நட்ஸ் சாப்பிட்டால் நல்ல கொழுப்பு அதிகரிக்குமா…?
நட்ஸ் சாப்பிட்டால் உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்குமா… பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிட வேண்டுமா, தோல் நீக்கி சாப்பிடுவது சரியா? இதய நலனைப் பாதுகாக்க எண்ணெய் பயன்பாட்டை அறவே தவிர்ப்பதுதான் சரியானதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மூத்த இதயசிகிச்சை மருத்துவர் சொக்கலிங்கம்
கொலஸ்ட்ரால் என்பது விலங்குகள், மனிதர்கள் என எல்லோருக்கும் அவசியமானது. அந்த கொலஸ்ட்ராலை ரத்தத்தில் இருந்து பிரித்து எடுத்துவிட்டால் அடுத்த நொடி இதயம், மூளை என எல்லாம் செயலிழந்து, உடனே நாம் இறந்துவிடுவோம். எனவே, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்கும்வரை அது நமக்குப் பாதுகாப்பானதுதான். அதற்கு எண்ணெய் உள்ளிட்ட சில உணவுப்பொருள்கள் அவசியம்தான்.
முட்டையின் மஞ்சள் கருவில் 300 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. அதனால்தான் 20 வயதுக்குப் பிறகு மனிதர்கள் மஞ்சள் கருவை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. எந்த எண்ணெயை வெளியில் வைத்தால் உறைகிறதோ அதில் கொழுப்பு அதிகம். அந்த வகையில் தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய் போன்றவை கொழுப்பு அதிகமுள்ளவை. இவற்றில் சாச்சுரேட்டடு ஃபேட்டி ஆசிட் என்பது இருக்கும். இவற்றை உட்கொள்ளும்போது கல்லீரலானது, அதை சட்டென கொழுப்பாக மாற்றி, ரத்தத்தில் சேர்த்துவிடும். அது இதயத்துக்கு நல்லதல்ல.
அதுவே அன்சாச்சுரேட்டடு ஃபேட்டி ஆசிட் அதிகமுள்ள நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் போன்றவற்றில் இந்தப் பிரச்னை குறைவு. இந்தக் கொழுப்பானது ரத்தத்தில் சட்டென படியாது. அதற்குள் நம் ஆற்றலானது அதைக் கரைத்துவிடும். கடலை எண்ணெய் ஓரளவு சேர்த்துக்கொள்ளலாம். ரைஸ்பிரான் ஆயில் எனப்படும் அரிசித்தவிட்டு எண்ணெயை ‘ஹார்ட் ஆயில்’ என்ற பெயரில் பல நாடுகளில் பயன்படுத்துகிறார்கள். மற்ற எண்ணெய்களோடு ஒப்பிடும்போது, அரிசித்தவிட்டு எண்ணெய் ஆரோக்கியமானது.
எந்த நட்ஸிலும் கொழுப்பு கிடையாது. சில வகை நட்ஸில் ஆபத்தில்லாத அன்சாச்சுரேட்டடு ஃபேட்டி ஆசிட் சிறிதளவு இருக்கும். ஆனாலும், அது கல்லீரலால் கொழுப்பாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கும் அபாயம் இருக்காது. நட்ஸ் நல்லது என்று பாதாம் சாப்பிடுவோருக்கு ஒரு அட்வைஸ், அதை தோலுடன் சாப்பிடுவதுதான் சரியானது.
தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. தோலை நீக்கிவிட்டால் சத்துகளும் போய்விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். அதேபோல நட்ஸை எண்ணெயோ, நெய்யோ விட்டு வறுத்துச் சாப்பிடுவதும் தவறு. நட்ஸ் நல்லது என்பதற்காக அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிட்டால் உடல் எடை கூடும். உடல் பருமன் என்பது இதயம் உட்பட எல்லா உறுப்புகளுக்கும் ஆபத்தானது.
Does eating nuts increase good cholesterol…?
Does eating nuts increase the amount of good cholesterol in the body… Should we eat almonds with the skin or remove the skin? Is it right to avoid using oil to protect heart health?
Answers Senior Cardiologist from Chennai Chokkalingam
Cholesterol is essential for everyone, both animals and humans. If that cholesterol is removed from the blood, the next second everything including the heart and brain will fail and we will die immediately. Therefore, as long as there is cholesterol in the blood, it is safe for us. Some foods including oil are necessary for it.
Egg yolk contains 300 milligrams of fat. That is why it is advised that people should avoid eating yolk after the age of 20. Any oil that freezes when kept outside has a lot of fat. In this regard, coconut oil, ghee, butter etc. are high in fat. These contain saturated fatty acids. When you consume these, the liver quickly converts them into fat and adds them to the blood. That is not good for the heart.
This problem is less in oils like olive oil, rice bran oil, etc. that are high in unsaturated fatty acids. This fat does not get deposited in the blood quickly. By then, our energy will dissolve it. You can add some peanut oil. Rice bran oil is used in many countries under the name ‘heart oil’. Compared to other oils, rice bran oil is healthier.
No nuts contain fat. Some types of nuts contain a small amount of unsaturated fatty acids that are not dangerous. However, there is no risk of it being converted into fat by the liver and mixing with the blood. One piece of advice for those who eat almonds, thinking that nuts are good, is that it is best to eat them with the skin.
The skin contains the most nutrients. Please note that if you remove the skin, the nutrients will also be lost. Similarly, it is wrong to fry nuts in oil or ghee and eat them. Just because nuts are good, do not eat them in excess. Eating them like that will lead to weight gain. Obesity is dangerous for all organs, including the heart.