kidney stones-கால்சியம் மாத்திரை எடுத்தால் கிட்னி ஸ்டோன் வருமா?
சிலவித உடல்நல பிரச்னைகளுக்காக மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றிருந்தேன். எனக்கு கால்சியம் சத்துக் குறைபாடு இருப்பதாகச் சொல்லி மருத்துவர் கால்சியம் சத்து மாத்திரைகளைப் பரிந்துரைத்தார்.
கால்சியம் மாத்திரை எடுத்துக்கொண்டால் கிட்னி ஸ்டோன் வரும் என்கிறார்கள் சிலர். இது எந்த அளவுக்கு உண்மை… நான் மருத்துவர் எழுதிக்கொடுத்த மாத்திரைகளை எடுப்பதா… வேண்டாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்
ல்சியம் சப்ளிமென்ட்டுகளை எடுப்பதால் கிட்னி ஸ்டோன் எனப்படும் சிறுநீரக கற்கள் வரும் என்று சொல்வது உண்மையல்ல. உங்களுடைய உடல்நல பிரச்னைகளைப் பரிசோதித்துவிட்டு அதற்கேற்பவே உங்களுக்கு கால்சியம் சப்ளிமென்ட்டை மருத்துவர் பரிந்துரைத்திருப்பார். எனவே, அவற்றை அவர் குறிப்பிட்டுள்ள காலம்வரை எடுத்துக்கொள்வதில் எந்தச் சிக்கலும் வராது. கிட்னி ஸ்டோனும் வராது.
மருந்துக் கடைகளில் நீங்களாக கால்சியம் மாத்திரைகள், சத்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதுதான் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அவற்றின் அளவோ, எடுக்க வேண்டிய கால அளவோ, பக்க விளைவுகளோ உங்களுக்குத் தெரியாமல் எடுக்கும்போதுதான் பிரச்னையே.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, அளவுக்கு மீறி உடலுழைப்பைச் செலுத்துவது, துரித உணவுகளைச் சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவது, கிரில்டு சிக்கன், மட்டன் உணவுகள், அளவுக்கதிக பால், அளவுக்கதிக கீரை, சாக்லேட், சோயா பால், சோடியம் அதிகமுள்ள உணவுகள் போன்றவற்றைச் சாப்பிடுவதால்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகும்.
ஷெல் எனப்படும் ஓடு உள்ள மீன் உள்ளிட்ட கடல் உணவுகள், கால்சியம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவோருக்குத்தான் கிட்னி ஸ்டோன் பிரச்னை வரும்.
பார்பெக்யூ உணவுகளைச் சாப்பிடும் கலாசாரம் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்த உணவுகள்கூட சிறுநீரகக் கற்களை உருவாக்கலாம். இவற்றை எல்லாம் தவிர்த்து, மருத்துவர் அறிவுறுத்தும் உணவுப்பழக்கத்தையும் சிகிச்சையையும் பின்பற்றினாலே உங்கள் கால்சியம் பற்றாக்குறையும் சரியாகும், கிட்னி ஸ்டோன் ஆபத்தும் தவிர்க்கப்படும்.
Will taking calcium tablets cause kidney stones?
I went for a medical check-up for some health problems. The doctor prescribed calcium tablets for me, saying that I have a calcium deficiency. Some people say that taking calcium tablets will cause kidney stones. How true is this… Should I take the tablets prescribed by the doctor… or not?
Answered by Arunachalam, a general practitioner from Chennai
It is not true that taking calcium supplements will cause kidney stones. The doctor would have prescribed you calcium supplements after examining your health problems. Therefore, there will be no problem in taking them for the period he has mentioned. Kidney stones will not occur.
Buying calcium tablets and nutritional tablets from drug stores on your own will cause side effects. The problem is when you take them without knowing the dosage, duration, or side effects.
Not drinking enough water, exercising excessively, eating fast food, eating processed foods, eating grilled chicken, mutton, excessive milk, excessive spinach, chocolate, soy milk, and foods high in sodium can cause kidney stones.
Kidney stones are more likely to occur in people who eat seafood, including shelled fish, and foods high in calcium.
The culture of eating barbecued foods is currently increasing among the youth. Even those foods can cause kidney stones. By avoiding all these and following the diet and treatment advised by the doctor, your calcium deficiency will be corrected and the risk of kidney stones will be avoided.