To Read this Post , Use Translator for Your language

How to know to child is born intelligent? - healthtamil.com
child is born intelligent
child is born intelligent
Listen to this article

We can definitely create an environment where the child is born intelligent.

It’s time for smarts! Having a smart and healthy baby is every parent’s dream! A mother’s diet is good for the baby’s health during pregnancy; But to what extent does it determine a child’s intelligence?

The brain begins to develop on day 20 of conception, and by day 28 all the basic work is done for what the baby will be like for the rest of its life. Therefore, it is essential for a woman to take a healthy diet before getting pregnant

They have now discovered that. We can decide for ourselves how to give birth to a small baby.

“A child’s intelligence and activeness depends on the health it receives during the first month. Diabetes during pregnancy, fluctuations in the thyroid gland, lack of proper nutrition… all these can hinder the brain development of the child. Rubella is a virus that can affect brain development. At 15th month after birth, a female child should be given a preventive injection called ‘Rubella Vaccination’.

Also the same vaccination should be given again at her 15th birthday. This will give the child’s body strength to fight rubella. Later, when she grows up and becomes pregnant, all this progress is to ensure that the brain of the fetus is well developed! Rubella vaccine has not been made mandatory in India yet. Many of us do not know that there is a special vaccine for girls.

A child infected with the rubella virus is more likely to have a small head. Decreased eyesight. The communication function between the cranial nerves is reduced.

The brain, which begins to develop in the twenty-day-old fetus, is almost 95 percent developed by the age of seven. The reason for forcing the baby to give breast milk after birth is because the protein in it contains nutrients that stimulate the brain to work faster. A study in Hungary has found that babies born to mothers who listen to music have faster brain development and higher cognitive abilities.

We cannot decide whether the child to be born is a boy or a girl. But, boy or girl… we can definitely create the environment for that child to be born smart!

child is born intelligent

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

How to know Diets for Kidney Stones Patients?

What are benefits in breast milk?

குழந்தை புத்திசாலியாகப் பிறக்கும் சூழலை நிச்சயம் நம்மால் உருவாக்க முடியும்.

புத்திசாலிகளுக்கான நேரம் இது! புத்திசாலி மற்றும் ஆரோக்கியமான குழந்தையைப் பெறுவது ஒவ்வொரு பெற்றோரின் கனவு! கர்ப்ப காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாய் உணவு எடுத்துக்கொள்வது நல்லது; ஆனால் அது குழந்தையின் அறிவுத்திறனை எந்த அளவிற்கு தீர்மானிக்கிறது?

கருத்தரித்த 20வது நாளில் வளர்ச்சியடையத் தொடங்கும் மூளை, 28வது நாளுக்குள் குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் எப்படி இருக்கும் என்பதற்கான அனைத்து அடிப்படை வேலைகளையும் செய்து முடிக்கிறது. எனவே, கர்ப்பம் தரிக்கும் முன் ஒரு பெண் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது அவசியம்

என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். கொஞ்சம் மெனக்கெட்ட குழந்தை எப்படி பிறக்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம்.

‘‘குழந்தை புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது, முதல் ஒரு மாத காலத்தில் கிடைக்கிற ஆரோக்கியத்தைப் பொறுத்துதான் அமைகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற நீரிழிவு நோய், தைராய்டு சுரப்பியில் உண்டாகிற ஏற்ற இறக்கம், சரியான ஊட்டச்சத்து இல்லாமை… இவை எல்லாம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தடை செய்யக்கூடியவை. ‘ருபெல்லா’ என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ். பெண் குழந்தை பிறந்த 15&வது மாதத்திலேயே, அதற்கு ‘ருபெல்லா வேக்சினேஷன்’ எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும்.

அதே போல் அவளுடைய 15&வது வயதில் மீண்டும் அதே தடுப்பு ஊசி போட வேண்டும். இது அந்தக் குழந்தையின் உடலில் ருபெல்லாவை எதிர்ப்பதற்கான சக்தியைக் கொடுக்கும். பின்-னாளில் அவள் பெரியவளாகி கர்ப்பம் தரிக்கும்போது, அந்தக் கருவின் மூளை வளர்ச்சி நல்லபடியாக இருப்பதற்குத்தான் இத்தனை முன்னேற்பாடு! இந்தியாவில் இன்னும் இந்த ருபெல்லா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படவில்லை. இப்படிப் பெண் குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் தடுப்பூசி இருப்பதே நம்மில் பலருக்குத் தெரியாது.

child is born intelligent

ருபெல்லா வைரஸால் பாதிக்கப்படுகிற குழந்தையின் தலை சின்னதாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கண் பார்வை குறைய-லாம். மூளை நரம்புகளுக்கு இடையேயான தகவல் தொடர்புச் செயல்பாடு குறைவாக இருக்கும்.

இருபது நாள் கருவில் வளர ஆரம்பிக்கும் மூளை, ஏழு வயது ஆகும்போது கிட்டத்தட்ட 95 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது. குழந்தை பிறந்ததும் தாய்ப் பால் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துவதற்குக் காரணம், அதில் இருக்கும் புரதம் உள் ளிட்ட சத்துக்கள், மூளை வேகமாக இயங்கத் தூண்டுதலாக இருக்கும் என்ப தால்தான். இசையைக் கேட்டுக்கொண்டே இருக்கும் தாய்க்கு பிறக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி வேகமாக இருப்பதோடு, மூளையின் கிரகிக்கும் திறனும் அதிகமாக இருக்கும் என்று ஹங்கேரியில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால், ஆணோ, பெண்ணோ… அந்தக் குழந்தை புத்திசாலியாகப் பிறப்பதற்கான சூழலை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும்!

Health Tips

Some super tips to remove knee black

உடல் எவ்வளவு அழகாக இருந்தாலும் முழங்கால்களும் முழங்கைகளும் அழகைக் கெடுத்துவிடும்.