“என்னுடைய தயாரிப்பில் உங்களின் முதல் இந்திப் படம் என அமீர் கான் சொன்னார்” – எஸ்.கே
சிவகார்த்திகேயன் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படம் என வலுவான லைன் அப்களை தனது கையில் வைத்திருக்கிறார்.
இதுமட்டுமல்ல `டான்’ சிபி சக்ரவர்த்தி இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் எஸ்.கே. தன்னுடைய லைப் அப்கள் குறித்தும் தன்னுடைய பாலிவுட் அறிமுகம் குறித்தும் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்திய பதிப்பில் அவர் பேசியிருக்கிறார்.
அவர், “முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது. இன்னும் 7,8 நாட்கள் ஷூட் மட்டுமே மீதமிருக்கிறது. முருகதாஸ் சார் தற்போது சல்மான் கான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தை முடித்த பிறகு இந்தப் படத்திற்கான வேலைகளையெல்லாம் தொடங்கிவிடுவோம்.
அத்திரைப்படம் ஒரு கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படம்தான். ஆனால், அது வழக்கமான பாணியில் இருக்காது. சுதா கொங்கரா மேம் இயக்கத்தில் உருவாகும் படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டோம். புரோமோ ஷூட் முடிந்துவிட்டது. அதுவொரு பிரீயட் திரைப்படம், பெரிய ஸ்கேலில் உருவாகவிருக்கிறது. படத்தில் ஜெயம் ரவி சார் வில்லனாக நடிக்கிறார்.

சிவகார்த்திகேயன்
ஜெயம் ரவி சார் எனக்கு சீனியர். அவருடைய திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இத்திரைப்படத்தில் இணைந்து நடிக்கப்போகிறேன். நாங்கள் சண்டையிடப் போகிறோம் ( சிரிக்கிறார்). இந்தி திரைப்படத்திற்கான பேச்சுகள் நடந்தன. ஆனால், தேதி போன்றவற்றால் அவை சரியாகக் கைகூடவில்லை.
நான் சில முறை அமீர் கான் சாரை சந்தித்திருக்கேன். என்னுடைய முதல் இந்தி திரைப்படம் அவருடைய தயாரிப்பில்தான் வரவேண்டும் என என்னிடம் கூறினார். அதுமட்டுமல்ல, எதுவும் கதைகள் இருந்தாலும் அதை என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறியிருக்கிறார். ” என்றார் எஸ்.கே.
“Aamir Khan said it was your first Hindi film under my production” – SK
Sivakarthikeyan currently has a strong line-up in his hands, with a film directed by Murugadoss and a film directed by Sudha Kongara.
Not only this, SK is also going to act in a film directed by `Don’ Sibi Chakravarthy. He spoke about his life-ups and his Bollywood debut in the Indian edition of the Hollywood Reporter.
He said, “The shooting of the film directed by Murugadoss sir is 90 percent complete. There are only 7-8 days of shoot left. Murugadoss sir is currently directing a Salman Khan film. After completing that film, we will start all the work for this film.
The film is a commercial action film. But it will not be in the usual style. We have started the work of the film directed by Sudha Kongara ma’am. The promo shoot is over. It is a premium film, it is going to be made on a big scale. Jayam Ravi sir is playing the villain in the film.
Sivakarthikeyan
Jayam Ravi sir is my senior. I like his films a lot. I am going to act with him in this film. We are going to fight (laughs). There were talks for a Hindi film. But, due to dates etc., it did not work out properly.
I have met Aamir Khan sir a few times. He told me that my first Hindi film should be produced by him. Not only that, he has also told me that if there is any story, bring it to me,” said SK.