marital relationship- தாம்பத்திய உறவில் விருப்பமில்லாத காலம்… எப்படிக் கடப்பது?
எல்லா பெண்களுமே வாழ்க்கையின் ஏதோ ஒருகட்டத்தில் தாம்பத்திய உறவில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். குடும்பத்தினர் நலனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியைக்கூட தன் நலனுக்குக் கொடுக்காத பல பெண்கள், ‘தான் செக்ஸில் விருப்பமில்லாமல் இருக்கிறோம்’ என்பது தெரியாமலேயே அந்தக் காலகட்டத்தைக் கடந்திருப்பார்கள்.
தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை, ‘கணவர் அனுபவிக்கிற பார்ட்னர்’, ‘மனைவி அனுபவிக்கப்படுகிற பார்ட்னர்’ என்றே நம் சமூகம் பெரும்பாலும் பழகியிருப்பதால், தான் ஆசைப்படும்போதெல்லாம் மனைவி ‘ம்’ சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஆண்கள். விளைவு, செக்ஸில் விருப்பமில்லாத காலத்தையும் வழக்கம்போலவே கடக்க வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு… செக்ஸில் விருப்பமில்லாமல் இருப்பதற்கு ‘பாலியல் தூண்டுதல் கோளாறு’ (female sexual arousal disorder) காரணமாக இருக்கலாம். அது குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவரும் உலக சுகாதார நிறுவனத்தின் உரிமைக்குழுவின் உறுப்பினருமான காமராஜ்.

இவை நான்கும் வேண்டும்!
“தாம்பத்திய உறவில் விருப்பம் ஏற்பட என்னவெல்லாம் தேவை என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். கணவர் மீதான விருப்பம் முக்கியம். இரண்டாவதாக, வலியில்லா உறவுக்கான வழுவழுப்புத் தன்மை வேண்டும். மூன்றாவதாக, உறுப்புகளின் இணைவு இயல்பாக இருக்க வேண்டும். நான்காவதாக உச்சகட்டம் வர வேண்டும். இந்த நான்கில் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டாலும் சரி, அல்லது நான்கிலும் பிரச்னை ஏற்பட்டாலும் சரி, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ‘பாலியல் தூண்டுதல் கோளாறு’ ஏற்படலாம். அவெர்ஷியன் டிஸ்ஆர்டர்!
சில பெண்களுக்குத் தாம்பத்திய உறவின் மீதே வெறுப்பு இருக்கலாம். சிறுவயதில் பாலியல் தொல்லைக்கோ அல்லது வல்லுறவுக்கோ ஆளானவர்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். இதை நாங்கள் ‘அவெர்ஷியன் டிஸ்ஆர்டர்’ என்போம். இதுபற்றி கணவரிடம் வெளிப்படையாகப் பேச முடியாமலும் விருப்பத்துடன் உறவில் ஈடுபட முடியாமலும் தவிக்கும் பெண்கள் பலர்.

கணவர்களே காரணம்!
மனதுக்குப் பிடிக்காத ஆணை திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு தாம்பத்திய உறவில் விருப்பமின்மை ஏற்படலாம். தவிர, குடிக்கிற கணவன், அடிக்கிற கணவன், மற்ற பெண்களுடன் தொடர்பில் இருக்கிற கணவன், சந்தேகப்படுகிற கணவன், பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்துகிற கணவன், தன் பிறந்த வீட்டினரை மதிக்காத கணவன், மாமியார், நாத்தனார் போன்ற உறவுகளுடன் ஏற்படுகிற பிரச்னையில் உதவி செய்யாத ஆண்களுடைய மனைவிகளுக்கும் தாம்பத்திய உறவில் விருப்பமின்மை ஏற்படலாம்.
எழுச்சியில்லா நிலையும் பயமும்!
ஏதோவொரு காரணத்தால் தாம்பத்திய உறவில் விருப்பமின்மை வந்துவிட்டது. ஆனால், கணவரின் விருப்பத்துக்காக ஈடுபடுகிறார்களென்றால் உணர்ச்சிவசப்பட முடியாது. உணர்ச்சிவசப்பட்டு உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து அது பெண்ணுறுப்பிலும் வெளிப்படும்போதுதான் வழுவழுப்புத்தன்மை ஏற்படும். அது நிகழாதபட்சத்தில் லூப்ரிகேஷன் இல்லாமல், உறவு அவர்களுக்கு வலி மிகுந்ததாக மாறிவிடும். இது விருப்பமின்மையை மேலும் அதிகரிக்கும்.
திருமணமான பெண்களில் 4 சதவிகிதம் பேருக்கு தாம்பத்திய உறவின் மீது பயம் இருக்கிறது. உறவின் ஆரம்ப நிலையில் இயல்பாக இருப்பவர்கள், முடியும் நேரத்தில் இறுக்கமாகி விடுவார்கள். விளைவு, பெண்ணுறுப்பும் இறுக்கமாகி விடும். ஒரு சிலர் கணவரை எட்டி உதைக்கவும் செய்யலாம். இவர்களுக்கு சிகிச்சையளிக்கிற மருத்துவர்களைக்கூட எட்டி உதைத்து விடுவார்கள். அவர்களை அறியாமலேயே செய்வதிது.
ஒரு சதவிகித பெண்களுக்கு உச்சகட்டம் அடைவதிலேயே சிக்கல் இருக்கும். இதுவும் அவர்களை விருப்பமின்மையை நோக்கி அழைத்துச் சென்று விடும்.
தன் உடல் மீது தாழ்வு மனப்பான்மை இருந்தாலும், தன் உடல்வாகை கணவன் கேலி செய்தாலும் பெண்களுக்கு உறவில் ஈடுபடப் பிடிக்காது.

வாழ்நாள் நோய்கள்…
ஹைப்போ தைராய்டு, நீரிழிவு போன்ற வாழ்நாள் குறைபாடு அல்லது நோய்கள் இருப்பவர்களுக்கும் தாம்பத்திய உறவில் விருப்பமின்மை ஏற்படலாம்.
மெனோபாஸ், கருத்தரிப்பு போன்ற காலகட்டங்களில் பெண்கள் உடலில் ஏற்படுகிற ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாகவும் செக்ஸில் விருப்பமின்மை ஏற்படலாம்.
தவிர, பெல்விஸ் பகுதியில் நரம்புகள் சேதமடைந்திருந்தாலும் பெண்ணுறுப்பு அல்லது சிறுநீர்ப்பையில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் விருப்பமின்மை வரும்.
மேலே சொன்ன அத்தனை பிரச்னைகளுக்கும், அவற்றுக்கேற்றபடி உளவியல் ஆலோசனை, மருத்துவ சிகிச்சை என தீர்வுகள் இருக்கின்றன. கூடவே, தன்னாலும் மனைவிக்கு பாலியல் தூண்டுதல் கோளாறு வரும் என்கிற புரிந்துணர்வும் மனமாற்றமும் கணவர்களுக்கு ஏற்பட்டால், பெண்களால் இந்த விருப்பமின்மையிலிருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்” என்கிறார் டாக்டர் காமராஜ்.
How to get over a period of sexual arousal… All women experience sexual arousal at some point in their lives. Many women who do not give even half the importance that their family gives to their well-being, go through that period without realizing that they are not interested in sex.
When it comes to marital relations, our society is mostly used to thinking that a husband is a partner who enjoys sex and a wife is a partner who is enjoyed, so men expect their wives to say ‘yes’ whenever they want. As a result, women are forced to go through a period of sexual arousal as usual… ‘Female sexual arousal disorder’ may be the cause of sexual arousal. Kamaraj, a sexologist from Chennai and a member of the World Health Organization’s Rights Committee, talks about it and its solutions.
You need all four of these!
“Let’s first find out what is needed to have desire in a marital relationship. Desire for the husband is important. Second, there must be smoothness for painless intercourse. Third, the union of the organs must be natural. Fourth, there must be climax. Whether there is a problem in one of these four, or if there is a problem in all four, the woman concerned may develop ‘sexual arousal disorder’. Aversion disorder!
Some women may have aversion to marital relations. This problem may occur in those who were sexually abused or raped in childhood. We call this ‘aversion disorder’. Many women are unable to talk openly to their husbands about this and are unable to engage in sexual relations willingly.
The husband is the reason!
Women who are married to a man they do not like may experience a lack of desire in marital relations. Apart from this, a husband who drinks, a husband who beats, a husband who is in contact with other women, a suspicious Wives of men who do not help with problems with their husbands, husbands who humiliate them in public, husbands who do not respect their family, in-laws, and in-laws can also experience a lack of interest in sexual intercourse.
Lack of arousal and fear!
For some reason, there is a lack of interest in sexual intercourse. But, if they are involved for the sake of their husband’s wishes, they cannot be emotional. Only when they are emotional and the blood flow in the body increases and it is also expressed in the vagina, lubrication occurs. If that does not happen, without lubrication, the intercourse becomes painful for them. This further increases the lack of interest.
4 percent of married women have a fear of sexual intercourse. Those who are normal at the beginning of the relationship, become tense at the end. As a result, the vagina also becomes tense. Some may even kick their husbands. They will even kick the doctors who treat them. They do it without knowing it.
One percent of women have difficulty reaching orgasm. This can also lead them to a lack of desire.
Even if they have an inferiority complex about their body, or if their husband makes fun of their body, women do not like to engage in sexual intercourse.
Lifelong diseases…
People with lifelong deficiencies or diseases such as hypothyroidism and diabetes can also experience a lack of desire in sexual intercourse.
Hormonal imbalances in women’s bodies during periods such as menopause and pregnancy can also cause a lack of desire in sex.
In addition, a lack of desire can occur if the nerves in the pelvis are damaged or if there is an infection in the vagina or bladder.
There are solutions for all the above problems, such as psychological counseling and medical treatment. In addition, if husbands understand and change their minds that their wives also have sexual arousal disorders, women can definitely recover from this lack of desire, says Dr. Kamaraj.