Netflix- இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கும் படைப்புகள்
ஓ.டி.டி தளங்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்தியாவில் மட்டும் கடந்தாண்டு ஓ.டி.டி-யில் படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை 54 .73 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஒரிஜினல் கன்டென்ட், மொபைல் ஃபோன்களில்கூட படம் பார்த்துவிடுகிற மாதிரியான வசதி போன்றவற்றை இந்த எண்ணிக்கை உயர்வதற்கான முக்கிய காரணங்கள். அப்படியான பார்வையாளர்களுக்காக அதிரடியான திரைப்படங்களை இந்தாண்டு கொண்டு வருகிறது நெட்ஃபிளிக்ஸ். அந்த லிஸ்டில் இருக்கும் முக்கியமான படைப்புகளைப் பார்ப்போமா…. நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்
டெஸ்ட்:
`Y நாட் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம்தான் இந்த `டெஸ்ட்’. ஸ்போர்ட்ஸ் டிரமா திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ – என்ட்ரி கொடுக்கிறார். இதுமட்டுமல்ல, பின்னணி பாடகி சக்தி ஶ்ரீ கோபாலன் இத்திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் முத்திரைப் பதிக்க விருக்கிறார். திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது.

ஆப் ஜைசா கோய் ( Aap Jaisa Koi) – Hindi:
மாதவன் , `தங்கல்’ புகழ் ஃபாதிமா சனா ஷேக் நடித்திருக்கும் திரைப்படம்தான் `ஆஃப் ஜைசா கோய்’. இயக்குநர் விவேக் சோனி இயக்கியிருக்கும் இந்த ரொமான்டிக் டிராமா திரைப்படம் கூடிய விரைவில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
ஜெவெல் தீஃப் – தி ஹைஸ்ட் பிகின்ஸ் (Jewel Theif – The Heist Begins) – Hindi:
விலைமதிப்பற்ற ஒரு வைரத்தைக் கொள்ளையடிக்கச் செல்லும் ஒரு திருடனின் கதையைச் சொல்லும் திரைப்படம்தான் இந்த `ஜெவெல் தீஃப் – தி ஹைஸ்ட் பிகின்ஸ்’. சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

நதானியன் (Nadaaniyan) – Hindi :
நடிகர் சைஃப் அலி கானின் மகனான இப்ராஹிம் அலி கான் மற்றும் போனி கபூரின் இளைய மகளான குஷி கபூரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம்தான் இந்த `நதானியன்’. இப்ராஹிம் அலி கான் கதாநாயனாக நடிக்கும் முதல் முழு நீள திரைப்படம் இதுதான். இந்தப் படமும் இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கிறது. குஷி கபூருக்கு இந்தாண்டு அடுத்தடுத்து ரிலீஸ் காத்திருக்கின்றன. இவர் நடித்திருக்கும் `லவ் டுடே’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான `லவ்யப்ப’ திரைப்படமும் இந்த வாரம் வெளியாகிறது. வெப் சீரிஸ்
AKKA – Hindi:
1980-ல், தாய் வழி சமூகம் நடைமுறையில் இருக்கும் ஒரு கற்பனை நகரத்தில் பெண்களுக்கு பவர் இருக்கிறது. அந்த நகரத்தில் வாழும் பெண்களின் கதையை விவரிப்பதுதான் இந்த `அக்கா’ வெப் சீரிஸ். கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான `பேபி ஜான்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியிருந்தார் கீர்த்தி சுரேஷ். அப்படத்தை தொடர்ந்து தற்போது இந்த பாலிவுட் வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார். இந்த சீரிஸ் இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

டெல்லி க்ரைம் சீசன் 3 – Hindi:
டெல்லி காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட உண்மையான வழக்குகளின் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த வெப் சீரிஸை எடுத்து வருகிறார்கள். முதல் சீசனுக்காக சர்வதேச எம்மி விருதையும் இந்த சீரிஸ் வென்றிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். இந்த விருதை வென்ற முதல் இந்திய வெப் சீரிஸ் இதுதான். இதன் மூன்றாம் சீசன் இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
ரானா நாயுடு – Hindi:
`ரே டோனாவன்’ என்ற பிரபல அமெரிக்க வெப் சீரிஸின் இந்தி ரீமேக்தான் இந்த `ரானா நாயுடு’. ரானா, வெங்கடேஷ் என இரண்டு முன்னணி டோலிவுட் கதாநாயகன்கள் நடித்த இந்த இந்தி வெப் சீரிஸின் முதல் சீசன் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. இதன் இரண்டாம் சீசன் இந்தாண்டு ஒளிபரப்பாகவிருக்கிறது.

The Ba***ds of Bollywood:
பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் இயக்குநராக அறிமுகமாகும் படைப்பு இந்த `The Ba***ds of Bollywood’. இந்த வெப் சீரிஸை ஷாருக் கானின் மனைவி கெளரி கான் தயாரித்திருக்கிறார். பல பாலிவுட் நட்சத்திரங்கள் கேமியோ செய்திருக்கும் இந்த வெப் சீரிஸ் கூடிய விரைவில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. குறும்படம்:
அனுஜா:
ப்ரியங்கா சோப்ரா உட்பட பலர் இணைந்து தயாரித்திருக்கும் `அனுஜா’ என்கிற குறும்படம் இந்தாண்டு ஆஸ்கருக்கான இறுதி ரேஸில் இடம்பிடித்திருக்கிறது. அனுஜா என்கிற 9 வயது சிறுமியின் கதையே பேசும் இந்த சீரிஸ் இன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
Netflix- Works to be released on Netflix this year
The number of people using OTT platforms continues to increase.
In India alone, the number of people who watched movies on OTT increased to 54.73 crore last year. The main reasons for this increase are original content and the facility to watch movies even on mobile phones. Netflix is bringing action-packed movies for such viewers this year. Let’s look at the important works on that list…. Movies to be released directly on OTT
Test:
`Test’ is the directorial debut of `Y Nat Studios’ production company producer Sasikanth. This film, which has been developed as a sports drama, stars Madhavan, Nayanthara, Siddharth and Meera Jasmine. Meera Jasmine is making a re-entry into Tamil cinema after a long gap with this film. Not only this, playback singer Shakti Sri Gopalan is also making her mark as a music composer with this film. The film, which was expected to be released in theaters, will soon be released directly on Netflix OTT platform.
Aap Jaisa Koi – Hindi:
`Aap Jaisa Koi’ is a film starring Madhavan, `Dangal’ fame Fatima Sana Sheikh. This romantic drama film directed by Vivek Soni will soon be released directly on Netflix.
Jewel Theif – The Heist Begins – Hindi:
`Jewel Theif – The Heist Begins’ is a film that tells the story of a thief who goes to rob a priceless diamond. This film, starring Saif Ali Khan, will be released on Netflix OTT this year.
Nadaaniyan – Hindi :
`Nadaniyan’ is a film starring actor Saif Ali Khan’s son Ibrahim Ali Khan and Boney Kapoor’s younger daughter Khushi Kapoor. This is the first full-length film in which Ibrahim Ali Khan will play the lead role. This film will also be released on Netflix this year. Khushi Kapoor has a series of releases waiting for her this year. `Loveyappa’, the Hindi remake of the film `Love Today’ in which she starred, will also be released this week. Web Series
AKKA – Hindi:
In 1980, women have power in a fictional city where matriarchal society is prevalent. This `Akka’ web series tells the story of the women living in that city. Keerthy Suresh and Radhika Apte play the lead roles in this. Keerthy Suresh made her Bollywood debut with the recently released film `Baby John’. Following that film, she has now acted in this Bollywood web series. This series will be released on Netflix this year.
Delhi Crime Season 3 – Hindi:
This web series is based on the incidents of real cases investigated by the Delhi Police. Many may remember that this series also won the International Emmy Award for the first season. This is the first Indian web series to win this award. Its third season will be aired on Netflix this year.
Rana Naidu – Hindi:
`Rana Naidu’ is the Hindi remake of the famous American web series `Ray Donavan’. The first season of this Hindi web series, starring two leading Tollywood heroes, Rana and Venkatesh, was released in 2023. Its second season is set to air this year.
The Ba***ds of Bollywood:
“The Ba***ds of Bollywood” is the directorial debut of Bollywood’s top star Shah Rukh Khan’s son Aryan Khan. This web series is produced by Shah Rukh Khan’s wife Gauri Khan. This web series, which has many Bollywood stars making cameos, will be released on Netflix soon. Short film:
Anuja:
The short film “Anuja”, co-produced by Priyanka Chopra and others, has made it to the final race for this year’s Oscars. This series, which tells the story of a 9-year-old girl named Anuja, was released on Netflix today.