Eyeliner
Eyeliner
Listen to this article

Eyeliner on my eyes- Eye Care: தினமும் கண்களில் மை வைக்கலாமா? – அழகுக்கலை நிபுணர் சொல்வதென்ன?

அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கண்மை கரிசலாங்கண்ணி போன்ற இயற்கைப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதால் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை. தற்போது கண்களை அழகுபடுத்த காஜல், மஸ்காரா, கண் மை, ஐ லைனர் என்று எத்தனையோ அழகு சாதனப்பொருள்கள் வந்துவிட்டன.

இவற்றில் உள்ள ரசாயனப் பொருள்களைக் கணக்கிட்டோம் என்றால் தலை சுற்றி மயக்கமே வந்துவிடும். இவற்றைத் தவிர்த்தும் கண்களை வசீகரப்படுத்த முடியாது. எனவே பாதுகாப்பாகக் கண்களை அழகுபடுத்திப் பராமரிப்பது எப்படி என்பதைப் பற்றி அழகுக்கலை நிபுணர் வசுந்தரவிடம் பேசினோம். அவர் கொடுத்த அழகுக் குறிப்புகள் இதோ உங்களுக்காக…

Eyeliner

1) காஜல், மஸ்காரா, கண் மை, ஐ லைனர் போன்ற அழகு சாதனப் பொருள்களில் உள்ள ரசாயனங்கள் கண்களைப் பாதிக்காமல் பாதுகாப்பது எப்படி?

வெளியில் செல்லும்போது இதுபோன்ற பொருள்களைப் பயன்படுத்தி கண்களை அலங்கரித்துக் கொள்வோம். அதில் தவறில்லை. ஆனால் இரவு தூங்கச் செல்லும் முன் கண்களை முழுவதுமாகக் குளிர்ந்த நீரில் கழுவி, தூய்மை செய்து விட வேண்டும். இதனால் காஜல், மஸ்காரா, கண் மை, ஐ லைனர் போன்றவற்றால் கண்களில் ஏற்படும் அழற்சிகளைத் தடுக்கலாம்.

இப்போது கடைகளில் நிறைய மேக்-அப் ரிமூவர்கள் திரவ வடிவத்திலேயே கிடைக்கின்றன. இதில் சில துளிகளைச் சிறிதளவு மென்மையான பஞ்சில் நனைத்து முகத்தையும், கண்களையும் லேசாகத் துடைத்தாலே போதும் நாம் செய்த அலங்காரங்கள் கலைந்துவிடும்.

விளக்கெண்ணெய்யையும் மேக்-அப் ரிமூவராக பயன்படுத்தலாம். பிறகு சாதாரண நீரில் முகத்தைக் கழுவிய பின்பு தூங்கச் செல்லலாம். இவ்வாறில்லாமல் கண்களுக்குப் பயன்படுத்திய மையைக் கலைக்காமலேயே தூங்கும் போது கருவளையம், கண் தொற்று போன்றவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

2) கண்களில் ஏற்படும் கருவளையங்களை எவ்வாறு நீக்கலாம்?

போதிய நேரம் தூங்காமலிருந்தாலோ அல்லது அதிக நேரம் கணினியைப் பயன்படுத்தினாலோ கண்ணில் கருவளையம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கண்களுக்குப் பயன்படுத்தும் மையைக் கலைக்காமலிருந்தாலும் கருவளையம் ஏற்படலாம்.

இதனை நீக்க சில எளிமையான வழிகளைக் கடைப்பிடித்தாலே போதும்.

வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்குகளைப் பயன்படுத்தியே கருவளையங்களை நீக்கலாம். இவற்றை வட்டமாக வெட்டி தினமும் தூங்கப் போகும் முன் ஐந்து நிமிடங்கள் கண்களிலும், கருவளையம் உள்ள இடத்திலும் வைக்க வேண்டும். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். கருவளையங்கள் மறைந்துவிடும்.

3) கண்ணுக்கான அழகு சாதனப் பொருள்களை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்?

கண்களுக்கான அழகுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்கும் போது அதிக கவனம் தேவை. விலை குறைவாக உள்ள தரம் இல்லாத எந்தவொரு பொருளையும் வாங்கி பயன்படுத்தக்கூடாது. கடைகளில் இவற்றை வாங்கும் போது தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள் போன்றவற்றைக் கண்டிப்பாகப் பார்த்து வாங்க வேண்டும். குறிப்பாக ஒருவர் பயன்படுத்திய கண் மை, காஜல் போன்றவற்றை மற்றொருவர் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. 4) தினமும் கண்களுக்கு மை அலங்காரம் செய்து கொள்ளலாமா?

தினமும் செய்வதில் தவறில்லை. ஆனால் எப்போதும் அழியாமல் இருக்கும் வாட்டர் ஃபுரூப் கண் மை, மஸ்காரா போன்றவற்றைத் தினமும் பயன்படுத்தக் கூடாது. இவை அதிக நேரம் கண்களிலேயே இருக்கும்போது கண் சிவப்பு, வீக்கம் ஏற்படலாம். இதனால் தினமும் கண்களுக்கு மையிடுவதை ஓரளவு தவிர்க்கலாம்.

Eyeliner

5) கண்களின் ஆரோக்கியத்திற்கு எந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்?

வைட்டமின் ஏ உள்ள உணவுகள் கண்களுக்கு மிகவும் நல்லது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் உள்ள மாம்பழம், ஆரஞ்சு, கேரட், பூசணிக்காய் போன்ற காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இவை கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் பார்வைத்திறனையும் மேம்படுத்துகின்றன.

Can we apply mascara to our eyes every day? – What does a beautician say?

The mascara used in those days was made with natural ingredients like black cumin and did not cause any side effects. Nowadays, there are so many beauty products like kajal, mascara, eyeliner, and so on to beautify our eyes. If we count the chemicals in these, we will be dizzy. Even without these, we cannot charm our eyes. So, we talked to beautician Vasundhara about how to beautify and care for our eyes safely. Here are the beauty tips he gave you…

Eyeliner

1) How to protect our eyes from the chemicals in cosmetics like kajal, mascara, eyeliner, and so on?

When we go out, we use such products to decorate our eyes. There is nothing wrong with that. But before going to sleep at night, we should wash our eyes completely with cold water and cleanse them. This can prevent inflammation in the eyes caused by kajal, mascara, eye ink, eye liner, etc.

Now a day’s shops have many make-up removers in liquid form. Just dip a few drops of this in a soft sponge and gently wipe your face and eyes to remove the makeup we have made. You can also use castor oil as a make-up remover. Then wash your face with plain water and go to sleep. Otherwise, if you sleep without removing the ink used on your eyes, there is a chance of dark circles and eye infections.

2) How to remove dark circles under the eyes?

If you do not sleep enough or use the computer for a long time, there is a high chance of getting dark circles under the eyes. Dark circles can occur even if you do not remove the ink used on your eyes.

You just need to follow some simple steps to remove this.

You can remove dark circles using cucumber and potatoes. Cut these into circles and place them on your eyes and under your dark circles for five minutes before going to bed every day. Doing this every day is enough. Dark circles will disappear.

Eyeliner

3) How to choose eye cosmetics?

You need to be very careful when choosing eye cosmetics. Do not buy or use any cheap, low-quality products. When buying these in stores, you should definitely check the date of manufacture and expiration date. In particular, you should not use eyeliner or kajal that someone has used on someone else. 4) Can you use eyeliner every day?

There is nothing wrong with doing it every day. But you should not use waterproof eyeliner and mascara, which are always indelible, every day. When these are left on your eyes for too long, they can cause redness and swelling in your eyes. This can help you avoid applying eyeliner every day to some extent.

5) What foods can you eat for eye health?

Foods containing vitamin A are very good for your eyes. You can eat more yellow and orange colored vegetables and fruits like mangoes, oranges, carrots, and pumpkins. These keep the eyes cool and improve vision.

Mental health counselor say on Valentine’s Day

Tips for Wearing a helmet Hygiene!

What if I take birth control pills?