To Read this Post , Use Translator for Your language

How to know control too much cholesterol? - healthtamil.com
Having Too much cholesterol?
Having Too much cholesterol?
Listen to this article

Too much cholesterol? Then try these foods.

Cholesterol is something that affects the health of the body. If this cholesterol is high in the body, it can cause serious damage to the heart. Moreover, the reason for increasing this cholesterol in the body is the food we eat. But whenever we go out, we buy and eat high-cholesterol foods sold in stores for taste without being unhealthy.

As a result, cholesterol increases, blockage occurs in the blood vessels leading to the heart, and heart attack occurs due to insufficient blood flow to the heart.

Especially this problem is caused by the food eaten from a young age. Because then we will eat more of what is available without dieting. This can later increase cholesterol and lead to unwanted diseases.

So, we have listed some foods that are good to eat to prevent such problems. Read what they are, eat those foods, reduce body fat and live a healthy life.

Red wine

Everyone is well aware of the benefits of red wine. Red wine also keeps the heart healthy. Because the fiber tempranillo (tempranillo) in it reduces cholesterol in the body. So it is better if you eat it in moderation and not drink it in excess.

Almonds

Almonds are rich in vitamin E and flavonoids. It dissolves bad cholesterol in the body and prevents blockages in the blood vessels leading to the heart.

Dark chocolate

Eating dark chocolate in general is known to keep the body healthy. It is also known that the heart works well. But if you eat the same dark chocolate, 10 percent cholesterol will also decrease from the body.

Oats

Oats contain beta-glucan, a soluble fiber. It prevents the body from absorbing cholesterol. So if you eat oats every morning, your body will not have high cholesterol and your body will be healthy.

Avocado

Avocados are rich in cholesterol-lowering substances. Because it contains beta-sitosterol. It reduces cholesterol by at least 15 percent from the body.

olive oil

Olive oil is very good for heart health. Because it contains antioxidants and polyunsaturated fats. It lowers the level of cholesterol in the body.

Apple

Apples are rich in soluble fiber called pectin, which dissolves cholesterol. So if you eat it every day, your body will be healthy.

Omega-3 fatty acids

Fish is high in omega-3 fatty acids. It reduces the level of cholesterol in the body and promotes the level of good cholesterol. So it is good to buy and cook salmon or mackerel twice a week.

Soybeans

Soybeans are high in protein. And these soybeans protect the heart from any damage. Apart from that, it reduces the level of bad cholesterol in the body and increases the level of good cholesterol.

tomato

Tomatoes are high in lycopene, vitamin C, potassium and fiber. These dissolve cholesterol easily. So if it is cooked or eaten as it is, it is good.

Okra

Eating mung bean reduces cholesterol in the body. Because it is high in soluble fiber. But it should not be eaten fried. If you eat it like that, all the nutrients in it will be lost.

Garlic

Adding more garlic to the diet can lower cholesterol and prevent any clogging of the arteries. Moreover, if you eat 3-4 garlics daily without eating too much garlic, the heart will be healthy.

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding

How to know Diets for Kidney Stones Patients?

What are benefits in breast milk?

கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க.

கொலஸ்ட்ரால் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒன்று. இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருந்தால், இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிலும் இந்த கொலஸ்ட்ரால் உடலில் அதிகரிக்க காரணம் நாம் உண்ணும் உணவு தான். ஆனால், வெளியில் செல்லும் போதெல்லாம், உடல் நலக்குறைவு இல்லாமல் சுவைக்காக கடைகளில் விற்கப்படும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை வாங்கிச் சாப்பிடுகிறோம்.

இதனால், கொலஸ்ட்ரால் அதிகரித்து, இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு போதிய ரத்த ஓட்டம் இல்லாமல், மாரடைப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக இந்த பிரச்சனை சிறு வயதிலிருந்தே உண்ணும் உணவால் ஏற்படுகிறது. ஏனெனில் அப்போது உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் கிடைத்ததை அதிகம் சாப்பிடுவோம். இது பிற்காலத்தில் கொலஸ்ட்ராலை அதிகரித்து தேவையற்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.

எனவே, இதுபோன்ற பிரச்சனைகளைத் தடுக்க சாப்பிடுவதற்கு ஏற்ற சில உணவுகளை பட்டியலிட்டுள்ளோம். அவை என்னவென்று படித்து, அந்த உணவுகளை சாப்பிட்டு, உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, ஆரோக்கியமாக வாழுங்கள்.

ரெட் ஒயின்

அனைவருக்கும் ரெட் ஒயினின் நன்மைகளைப் பற்றி நன்கு தெரியும். அதுவும் ரெட் ஒயின் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்தான டெம்ப்ரானில்லா (tempranillo) என்னும் பொருள், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆகவே இதனை அளவுக்கு அதிகமாக பருகாமல் அளவோடு சாப்பிட்டால் நல்லது.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஃப்ளேவனாய்டு அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து, இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை தடுத்துவிடும்.


டார்க் சாக்லெட்
பொதுவாக டார்க் சாக்லேட் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது தெரியும். அதுவும் இதயம் நன்கு செயல்படும் என்பது தெரிந்ததே. ஆனால் அதே டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால், உடலில் இருந்து 10 சதவீத கொலஸ்ட்ராலும் குறையும்.

ஓட்ஸ்

ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்தான பீட்டா-க்ளுக்கான் உள்ளது. இது உடலானது கொலஸ்ட்ராலை உறிஞ்சாமல் பாதுகாக்கும். ஆகவே தினமும் காலையில் ஓட்ஸை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகாமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

cholesterol



அவோகேடோ

அவோகேடோவில் கொலஸ்ட்ராலை உடலில் இருந்து குறைக்கும் பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா-சிட்டோஸ்டெரால் உள்ளது. இது உடலில் இருந்து குறைந்தது 15 சதவீத கொலஸ்ட்ராலை குறைத்துவிடும்.

ஆலிவ் ஆயில்

இதயம் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் ஆயில் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. அது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.

ஆப்பிள்

ஆப்பிளில் கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருளான பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வர, உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதோடு, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை ஊக்கப்படுத்தும். ஆகவே வாரத்திற்கு இரண்டு முறை சாலமன் அல்லது கானாங்கெளுத்தி மீனை வாங்கி சமைத்து சாப்பிட்டால் நல்லது.

சோயாபீன்ஸ்

சோயாபீன்ஸில் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இந்த சோயாபீன்ஸ் இதயத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.

தக்காளி

தக்காளியில் லைகோபைன், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இவை கொலஸ்ட்ராலை எளிதில் கரைத்துவிடும். ஆகவே அதனை சமைத்தோ அல்லது அப்படியேவோ சாப்பிட்டால், நல்லது.

வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாப்பிட்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும். ஏனெனில் அதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் இதனை வறுத்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் போய்விடும்.

பூண்டு

பூண்டை அதிகம் உணவில் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறைந்து விடுவதோடு, தமனிகளில் எந்த ஒரு அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். அதிலும் தினமும் அதிகமான அளவில் பூண்டை சாப்பிடாமல், 3-4 பூண்டு சாப்பிட்டால், இதயம் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.

Read More:

which a child is born intelligent

குழந்தை புத்திசாலியாகப் பிறக்கும் சூழலை நிச்சயம் நம்மால் உருவாக்க முடியும். புத்திசாலிகளுக்கான நேரம் இது!