To Read this Post , Use Translator for Your language

How to know ghee healthy for the body? - healthtamil.com
Is ghee healthy for the body?
Is ghee healthy for the body?
Listen to this article

Is ghee healthy for the body?

We all think that ghee is unhealthy for the body. But only if you take more, not less.

Because pure ghee is 89 percent lower in fatty acids or refined fats, say nutritionists.

Ghee is pure ghee by melting butter at home.

People with heart disease and people who are not overweight can eat pure ghee.

So obese people should avoid ghee completely.

Also add 10-15 grams of ghee to the body per day.

Is ghee healthy for the body?

Regular intake of ghee strengthens the body and mind and keeps the body healthy. And if you eat this, all the dirt in the body will come out. Also, eyesight, muscles etc. will be healthy.

Ghee is a great option for people with cholesterol problems. Because you can eat ghee instead of butter without fear. Ghee is very low in fat as compared to ghee. This makes the food easily digested.

Pure ghee will last for a long time. It does not have to be stored in the fridge.

Ghee keeps the body’s digestive system running smoothly and helps in losing weight if exercised daily.

Ghee contains vitamins A, D, E and K. All these vitamins are soluble fats. That is why experts say that it does not increase body weight. In fact, ghee is rich in saturated fat, which helps the body absorb vitamins.

Ghee is much better than cooking oil used in cooking. Because those oils burn in high heat. But ghee is not like that, it remains fragrant no matter how hot it is.

Some fats are essential for the body. Because those fats are what keep acid from the digestive tract from affecting the colon. It also strengthens the nerves, skin and brain.

Ghee with innumerable medicinal benefits!

The Siddhas claim that undi pabh without ghee is. If we examine it scientifically today, its medicinal properties will amaze us. Let us first know how ghee is brewed which has countless medicinal benefits.

After boiling the milk well, mix a little curd in it and cover it and take it out after 6 or 8 hours, it will have turned into curd.

If you add some water to this curd and add alcohol, the butter will separate. It melts when it is boiled in a pan. Add betel leaves or moringa leaves to fry well. Smells good. Then it can be taken down and filtered and secured. The ghee extracted in this way does not spoil for a long time. Such ghee has many medicinal properties.

Ghee has been used extensively in Siddha Ayurvedic medicine for over 2000 years. Ghee is widely used in the preparation of such medicines because of its ability to penetrate the cell walls of medicinal herbs.

Ghee is the best material to preserve medicines. Ghee is called Rasayana by Ayurvedic pharmacists. Because ghee has the property of providing complete health and long health.

Similarly, ghee has been used as an adjunct to medicines in Siddha medicine and to protect medicines from spoilage.

A spoonful of ghee contains 14 grams of saturated fat.

Stimulates digestion. . .

Ghee balances the acidity in the stomach and strengthens the mucous lining of the stomach and intestines.

Ghee does not contain nutrients like salt and lactose. Thus, those who are intolerant to milk and milk products can use ghee.

Ghee boosts immunity. Prevents cancer and viral diseases.

Ghee contains CLA – Conjugated Linoleic Acid. It prevents obesity.

Similarly, it has recently been found that omega 3 fatty acid is present in ghee.

It is an excellent brain tonic. . .

Saturated fat in ghee – 65%

Mono – unsaturated fat – 32%

Linoleic – unsaturated fat -3%

Let’s learn how to use this medicinal ghee in food.

Melt the ghee and multiply the buttermilk.

It means that ghee should be melted well and mixed with steamed rice. Melting ghee and eating it cools the body and relieves heat.

Ghee can be added instead of oil while making dosa. You can eat paksans with ghee.

Relieves constipation. Reduces the irritations of vada, pitta and kapha and stops the effects of diseases.

* Stimulates memory

* Gives skin glow

* Strengthens the eye nerves and makes the eyesight clear.

To strengthen the body. . .

Some people look tired and weak all the time. Even walking a short distance will make them breathe. They will sit down immediately. They say that their legs hurt a lot. This is due to lack of nutrients in the body…

If they include ghee in their daily lunch, they will get the necessary nutrients for the body.

Ulcer healing. . .

People with ulcers suffer from loss of appetite. People who don’t eat at the right time and are too hungry can secrete digestive acids in the stomach and irritate the inner walls of the intestines. Also people with gas disorder, people who add too much salt in their food, people who use drugs like alcohol and people who are under stress can get ulcer. Due to this, sores are also formed in the mouth and some kind of smell is emitted.

If they eat ghee in their food, the ulcers in the inner walls of the intestine will heal and the glands will be strengthened. Constipation will be relieved. Stimulates good digestion.

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

How to know Diets for Kidney Stones Patients?

What are benefits in breast milk?

நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?

நெய் உடலுக்கு ஆரோக்கியமற்றது என்று நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் நீங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் மட்டுமே, குறைவாக எடுத்துக் கொண்டால் அல்ல.

ஏனெனில் தூய நெய்யில் கொழுப்பு அமிலங்கள் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகள் 89 சதவீதம் குறைவு என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

வீட்டில் வெண்ணெயை உருக்கி நெய்யாக மாற்றுவது சுத்தமான நெய்.

இதய நோய் உள்ளவர்கள், அதிக எடை இல்லாதவர்கள் சுத்தமான நெய்யை சாப்பிடலாம்.

அதனால் உடல் பருமன் உள்ளவர்கள் நெய்யை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும் ஒரு நாளைக்கு 10-15 கிராம் நெய்யை உடலில் சேர்க்க வேண்டும்.

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதா?

தொடர்ந்து நெய்யை உட்கொள்வதால் உடலும் மனமும் வலுப்பெறும், உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதை சாப்பிட்டால் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும், பார்வை, தசைகள் போன்றவை ஆரோக்கியமாக இருக்கும்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் வெண்ணெய்க்குப் பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். நெய்யுடன் ஒப்பிடும்போது நெய்யில் கொழுப்பு மிகக் குறைவு. இதனால் உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.

சுத்தமான நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சேகரிக்க வேண்டும் என்பதில்லை.

நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.

நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று சொல்கின்றனர் நிபுணர்கள். சொல்லப்போனால் நெய்யில் செறிவூட்டப்பெற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது.

சமையலில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை விட நெய் மிகவும் சிறந்தது. ஏனெனில் அந்த எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் கருகிவிடும். ஆனால் நெய்யானது அவ்வாறு இல்லை, அது எவ்வளவு வெப்பத்திலும் வாசனையுடன் இருக்குமே தவிர, கருகாமல் இருக்கும்.

உடலுக்கு ஒரு சில கொழுப்புகளானது மிகவும் அவசியமானது. ஏனெனில் அந்த கொழுப்புகள் தான் செரிமான மண்டலத்தில் இருந்து வெளிவரும் ஆசிட், குடல் வாலை பாதிக்காமல் தடுக்கிறது. மேலும் இது நரம்பு, சருமம் மற்றும் மூளையை வலுவாக்குகிறது.

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்!


நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஜீரண சக்தியைத் தூண்ட. . .

நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.

நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

நெய்யில் CLA – Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக். . .

நெய்யில் Saturated fat – 65%

Mono – unsaturated fat – 32%

Linoleic – unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.

ghee healthy

நெய் உருக்கி மோர் பெருக்கி….

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும். 

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

* ஞாபக சக்தியை தூண்டும்

* சரும பளபளப்பைக் கொடுக்கும்

* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய. . .

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே…

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் குணமாக. . .

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.

Read More:

which a child is born intelligent

குழந்தை புத்திசாலியாகப் பிறக்கும் சூழலை நிச்சயம் நம்மால் உருவாக்க முடியும். புத்திசாலிகளுக்கான நேரம் இது!