது, ஏனெனில் அதற்கு காலாவதி தேதியும் உள்ளது.

வீடுகளுக்கு வழங்கப்படும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தரமற்றவை.

இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா நோய் தாக்கி நுரையீரல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடை காலம் துவங்கியுள்ளதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கும் பழக்கம், குளிர்பானம், மோர் போன்றவற்றை கடைகளில் குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது.

சாலையோரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் குளிர் பானங்கள் மற்றும் மோர் காரணமாக வெயில் காலத்தில் பலருக்கு சப்தம், இருமல், சளி போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன.

வெயில் காலங்களில் இதுபோன்ற தொண்டை பிரச்சனைகள் வராமல் தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவரும், தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:

குறிப்பாக நகர்ப்புறங்களில், குடிநீருக்காக, 20 லிட்டர் ‘வாடன் கேன்’களை பயன்படுத்துகின்றனர். கேன்களில் குடிநீரை வாங்குவது சுகாதாரமானது என்று பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் அது முற்றிலும் தவறானது. உதாரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தண்ணீர் கேன்கள் சப்ளை செய்யப்படுகிறது. ஒரு சில நிறுவனங்களைத் தவிர, அவற்றில் பலவற்றில் ஐஎஸ்ஐ-குறித்த முத்திரை உள்ளது, ஆனால் தண்ணீர் விநியோகம் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்ட தரத்தை பூர்த்தி செய்யவில்லை.

உண்மையில், 100 சதவீத ‘தண்ணீர் கேன்’களில் 60 சதவீதம் தரமற்றவை.

இதுபோன்ற தரமற்ற தண்ணீர் கேனை தொடர்ந்து குடிப்பதால், குறிப்பிட்ட தண்ணீரை ஏற்கும் பக்குவம் நம் உடல் பெறுகிறது.

ஆனால் திடீரென்று கோடை வெயிலில் குளிர்பானம், மோர், ஆழ்துளை, கிணற்று நீரில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் போன்றவற்றை ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர் வீட்டில் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.

இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலை பாதிக்கும் அபாயம் உள்ளது.

நுரையீரல் தொற்றினால் ஏற்படும் நிமோனியா, எந்த மருந்துக்கும் பதிலளிக்காத உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றாக மாறும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

water age expiry

மேலும் கடந்த சில மாதங்களில் இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் உயிரிழப்பது சுவாச நோய்த்தொற்றுகளால் தான் என்பது தெரியவந்துள்ளது.

நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள குளிர்காலம், கோடை காலம் என எந்தக் காலத்திலும் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரைக் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

கரகரப்பினால் அவதிப்படுபவர்கள் காது, மூக்கு மற்றும் தொண்டை (ENT) மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.

Read More:

what is Gallbladder Stones?

பித்தப்பைகற்கள் (Gallbladder Stones) முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம்.