Ulcer and kidney problems- அல்சர், தொப்பை, ரத்த விருத்தி, சிறுநீரக பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு..!
அதிகப்படியான சதையைக் குறைத்து, உடலை ‘சிக்’கென மாற்றும் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராள நன்மைகள் உண்டு. இதன் ஒப்பற்ற பயன்களைப்பற்றிக் கூறுகிறார், திருப்பூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் அழகேந்திரன்.
‘அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்று அழைத்தார்கள். தமிழர் கலாசாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடிய வாழைத்தண்டு தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துள்ளது. மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டது. அதன் சுவை துவர்ப்புத்தன்மை கொண்டது. வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பல பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகளை அளிப்பதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலா?
நம் உடலிலிருந்து சிறுநீரை வெளியேற்றும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள், கோடைகாலத்தில் பலருக்கும் ஏற்படும் சிறுநீரகக் கற்கள் போன்றவற்றைத் தடுக்கக்கூடிய ஆற்றல் வாழைத்தண்டுக்கு உண்டு. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட்டால், வாழைத்தண்டை இடித்து சாறு எடுத்து அருந்தி வர, விரைவிலேயே எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும். ஆண்களுக்கு சிறுநீரோடு கலந்து ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும். அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும் ஆற்றலும் வாழைத்தண்டுக்கு உண்டு. விந்துப்பை வீக்கத்தை சரிசெய்யும். தொப்பை இருக்கிறதா?
அதிகமாக உதிரப்போக்கு ஏற்படும் பெண்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்வது அந்த பிரச்னையிலிருந்து விடுபட வழிவகுக்கும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடல் பருமனைக் குறைக்கும். தொப்பை இருப்பவர்கள் வாழைத்தண்டை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வாழைத்தண்டில் அதிகப்படியான தாது உப்புக்கள் மற்றும் புரதச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு வாழைத்தண்டில் விதவிதமான உணவுகளைச் செய்துகொடுக்க, அவர்களது ஆரோக்கியம் மேம்படும்.

வாழைத்தண்டும் ரத்தத்தில் ஹீமோகுளோபினும்…
குழந்தைகளுக்கு வாழைத்தண்டை எப்போதும் போல பொரியலாக மட்டுமே செய்துகொடுக்காமல் ஜூஸ், மோரில் கலந்து நீர்மோர், பச்சடி, சூப்பாக செய்துகொடுக்கலாம். பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டாகவும் செய்யலாம். விரும்பிச் சாப்பிடுவார்கள்.
வாழைத்தண்டு ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. ரத்தசோகை உள்ளவர்கள் வாழைத்தண்டை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாழைத்தண்டு தவிர வாழைப்பூவும், பிஞ்சும் ரத்த விருத்தியை அதிகரிக்கும். வாழைப்பூவில் வடகம் செய்து சாப்பிட்டால், பித்த நோய்கள் மற்றும் கர்ப்பப்பை பிரச்னைகள் சரியாகும். விஷக்கடி, தீக்காயங்களுக்கு வாழைப்பட்டை, வாழைத்தண்டின் சாறைப் பூசினால், எரிச்சல் போவதுடன், சீக்கிரத்தில் ஆறிவிடும். எப்போது சாப்பிட வேண்டும்?
வாரம் முழுவதும் வாழைத்தண்டை உணவில் சேர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வாரத்துக்கு மூன்று முறை சேர்த்துக்கொண்டாலே, அதன் முழுப் பயனையும் பெறலாம்.
பகல் நேர உணவில் மட்டுமே வாழைத்தண்டு இடம்பெற வேண்டும். இரவு உணவில் கட்டாயம் சேர்க்கக் கூடாது.
சிறுநீரை அதிகரிக்கச் செய்யும் என்பதால், வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்ப்பதைக் குறைத்துக்கொள்வது நல்லது.

வாழைத்தண்டு தயிர் பச்சடி!
ஒரு சின்ன துண்டு வாழைத் தண்டை நூல் எடுத்து வட்டமாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவேண்டும். இதில், 2 கப் தயிர், ஒரு பச்சைமிளகாய், கொத்தமல்லித் தழை, சின்ன துண்டு இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து மீண்டும் அரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். சுவை அபாரமாக இருக்கும். விழுதாக அரைத்து செய்வதால், சத்துக்கள் அனைத்தும் உடலில் சேரும். உடல் உஷ்ணப் பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த பச்சடி ஏற்றது.
Banana stem provides a solution to ulcers, stomach, blood pressure, and kidney problems..!
Banana stem, which reduces excess flesh and makes the body ‘chicken’, is rich in water and fiber. Even if a banana tree is cut down, the banana stem that remains at the end has many benefits. Tiruppur-based Siddha doctor Alagendran talks about its incomparable benefits.
‘In those days, the banana tree was called Arambai, Kathali, and Amanam. The use of the banana tree was daily in Tamil culture. The banana stem, which is available in all times, has dedicated itself entirely to medicinal uses. It is very cooling. Its taste is astringent. Banana stem has no equal in providing excellent solutions to many problems caused by heat.
Irritation while urinating?
It expels urine from our body. Thus, banana stem has the power to prevent kidney disorders and kidney stones that many people experience in summer. If you experience irritation while urinating, crush the banana stem and drink its juice, and the irritation and dehydration will soon go away. It prevents blood from flowing out of the urine in men. Banana stem also has the power to cure ulcers. It can cure swelling of the testicles. Do you have a belly?
Including banana stem in the diet of women who suffer from excessive bleeding will help them get rid of that problem. Since it is rich in fiber, it will reduce obesity. Those with a belly can include banana stem in their diet more. It is very good for diabetics. Banana stem contains a lot of mineral salts and protein. Giving children a variety of foods with banana stem will improve their health.
Banana stem and hemoglobin in blood…
Instead of giving banana stem to children as a fried food, you can also mix it with juice, buttermilk, and make it into a smoothie, tachadi, or soup. You can also make it with lentil and lentil. They will love it.
Banana stem has the ability to increase hemoglobin in the blood. People with anemia should include banana stem in their diet regularly.
Apart from banana stem, banana flower also increases blood clotting. If you make a paste of banana flower and eat it, it will cure gallstone diseases and uterine problems. If you apply banana peel and banana stem juice to poison bites and burns, it will relieve irritation and heal quickly. When should you eat it?

It is not necessary to include banana stem in your diet for the entire week. You can get its full benefits by adding it three times a week.
Banana stem should be included only in the daytime meal. It should not be included in dinner.
It is better for the elderly to reduce the amount of banana stem in their diet as it increases urination.
Banana stem curd pie!
Take a small piece of banana stem, cut it into rounds, and grind it in a mixer. In this, add 2 cups of yogurt, a green chili, coriander leaves, a small piece of ginger, and a little salt, and grind it again. Fry mustard seeds, urad dal, and curry leaves in oil. The taste will be amazing. Grinding it into a paste will help all the nutrients enter the body. This tart is suitable for people who are suffering from heatstroke.