Dissolve gallstones -பித்தப்பை கற்களைக் கரைக்குமா பேக்கிங் சோடா?
பித்தப்பை கற்களைக் கரைக்கும் வீட்டு சிகிச்சைகள் ஏதேனும் உள்ளனவா என கூகுளில் தேடியபோது, பேக்கிங் சோடாவுக்கு அந்தத் தன்மை இருப்பதாக நிறைய செய்திகளைப் பார்த்தேன். அது எந்த அளவுக்கு உண்மை…? உண்மை எனில் அதை எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும்?
பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

வயிற்று உப்புசம், தசைப்பிடிப்பு போன்றவற்றுக்கு பேக்கிங் சோடா எடுத்துக்கொள்வதை பலரும் பின்பற்றுவதைக் கேள்விப்படுகிறோம். இத்தகைய வீட்டு சிகிச்சை முறைகள் சிலருக்கு சாதகமாகவும் சிலருக்கு பாதகமாகவும் முடியலாம்.
பேக்கிங் சோடாவின் பிஹெச் அளவில் ஆல்கலைன் தன்மை அதிகமிருக்கும். அதனால் அசிடிட்டி பிரச்னையை இது சற்று குணப்படுத்தக்கூடும். பேக்கிங் சோடாவில் சோடியம் அளவு மிக மிக அதிகமிருக்கும்.
எனவே, ரத்த அழுத்தத்துக்கு மருந்துகள் எடுப்போர், வேறு பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுப்போர், சப்ளிமென்ட்டுகள் எடுப்போர் எல்லாம் பேக்கிங் சோடாவை பயன்படுத்தக்கூடாது. கிட்னி தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களும் எடுக்கக்கூடாது. கர்ப்பிணிகள் இந்த விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டு சிகிச்சைகள், கை வைத்தியங்கள் என்ற பெயரில், கண்டதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற நினைப்பது சரியாதல்ல. அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். உங்கள் உடல்நலனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
இன்னும் சிலர், இதுபோன்ற வீட்டு வைத்தியங்களை ஒருமுறை பின்பற்றிப் பழகிவிட்டால், அடிக்கடி செய்துகொண்டே இருப்பார்கள். சோஷியல் மீடியாவில் சொல்கிறார்கள் என்பதை மட்டுமே நம்பி, எதையும் பின்பற்ற வேண்டாம்.
பித்தப்பை கற்கள் உருவாக என்ன காரணம், அதற்கான முறையான சிகிச்சை என்ன என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசித்துப் பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது. இவை ஏற்படுத்தும் பின்விளைவுகள் வேறு பிரச்னைகளுக்கு காரணமாகலாம் என்பதால் கவனமாக இருங்கள்.

Does baking soda dissolve gallstones?
When I searched on Google for any home remedies to dissolve gallstones, I saw a lot of news about baking soda having that property. How true is it…? If so, how and when should it be used?
Answered by Smt. Venkatraman, a clinical dietician and wellness nutritionist from Bangalore
We hear that many people follow the advice of taking baking soda for bloating, muscle cramps, etc. Such home remedies may be beneficial for some and detrimental for others.
Baking soda has a high alkaline pH. So it can cure acidity problems to some extent. Baking soda is very high in sodium. Therefore, people taking blood pressure medications, medications for other problems, and supplements should not use baking soda. People with kidney problems should also not take it. Pregnant women should be very careful in this regard.
It is not right to blindly follow whatever you see in the name of home remedies and home remedies. It should be scientifically proven. It should be suitable for your health. Some people, once they get used to following such home remedies, will continue to do so. Do not follow anything just by relying on what is said on social media.
It is safest to consult a doctor about the cause of gallstones and the proper treatment for it. Be careful as the side effects of these can lead to other problems.