beauty parlor
beauty parlor
Listen to this article

Beauty parlor: பாட்டி வைத்தியம் முதல் பியூட்டி பார்லர் வரை… இயற்கை அழகி முல்தானி மட்டி!

முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்’ என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு செம மவுசு! ‘முல்தானிமட்டினா என்ன?’ என்று யாரிடமாவது கேளுங்கள். ‘அது ஒரு பவுடர்…’ என்பதற்கு மேல் வேறு எந்தத் தகவலும் தெரியாமல் விழிப்பார்கள். சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரனிடம் முல்தானிமட்டி பற்றி கேட்டோம்.

beauty parlor

முல்தானிமட்டி என்பது, ஆற்றுப்படுகைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை மண். முல்தான்’ என்பது, பாகிஸ்தானில் ஆற்றோரம் இருக்கும் ஒரு ஊர். மட்டி’ என்றால் மண். இந்த மண்ணுக்கும் களிமண்ணுக்கும் சிறிதளவுதான் வித்தியாசம். இதன் வேதிப்பெயர் அலுமினியம் சிலிகேட். இந்த மண்ணில், மக்னீசியம், துத்தநாகம், சிலிகான் போன்ற முக்கியமான தாதுக்கள் உள்ளன.

பாறையில் இருந்து வரும் முல்தானிமட்டி, சிறுசிறு கட்டிகளாக இருக்கும். வெள்ளை, தந்த நிறம், மஞ்சள் எனப் பல வண்ணங்களில் கிடைக்கிறது. அரை வெண்மை நிறத்தில் இருப்பதுதான் தரமானது. மேலும், பட்டுப் போல மென்மையாக இல்லாமல், கொஞ்சம் நெருநெருவென இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டும். முல்தானி மட்டி… என்னென்ன செய்யும்?

beauty parlor

முல்தானிமட்டி, சருமத்தை சுத்தப்படுத்தவும், வெளுப்பாக்கவும் (ப்ளீச்சிங்), உலர்ந்த செல்களை நீக்கவும் (ஸ்கிரப்பிங்), எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் முல்தானி மட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் துத்தநாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை ஆற்றும் திறன் கொண்டது. ஆனால், இதை அதிகமாகப் போட்டுத் தேய்த்தாலோ, அதிக நேரம் வைத்து இருந்தாலோ, முக சருமத்தின் மேலே உள்ள அதிமென்மையான அடுக்கு (Superfine layer), பாதிக்கப்படும்.

beauty parlor

பயன்படுத்தும் முறை

முல்தானிமட்டியை சுத்தமான பன்னீரில் குழைத்து, ஒரு சிறிய பிரஷால் முகத்தில் தடவி வைத்திருந்து (தேய்த்தல் கூடாது), 10 நிமிடங்கள் கழித்து, தண்ணீரால் கழுவவேண்டும். பரு பிரச்னை உள்ளவர்கள், அதிகமான எண்ணெய் சுரப்பு உள்ளவர்களுக்கு நல்லது. 15 நிமிடங்களுக்கு மேல் அந்த பேக்கை வைத்திருக்கக் கூடாது. வெளியே செல்லும் முன், முல்தானிமட்டி போட்டு முகத்தைச் சுத்தப்படுத்தினால், முகம் பளீரென இருக்கும்.

கோடைக்காலத்தில் முல்தானிமட்டி பயன்படுத்தும்போது, சிலருக்கு முகத்தில் எரிச்சல் ஏற்ப டலாம். அவர்கள் முல்தானிமட்டியுடன் தூய்மையான சந்தனத்தூளைக் கலந்து பூசலாம். எரிச்சல் குறைந்து, குளுமையாக இருக்கும். மட்டி டிப்ஸ்!

கால் கட்டு புதினா இலைகளின் விழுது, 50 வேப்ப இலைகளின் விழுது… இவற்றுடன், 2 டீஸ்பூன் முல்தானிமட்டியைக் கலந்து, முகப் பருவின் மீது போட்டு வந்தால், பருக்கள் விரைவில் மறையும். வேம்பு, மிகச் சிறந்த கிருமிநாசினி. புதினா, பருவைக் காயச் செய்யும்.

முகத்தில் வரும் கரும்புள்ளி, வெண்புள்ளிப் பிரச்னைக்கு, பலரும் பார்லரையே தேடிப் போகிறார்கள். பார்லர் கருவிகளால் நோய்த்தொற்று ஏற்பட்டு, திரும்பத் திரும்ப வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், முல்தானிமட்டியுடன் வேப்ப இலை விழுதைக் கலந்து தடவி, காய்ந்ததும் கழுவி வந்தால், இந்தப் பிரச்னையை அடியோடு தீர்க்கலாம்.

beauty parlor

From grandmother’s medicine to beauty parlors… Natural beauty Multani mitti!

Multani mitti is a popular ingredient in beauty parlors, from grandmother’s medicine to beauty parlors, as if you rub multani mitti on your face, it will make you glow! Ask anyone, ‘What is multani mitti?’ They will wake up without knowing anything else except ‘It’s a powder…’ We asked Dr. S.T. Venkateswaran, associate professor at the Government College of Yoga and Naturopathy, Chennai, about multani mitti.

Multani mitti is a type of soil extracted from riverbeds. ‘Multan’ is a town on the banks of a river in Pakistan. ‘Matti’ means soil. There is only a slight difference between this soil and clay. Its chemical name is aluminum silicate. This soil contains important minerals like magnesium, zinc, and silicon.

Multani mitti, which comes from the rock, comes in small pieces. It is available in many colors such as white, ivory, and yellow. The quality is semi-white in color. Also, you should buy it so that it is not soft like silk, but a little firm. What does Multani mitti do?

Multani mitti plays an important role in cleansing, whitening (bleaching), removing dry cells (scrubbing), and absorbing oil and dirt. The zinc present in it has the ability to heal wounds caused by pimples on the skin. However, if you apply it too much or leave it for too long, the superfine layer on the top of the facial skin will be affected.

beauty parlor

How to use

Mulch multani mitti in clean water, apply it to the face with a small brush (do not rub), and wash it off with water after 10 minutes. It is good for people with acne problems and those with excessive oil secretion. Do not keep the pack for more than 15 minutes. Before going out, if you cleanse your face with multani mitti, your face will be smooth.

When using multani mitti in summer, some people may experience irritation on their face. They can mix pure sandalwood powder with multani mitti and apply it. The irritation will reduce and it will be cool. Mud Tips!

A paste of 200 gram mint leaves, a paste of 50 neem leaves… If you mix 2 teaspoons of multani mitti with these and apply it on the pimples, the pimples will disappear quickly. Neem is an excellent disinfectant. Mint will dry the pimples.

Many people go to the parlor to deal with the problem of blackheads and whiteheads on their face. Parlor equipment can cause infection and lead to recurrence. However, if you apply neem leaf paste mixed with multani mitti and wash it off after it dries, you can completely solve this problem.

How to know Does aspirin reduce blood sugar levels?

How to know to remove Lips Darkening

How to know some tips to retain youth?