success of Viduthalai
success of Viduthalai
Listen to this article

‘எனது வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் இது’ – ‘விடுதலை 2’ வெற்றி குறித்து சூரி நெகிழ்ச்சி

‘விடுதலை-1’ வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையில் உருவான ‘விடுதலை- 2’ டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் “விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் எனது திரை வாழ்க்கையை மாற்றிய படங்களாக எப்போதும் இருக்கும். குமரேசன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று.

விடுதலை

இந்த மறக்க முடியாத பயணத்தை சாத்தியமாக்கிய என்னுடைய இயக்குநர் வெற்றிமாறன் சார், எனது தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் மற்றும் எனது சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பெரிய நன்றி.

அனைத்து உதவியாளர் மற்றும் இணை இயக்குநர்களுக்கும் எனது பாராட்டுகள். உங்கள் கடின உழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாமல், இவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டத்தில் நான் இந்த மைல்கல்லை எட்டியிருக்க முடியாது.

உண்மையான அன்பு மற்றும் ஆதரவிற்காக அனைத்து ஊடகங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் எனது நன்றிகள். நீங்கள் தான் எனது மிகப்பெரிய பலம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

success of Viduthalai

Following the success of ‘Viduthulai-1’, ‘Viduthulai-2’ directed by Vetri Maran, starring Soori, Vijay Sethupathi, Manju Warrier and others, with music by Ilayaraja, was released in theaters on December 20.

He posted a post on his X page to express his gratitude for the response to the film. In that post, he said, “Both parts of the film ‘Viduthulai’ will always be films that changed my film career. The character of Kumaresan is very special to me.

A big thank you to my director Vetri Maran sir, my producer Elred Kumar sir and my fellow actors and technicians who made this unforgettable journey possible.

My compliments to all the assistants and co-directors. Without your hard work, guidance and support, I would not have reached this milestone in such a special project.

My thanks to all the media and film enthusiasts for their genuine love and support. You are my greatest strength.”

How to know to protect kidney?

How to know most common breast problem

Way and Mode of Breastfeeding