ஒருவர் நலமாக இருப்பதற்கு உணவு, உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் என ஆயிரம் காரணங்கள் கூறினாலும், அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது நம்முடைய உணவுப் பழக்கம்தான். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடுவது சரியா? என நம் மனதில் பல்வேறு கேள்விகள் எழும். உணவு உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி, ஊட்டச் சத்து நிபுணர் திவ்யா கிருஷ்ணமூர்த்தி மிகத் தெளிவாக விளக்கினார்.
சாப்பிட்டதும் டீ குடிக்கலாமா?
‘கூடாது. ஏனெனில், தேயிலையில் சில அமிலங்கள் உள்ளன. இது, புரதச் சத்தையும் (Hardening), செரிமானத்தையும் கடினமாக்கி விடுவதற்கான வாய்ப்பு அதிகம். சாப்பிட்டு அரை முதல் ஒரு மணி நேரம் கழித்து தேநீர் அருந்தலாம்.’ சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பது தவறா?
‘சிகரெட் பிடிப்பதே ஆரோக்கியமானது அல்ல. சாதாரணமாக ஒரு சிகரெட் பிடித்தால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ, அதைக் காட்டிலும் 10 மடங்கு பாதிப்பு, சாப்பிட்டதும் சிகரெட் பிடிக்கும்போது ஏற்படும். எனவே, சிகரெட் பிடிப்பதை முற்றிலும் நிறுத்த முடியாவிட்டாலும், சாப்பிட்டதும் சிகரெட் பிடிப்பதையாவது நிறுத்த வேண்டும்.’
சாப்பிட்டதும் குளிக்கலாமா?
‘கூடாது. குளிக்கும்போது கை, கால், உடல் பாகங்களில் ரத்த ஓட்டம் அதிக அளவில் இருக்கும். இதனால், இரைப்பைக்கும் செரிமானத்துக்கும் தேவையான ரத்த ஓட்டம் குறைந்து விடும். இதனால், உணவு செரிமான மண்டல உறுப்புகள் பாதிப்படையும்.’ சாப்பிட்டதும் பழங்கள் சாப்பிடலாமா?
‘உணவுக்கு இடையில் அல்லது முடித்தவுடன் பழங்கள் எடுத்துக் கொள்ள கூடாது. அப்படி எடுத்துக் கொண்டால், வயிற்றுக்குள் உப்புசம் (Bloated with air) ஏற்படும். எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போதான் பழங்களைச் சாப்பிட வேண்டும். இப்படி இடைவெளி விட்டுச் சாப்பிடும்போது செரிமானத் திறன் மேம்படும்’
சாப்பிட்டதும் தூங்கலாமா?
‘மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே தூங்கச் செல்லக்கூடாது. உணவுக்குப் பின் குறைந்தது அரைமணி நேரம் கழிந்த பிறகே தூங்க செல்லவேண்டும்.’ சாப்பிட்டதும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்யலாமா?
‘சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது அல்ல. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குச் செல்லக் கூடிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, கால்களுக்குச் செல்லும். உணவில் உள்ள சத்துகள் முழுமையாக ரத்தத்தில் கலப்பதற்கு இடையூறாக இருக்கும். இதனால், உணவு சரியாக செரிமானம் ஆகாமல், சத்துகள் அனைத்தும் வீணாகும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் சும்மாவே இருப்பதுதான் பெஸ்ட்.’
Although there are a thousand reasons for a person to be healthy, such as diet, exercise, and good habits, the most important of all is our eating habits. Can we drink water while eating? Is it okay to eat fruits after eating? Various questions arise in our minds. Nutritionist Divya Krishnamurthy explained very clearly about the things to be considered while eating.
Can we drink tea after eating?
‘No. Because tea contains some acids. This is more likely to harden protein and make digestion difficult. You can drink tea half to an hour after eating.’ Is it wrong to smoke a cigarette after eating?
‘Smoking cigarettes is not healthy. The damage caused by smoking a cigarette after eating is 10 times more than the damage caused by smoking a cigarette normally. Therefore, even if you cannot stop smoking cigarettes completely, you should at least stop smoking cigarettes after eating.’
Can you take a bath after eating?
‘No. When taking a bath, there is a lot of blood flow in the hands, feet, and body parts. Due to this, the blood flow required for the stomach and digestion will decrease. Due to this, the digestive system organs will be affected.’ Can you eat fruits after eating?
‘You should not eat fruits between meals or after finishing them. If you eat them like that, you will get bloated with air. Therefore, you should eat fruits one hour before or after eating. Eating at such intervals improves digestion.’
Can you sleep after eating?
‘You should not go to sleep immediately after lunch or dinner. You should go to sleep only after at least half an hour after eating.’ Can you exercise or walk after eating?
‘It is not good to walk after eating. If you walk, the blood flow to the digestive organs will be blocked and will go to the legs. This will prevent the nutrients in the food from being fully absorbed into the blood. As a result, the food will not be digested properly and all the nutrients will be wasted. It is best to stay idle for a while after eating.’