Garlic milk to Breast Milk secretion
Garlic milk to Breast Milk secretion
Listen to this article

Garlic milk to Breast Milk secretion – பூண்டுப் பால்

Garlic milk

தேவையானவை:

பூண்டு – 100 கிராம், பசும்பால் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பூண்டை உரித்துக்கொள்ளவும். பாலை அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சி, உரித்த பூண்டு சேர்த்து நன்றாக வேகவிடவும். பூண்டு வேக சற்று நேரம் எடுக்கும். எனவே, தீயை மிதமாக்கிக்கொள்ளவும். பூண்டு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சிறிது உப்பு சேர்க்கவும். சாப்பிட சூப் போல இருக்கும் இப்பாலைப் பருகி, பூண்டுகளைச் சாப்பிடவும்.

குறிப்பு:

நன்றாக வேகவில்லை என்றால் பூண்டு காரமாக இருக்கும் என்பதால், வேகும்வரை காத்திருக்க வேண்டும். இதைப் பாலூட்டும் தாய்மார்கள் குழந்தை பிறந்த முதல் மாதத்தில் அடிக்கடி பருகி வர, பால் சுரப்பு நன்றாக இருக்கும். ஏற்கெனவே பால் சுரப்பு சீராக உள்ள தாய்மார்களுக்கு இது தேவையில்லை.

மட்டன் மிளகு ஈரல் வறுவல்

Mutton Pepper Liver Stir-fry

தேவையானவை:

ஈரல் – 250 கிராம், சின்னவெங்காயம் – 5, பூண்டு – 1 பல், மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – 3 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, கடுகு – அரை டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்

செய்முறை:

ஈரலை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாகக் கழுவிக்கொள்ளவும். சீரகம், மிளகு இரண்டையும் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பட்டை, பூண்டு சேர்த்து தாளித்து, நறுக்கிய சின்னவெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் ஈரலைச் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகு – சீரகப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு முக்கால் கப் தண்ணீர் சேர்த்து மூடிப்போட்டு 7 நிமிடங்கள் வேகவிடவும். ஈரல் வெந்ததும் தண்ணீர் இருந்தால் வற்ற வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

வெந்தய டீ

Fenugreek tea

தேவையானவை:

வெந்தயம் – 1 டீஸ்பூன், தண்ணீர் – 1 கப்

செய்முறை:

வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். காலையில் மற்றொரு பாத்திரத்தில் வெந்தயம் மற்றும் ஊறிய தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சில நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். பிறகு, இறக்கி வடிகட்டி தண்ணீரை குடிக்க வேண்டும். இந்த டீயைத் தொடர்ந்து குடித்து வந்தால் பால் நன்கு சுரக்கும். உடம்புக்கும் குளிர்ச்சியைத் தரும். கசப்பாக இருக்கும் ஆனால் பால் சுரக்க மிக சிறந்த டீ இது. டீத்தூள் இல்லாவிட்டாலும் டீ என்று அழைக்கப்படுகிறது.

Ingredients:

Garlic – 100 grams, Cow’s milk – 500 ml, Salt – as needed

Recipe:

Peel the garlic. Boil the milk well in the stove, add the peeled garlic and cook it well. It takes some time for the garlic to cook. So, reduce the heat to medium. Once the garlic is cooked, remove it from the stove and add a little salt. Drink this milk, which is like soup, and eat the garlic.

Note:

If it is not cooked well, the garlic will be spicy, so you should wait until it is cooked. Breastfeeding mothers should drink this frequently in the first month after the baby is born, and their milk secretion will be good. This is not necessary for mothers whose milk secretion is already regular.

Ingredients:

Mutton liver – 250 grams, Onion – 5, Garlic – 1 clove, Pepper – 2 teaspoons, Cumin – 3 teaspoons, Curry leaves – a little, Mustard – half a teaspoon, Bark – a small piece, Turmeric powder – 1/4 teaspoon, Salt – as needed, Sesame oil – 5 teaspoons

Recipe:

Cut the liver into small pieces and wash it well. Grind both the cumin and pepper in a mixer. Grind the onion into powder. Heat oil in a pan on the stove, add mustard, curry leaves, bark, garlic and fry it, add chopped Onion and fry it until golden brown. Add the liver to this and stir well, add required salt, turmeric powder, pepper and cumin powder and fry it well. Then add three-quarters of a cup of water, cover and cook for 7 minutes. When the liver is cooked, drain it if there is any water, and when the oil separates, remove it.

Ingredients:

Fenugreek – 1 teaspoon, water – 1 cup

Recipe:

Put fenugreek in a bowl and pour one cup of water and soak it overnight. In the morning, pour the fenugreek and the soaked water in another bowl and boil it on the stove for a few minutes. Then, drain, filter and drink the water. If you drink this tea continuously, your milk will flow well. It also cools the body. It is bitter but it is the best tea for milk flow. Even if there is no tea powder, it is called tea.

How to know Inappropriate Hormone?

Hair Care-Prevents hair loss from dryness

How to know Tips for the solution to skin problems