கால்களுக்காகத்தான் காலணி; காலணிக்காக கால்கள் இல்லை..!
உயரத்தை வைத்தும் மனிதர்களை மதிப்பிடும் காலம் இது. குறைந்தது ஐந்தரை அடி உயரமாவது இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். உயரக் குறைவுப் பிரச்னைக்கான அழகியல் தீர்வாக முதலில் ஹீல்ஸ் செருப்புகள் அறிமுகமாயின. இவற்றால் ஏற்படும் ‘பின்’ விளைவுகள் குறித்து இப்போதுதான் விழிப்பு உணர்வு ஏற்படத் தொடங்கி இருக்கிறது.
பெண்கள் தங்களை உயரமாகக் காட்ட ஹீல்ஸ் அணிய வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஹீல்ஸ் உள்ள செருப்புகளின் உயரம், அவர்களின் வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து என்று பல காரணிகளின் அளவைத் தீர்மானிக்கிறது.
அழகாகக் காட்டுவதற்காக, அதிக உயரம் உள்ள ஹீல்ஸ் செருப்பை அணிவதால், உடல்நலம் எந்த அளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாகும், பாதத்துக்குப் பங்கம் விளைவிக்காத செருப்பு எது என்பன பற்றி, பாத வல்லுனர் டாக்டர் டி.வி.ராஜா விரிவாகச் சொல்கிறார்.
”முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் காலுக்குக் கொடுப்பது இல்லை. தினமும் கண்ணாடியில் முகம் பார்க்கும் நாம் ஒரு முறையாவது, பூமி மேல் அழுந்திப் பதியும் பாதத்தைப் பார்க்கிறோமா? அதேபோல், செருப்புகளை உங்கள் கண்கள் தேர்வு செய்யக் கூடாது.
காலணிக்காக உங்கள் கால்கள் இல்லை; உங்கள் கால்களுக்காகத்தான் காலணி. எனவே உங்கள் கால்தான் அதற்கேற்ற செருப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அழகாக இருக்கிறது என்று காலுக்குப் பொருந்தாத செருப்பை வாங்கக் கூடாது’ என்று அறிவுரை தந்த மருத்துவர், காலுக்கு உகந்த செருப்பைத் தேர்வு செய்வது பற்றிக் கூறினார்.
”இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் ஹீல்ஸ் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். திருமணம், பார்ட்டி போன்ற விசேஷங்களுக்குப் போகும்போது ஹீல் உயரம் ஒன்றரை இன்சுக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுவும், பத்து நாட்களுக்கு ஒரு முறை சிறிது நேரம் அணிந்தால் காலுக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
பெரிய ஹீல்ஸ் அணிந்து மணிக்கணக்கில் நின்று பணிபுரிபவர்களை ‘புரஃபஷனல் ஹசார்ட்’ (Professional Hazard) பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் என்பார்கள். இவர்களுக்குக் கால் பெருவிரலில் வீக்கம் (Bunion) ஏற்படும். ஒருகட்டத்தில் காலின் வடிவமே மாறிவிடும். அதிக நேரம் நின்று பணிபுரிபவர்கள், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிவது நல்லது. இல்லை எனில் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.
நடிகைகள், மாடல்கள் உயரத்தைக் கூட்டுவதற்காக பாயின்டட், பென்சில் ஹீல்ஸ்களை அணிகின்றனர். ஆனால், தற்போது, பத்து வயது நிரம்பும் பெண் குழந்தைகள்கூட ஹீல்ஸ் போடுகிறார்கள். பாயின்டட் ஹீல்ஸ் மற்றும் பென்சில் ஹீல்ஸைத் தொடர்ந்து அணியும்போது, உடல் எடையைத் தாங்கி நிற்கும் பாதத்திலும், குதிகாலிலும் வலி ஏற்படும். இடுப்பு மற்றும் பின்பக்கத்தில் சதை போடும். ஸ்டூல் போன்று செருப்புகள் வந்துவிட்டன. பக்கிள்ஸ் வைத்த ஸ்டூல் செருப்பு பாதுகாப்பானதோடு, உயரமாகவும் காட்டும்.
ஹீல்ஸ் இல்லாமல் முழுவதும் தட்டையாக உள்ள செருப்புகளை இளம் வயதினர் அணியலாம். பாதிப்பு இருக்காது. ஆனால், வயது ஏற ஏற இதுபோன்ற செருப்பு அணிவதைத் தவிர்க்க வேண்டும். நம் காலின் வளைவிற்கு ஏற்ற செருப்பையே அணியவேண்டும்.
நம் சீதோஷண நிலைக்கு ரப்பர் செருப்புதான் பெஸ்ட். ரப்பர் செருப்பில் காற்று புகக் கூடியது (Breathable), காற்று புகாதது (Non-breathable) என இரண்டு வகைகள் உண்டு. இதில் காற்று புகக்கூடிய செருப்புதான் மிகவும் நல்லது. இந்த வகைச் செருப்பில் காற்று, காலின் அடிப்பாதம் வரை செல்லும். முன்பு தயாரிக்கப்பட்ட செருப்பின் அடிப்பகுதி மட்டும் பி.வி.சி (PVC)-யில் இருந்தது.
ஆனால், தற்போது சில செருப்புகளில் மேல்பகுதியிலும் பி.வி.சி-தான் இருக்கிறது. இந்த வகைச் செருப்புகளை அறவே தவிர்க்கவும். சிலருக்குத் தோல் செருப்பு சௌகரியமாக இருக்கும். ஆனால், அதையே தொடர்ந்து அணியவும் கூடாது. பாதம் காற்றோட்டம் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகும்.
சிலருக்குப் பாதங்களில் அதிகமாக வியர்க்கும். அவர்கள் ஷூ, செருப்பு அணிவதற்கு முன்பு காட்டன் சாக்ஸ் அணியலாம். வியர்வையைக் காட்டன் உறிந்துகொள்ளும். காட்டன் அடுக்கு ஒன்று சேர்த்தே செருப்புகள் விற்கின்றனர். அது உங்கள் காலுக்குப் பொருந்தினால் வாங்கலாம்.
அதிக எடை உள்ள செருப்பை அணிந்தால், கால் வலி, காய்ப்பு வரும். அதிக எடை இல்லாத செருப்பை அணியுங்கள். வேலைக்குத் தகுந்த மாதிரியான செருப்பை அணிவது நல்லது.” என விளக்கமாகச் சொன்ன மருத்துவர் கால்களின் பாதுகாப்புக்காக நாம் மேற்கொள்ள வேண்டிய டிப்ஸ் ஒன்றையும் குறிப்பிட்டார். ”இரவு படுக்கைக்குப் போகும் முன், பாதத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளுங்கள்.”
Shoes are for feet; feet are not for shoes..!
This is the time when people are judged by their height. Everyone thinks that they should be at least five and a half feet tall. High heels were first introduced as an aesthetic solution to the problem of short stature. Awareness about the ‘after’ effects of these has only just begun to emerge.
It has become inevitable for women to wear heels to make themselves look taller. The height of the heels determines the level of many factors such as their employment and social status. Podiatrist Dr. T.V. Raja talks in detail about how wearing high heels to look beautiful can affect your health and which shoes do not harm your feet.
Heels
”We do not give our feet the importance we give to our faces. When we look at our faces in the mirror every day, do we at least once see our feet trampling the ground? Similarly, your eyes should not choose shoes. Your feet are not for shoes; shoes are for your feet. Therefore, your feet should choose the right shoes for them. You should not buy shoes that do not fit your feet just because they look beautiful,’ the doctor advised, and spoke about choosing the right shoes for your feet.
”In this day and age, many women have started wearing heels. When going to special occasions like weddings and parties, make sure that the heel height does not exceed one and a half inches. That too, if you wear them for a short time once in ten days, there will be no harm to your feet.
High Heels
People who work standing for hours wearing high heels are said to be at high risk of ‘Professional Hazard’. They develop a bunion on their big toe. At some point, the shape of their feet changes. It is better for those who work standing for a long time to wear sports shoes. Otherwise, they will have to suffer.
Actresses and models wear pointed and pencil heels to increase their height. But, nowadays, even ten-year-old girls wear heels. When you wear pointed heels and pencil heels continuously, you will experience pain in the feet and heels that bear the weight of your body. It will cause swelling in the hips and back. Stool-like sandals have arrived. Stool sandals with buckles are safe and make you look taller.
Young people can wear flat sandals without heels. There will be no harm. However, as you get older, you should avoid wearing such sandals. You should wear sandals that suit the curve of your feet.
Rubber sandals are the best for our climate. There are two types of rubber sandals: breathable and non-breathable. Of these, breathable sandals are the best. In this type of shoe, air reaches the sole of the foot. Previously, only the sole of the shoe was made of PVC. But now, some shoes have PVC on the upper part as well. Avoid these types of shoes. Some people find leather shoes comfortable. But they should not be worn continuously. The feet will be affected without ventilation.
Shoes
Some people sweat a lot on their feet. They can wear cotton socks before wearing shoes and shoes. Cotton absorbs sweat. Shoes are sold with a cotton layer. If it fits your feet, you can buy it.
If you wear heavy shoes, you will get foot pain and fever. Wear shoes that are not too heavy. It is better to wear shoes that are suitable for work. “The doctor explained and also mentioned a tip that we should follow to protect our feet. “Before going to bed at night, apply coconut oil to your feet.”