eat old rice-வெயில் காலத்தில் ஏன் பழைய சோறு சாப்பிட வேண்டும்?
‘நம் முன்னோர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்தது பழைய சாதம். காலையில் ஒரு முட்டி கஞ்சியை, வெங்காயம், பச்சை மிளகாயோடு சேர்த்துக் குடித்துவிட்டுதான் வயலுக்குப் போவார்கள். அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப் பழஞ்சோறுதான் கொடுத்தது’ என்கிற பயோடெக்னாலஜி பேராசிரியர் உஷா, அதுபற்றி விளக்குகிறார்.
‘’சாதத்தை வடித்து, அதில் தண்ணீர் ஊற்றிவைத்தால், மறுநாள் காலையில் அது பழைய சாதம். சாதத்தை அலுமினியம், மண், ஸ்டீல் எனப் பல்வேறு பாத்திரங்களில் வைத்து பின்னர் அதை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்து பார்த்தோம். மண்பானை பழைய சாதத்தில்தான் நல்ல தரமும் வாசமும் இருந்தது.
ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடுசெய்து சாப்பிடுவதைவிட சிறந்தது
சாதத்தில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவிடும்போது அதில் நுண்ணுயிர்கள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) வளர்கிறது. லேசாக அமிலத்தன்மையும் உண்டாகும். அதனால்தான் அதில் புளிப்புச்சுவை ஏற்படுகிறது. நுண்ணுயிர்கள், வைட்டமின்களை உருவாக்குவதால், ‘பி’ வைட்டமின்கள் அதிகரிக்கிறது.
புரதமும் மாவுச்சத்தும் (ஸ்டார்ச்) எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கப்படுவதுதான், அதன் சத்துக்குக் காரணம். சாதம் மீதி இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடுசெய்து சாப்பிடுவதைவிட, தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது, செரிமானத்துக்கும் நல்லது, சத்துகளும் கிடைக்கும். அந்த ஊட்டச்சத்துகள் கரைந்திருப்பதால், நீராகாரமும் ரொம்ப நல்லது. பழைய சாதத்தின் ஆயுள் 15 மணி நேரம்தான்.
மேலும், பழைய சாதம் சாப்பிட்டால் எடை கூடும், தூக்கம் வரும் என்று சொல்வதில் உண்மை இல்லை. எந்த உணவையும் வயிறுமுட்ட சாப்பிட்டால்தான் தூக்கம் வரும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போதுதான் எடை கூடும். வெறும் பழையது மட்டும் சாப்பிடாமல், கூடவே துவையல் அல்லது காய்கறிப் பொரியல் ஏதாவது சேர்த்து, ‘பேலன்ஸ்டு’ உணவாக சாப்பிட வேண்டும்.
பழைய சாதத்தின் ஆயுள் 15 மணி நேரம்தான். முதல் நாள் இரவு 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால், அதில் இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அதற்குமேல் பழைய சாதத்தை அறையின் வெப்பநிலையில் வைக்கக்கூடாது. சர்க்கரை நோயாளிகள், அளவோடு சாப்பிடலாம்.

வன்முறையைக் கட்டுப்படுத்தும்!
”பழைய சாதம் பற்றி, நம் பாரம்பரிய மருத்துவம் என்ன சொல்கிறது?” என்று சித்த மருத்துவர் திருநாராயணனிடம் கேட்டோம்.
‘அகத்தியர் குண வாகடம்’ என்னும் மருத்துவ நூலில் பழஞ்சோற்றின் பெருமை பற்றி, ஒரு பாடலே இருக்கிறது. பொதுவாகவே, வெயில் காலத்தில் பித்தம் அதிகமாக இருக்கும். பித்தம் என்பது நெருப்பின் குணம். அதனால், பித்தம் சார்ந்த நோய்களும் அதிகமாக ஏற்படும்.
செரிமான நெருப்பு (Digestive Fire) அதிகரிப்பதால், பெரும் பசி எடுக்கும். உடல் எரிச்சல் ஏற்படும். இவை எல்லாவற்றையும் ‘நியூட்ரலைஸ்’ செய்து, உடம்பின் தேஜஸைக் கூட்டுகிறது பழைய சோறு. மனநிலைக் குறைபாடுகள், வன்முறையைத் தூண்டும் ஆக்ரோஷம் ஆகிய உணர்வுகளை இந்த உணவு கட்டுப்படுத்தும்.
பித்தத்தைக் கட்டுப்படுத்துவதால், அதன் எதிர்க்குணமான உடலில் கபத்தின் தன்மை அதிகரிக்கிறது. அதனால்தான், பழையது சாப்பிட்டதும் நமக்குக் குளுமையான உணர்வு ஏற்படுகிறது.

Why should we eat old rice in the hot season?
‘Our ancestors used to associate old rice with life. They would drink a bowl of porridge with onions and green chillies in the morning and then go to the field. That porridge gave them the strength and nutrition they needed,’ explains Usha, a professor of biotechnology.
”If you drain the rice and pour water on it, the next morning it is old rice. We put the rice in various vessels like aluminum, clay, and steel and then tested it in the laboratory. Only the old rice in the clay pot had good quality and aroma.
It is better than keeping it in the fridge and heating it the next day and eating it
When you pour water on the rice and soak it overnight, microorganisms (lactic acid bacteria) grow in it. It also creates a slight acidity. That is why it has a sour taste. Since microorganisms produce vitamins, ‘B’ vitamins increase.
Protein and starch are easily digestible. Soaking overnight increases its nutrients, which is the reason for its nutrition. If you have leftover rice, instead of keeping it in the fridge and reheating it the next day, eating it with water is better for digestion and provides nutrients. Since those nutrients are dissolved, water is also very good. The shelf life of old rice is only 15 hours.
Also, it is not true to say that eating old rice will make you gain weight and make you sleepy. You will only get sleepy if you eat any food on a full stomach. You will only gain weight if you eat too much. You should not eat just old rice, but should eat it as a ‘balanced’ meal by adding some rice or vegetable fry to it.
The shelf life of old rice is only 15 hours. If you pour water on it at 10 pm on the first day, you should eat it within a maximum of 15 hours. After that, old rice should not be kept at room temperature. Diabetics can eat it in moderation.
Controls violence!
“What does our traditional medicine say about old rice?” we asked Siddha doctor Thirunarayanan.
There is a song in the medical book ‘Agathiyar Guna Vakadam’ about the glory of the fruit. Generally, bile is more in the hot season. Bile is the quality of fire. Therefore, bile-related diseases are more common. Due to the increase in digestive fire, there is a lot of hunger.
The body becomes irritable. Old rice ‘neutralizes’ all these and increases the body’s energy. This food controls feelings of mental disorders and aggression that provoke violence. By controlling bile, its opposite, kapha, increases in the body. That is why we feel cool when we eat old rice.