cure for constipation
cure for constipation
Listen to this article

மலச்சிக்கலுக்கு மருந்தாகுமா liquid paraffin… குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

மலச்சிக்கலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு liquid paraffin கொடுக்கலாமா? எந்த வயதில், எந்த அளவு கொடுக்கலாம்?  பெரியவர்களும் இதை மலச்சிக்கலுக்கு எடுத்துக்கொள்வது சரியானதா?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

பாரம்பர்யமான மலமிளக்கிகளில் லிக்விட் பாரஃபின் (liquid paraffin) என்பது பிரபலமானது. இது சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதிகளில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். அதன் விளைவாக, இறுகி, வெளியேற முடியாத மலமானது சற்று இளகி வெளியேற உதவும். அதனால் மலச்சிக்கல் பிரச்னை  இல்லாமல் தவிர்க்கலாம்.

குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோருமே liquid paraffin எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இதை எத்தனை நாள்களுக்குக் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். மலச்சிக்கலுக்கான மருந்தாக, இதைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், நாளடைவில் இது இல்லாமல் மலம் கழிக்க முடியாது என்ற நிலை ஏற்படலாம்.

cure for constipation

சில குழந்தைகளுக்கு ஹேபிச்சுவல் கான்ஸ்டிபேஷன் (Habitual constipation)  என்ற பிரச்னை இருக்கலாம். அதாவது மலம் இறுகி வருவதால் ஏற்படுகிற வலிக்கு பயந்து,  சில குழந்தைகள் அதை வெளியேற்றாமல் அடக்கிக் கொள்வார்கள். அது போன்ற தருணங்களில் குழந்தைகளுக்கு லிக்விட் பாரஃபின் கொடுத்துவிட்டு, குழந்தை எளிதாக மலம் கழித்ததும், நார்ச்சத்துள்ள உணவுகள், பருப்புகள், பால், தண்ணீர் போன்றவற்றைக் கொடுத்துப் பழக்கலாம். இதையெல்லாம் செய்தபிறகு எளிதாக மலம் கழிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதன் பிறகு லிக்விட் பாரஃபின் தேவைப்படாது.

பெரியவர்களைப் பொறுத்தவரை எந்தப் பிரச்னையால் மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும். லிக்விட் பாரஃபின் எடுப்பதானால் மருத்துவரை அணுகி, எவ்வளவு, எத்தனை நாள்களுக்கு எடுக்க வேண்டும் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டே எடுக்க வேண்டும்.

cure for constipation

மலச்சிக்கலுக்கான காரணம் அறிந்து, அதற்கேற்ற சிகிச்சையை எடுப்பதுதான் சரியானது. ஒருவேளை வேறு காரணங்கள் இருந்து, அதற்கான சிகிச்சை எடுக்காமல், லிக்விட் பாரஃபின் எடுத்துக்கொண்டால், உண்மையான காரணம் சரியாகாமலேயே தொடரும். எனவே, மருத்துவரை அணுகிய பிறகே இதை பற்றி முடிவு செய்ய வேண்டும்.

cure for constipation

Is liquid paraffin a cure for constipation… Can it be given to children?

Can liquid paraffin be given to children suffering from constipation? At what age and in what quantity can it be given? Is it right for adults to take it for constipation?

Answered by Safi, a pediatrician and diabetologist from Nagercoil

Liquid paraffin is a popular traditional laxative. It increases the water content in the small intestine and colon. As a result, the hard, unpassable stool will soften slightly and help it pass. So, constipation can be avoided without problems.

cure for constipation

Everyone, both children and adults, can take liquid paraffin. But, the important thing is how many days we give it. If we take it continuously as a medicine for constipation, eventually we may not be able to defecate without it.

Some children may have the problem of habitual constipation. That is, some children will hold back their stools because they are afraid of the pain caused by constipation. In such cases, you can give liquid paraffin to children and, once the child has passed stools easily, give them fibrous foods, nuts, milk, water, etc. After doing all this, they will start passing stools easily. After that, liquid paraffin will not be needed.

As for adults, you should see what problem is causing the constipation. If you are taking liquid paraffin, you should consult a doctor and ask how much and for how many days to take it.

How to know benefit of Aloe vera?

How to know health benefits of figs?

How to know health benefits of Pistachio

How to know the rules on eating food?