Respect for lust
Respect for lust
Listen to this article

`உங்க மனைவிக்கு நீங்க கணவரா அல்லது மேனேஜரா..?’ 

’காதலிக்கிறப்போ இருந்த காதல் அல்லது நிச்சயதார்த்தம் முடிஞ்ச பிறகு இருந்த காதல் எங்க போச்சு’ அப்படிங்கிற கேள்வி எல்லா திருமணமான பெண்களோட மனசுலேயும் இருக்கும். ஆண்களோட மனசுல இருந்த அந்த காதல் உண்மையிலேயே காணாமல் போகுதா என்பதை பற்றி ஒரு சம்பவம் வழியா விளக்கப் போறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். 

Respect for lust

பொதுவா பெண்கள்தான் கல்யாணத்துக்கு அப்புறம் என் கணவருக்கு என் மேல இருந்த காதலே போயிடுச்சுன்னு புகார் சொல்லுவாங்க. ஆனா, அந்த சம்பவத்துல ஒரு கணவர் தன் மனைவி மேல, ’இவ கல்யாணத்துக்கு முன்னாடி என் மேல ரொம்ப லவ்வா இருந்தா. ஆனா, கல்யாணமான கொஞ்ச நாள்லேயே இவளுக்கு என் மேல இருந்த லவ் சுத்தமா போயிடுச்சு டாக்டர். ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள்னு சொல்லுவாங்களே… எங்க விஷயத்துல என் மனைவிதான் அப்படி நடந்துகிறா. செக்ஸ் வச்சுக்கவும் ஒத்துக்க மாட்டேங்குற; நான் கட்டாயப்படுத்தினா கடமையேன்னு வெச்சிக்கிறா. எங்க கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த இவளோட லவ் எங்க போச்சுன்னு தெரியல டாக்டர் இப்படியே போய்கிட்டிருந்தா டைவர்ஸ் வரைக்கும் போயிடுவோம்னு பயமா இருக்குனு அழாதகுறையா பேசினார். 

கணவன் மனைவி பிரச்னையை பொறுத்தவரைக்கும் ஒருத்தர் சொல்றத மட்டும் வச்சு நாங்க முடிவு எடுக்க மாட்டோம். அதனால உங்க மனைவி கிட்டயும் நான் பேசணும்னு சொன்னேன். கொஞ்சம் டைம் கொடுங்க டாக்டர் அப்படின்னு வெளியே போனவர் மறுபடியும் உள்ள வந்து அவரோட செல்போனை கொடுத்தார். அவரோட மனைவி தான் பேசினாங்க. பல விஷயங்கள் அதுக்கு அப்புறம்தான் தெளிவாச்சு. 

அந்தக் கணவன் லவ் பண்ணும் போதும் சின்சியரா தான் இருந்திருக்கார். கல்யாணத்துக்கு அப்புறமும் சின்சியரா தான் இருந்திருக்கார்.. அந்த மனைவியும் அப்படித்தான் கணவர் மேல ரொம்ப ரொம்ப காதலா இருந்திருக்காங்க. இதுல எங்க பிரச்னை வந்ததுன்னா, கல்யாணத்துக்கு முன்னாடி காதலனா இருந்த அந்த ஆண் கல்யாணத்துக்கு பின்னாடி காதலனாகவோ கணவனாகவோ இல்லாம மேனேஜரா மாறி இருக்கார். ஆனா, அந்த மனைவி எப்பவும் போல கணவர் மேல காதலா மட்டுமே இருந்திருக்காங்க. 

காலைல ஆறு மணிக்கெல்லாம் பூஜையறையில விளக்கு ஏத்தணும்; வீட்டு வாசலை கூட்டி பெருக்க தாராளமா ஆள் வச்சுக்க ஆனா கோலம் மட்டும் நீ போட்டுடேன்னு கல்யாணமான முதல் வாரத்திலேயே சொல்லி இருக்கிறார். அவரோட மனைவிக்கும் அவங்க பிறந்த வீட்ல காலையில அவங்கம்மா விளக்கேத்தி  பார்த்து பழக்கம் இருக்கிறதால சரின்னு சொல்லியிருக்காங்க. ஓவியம் வரையறுதுல ஆர்வம் இருக்கிறதால கோலம் போடுறதுக்கும் சரின்னு சொல்லியிருக்காங்க.

Respect for lust

ஒரு மாசம் எல்லாமே ஸ்மூத்தா தான் போயிருக்கு. ஆனா, அந்த மனைவியோட ஆஃபீஸ்ல ஆட்குறைப்பு நடந்து அதனால அவங்களோட வேலைபளு அதிகமானதால தினமும் நைட் லேட் வர ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சமைச்சி சாப்பிட்டு தூங்கபோக இன்னும் லேட்டாகிருக்கு. இதனால, அவங்களால முதல் மாசம் செஞ்ச மாதிரி காலையில ஆறு மணிக்குள்ள குளிச்சு விளக்கேத்த முடியல; கோலம் போடவும் முடியல. கொஞ்ச நாள் தன்னோட தூக்கத்தை கெடுத்துக்கிட்டு இந்த வேலை எல்லாம் கணவருக்காக செஞ்சிருக்காங்க. ஆனா, இதையெல்லாம் கண்டுக்காம வழக்கம் போல தான், தன் சந்தோஷம், எட்டு மணி வரைக்கும் நிம்மதியான தூக்கம்னு வழக்கம்போல தம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழ்ந்துட்டிருந்திருக்கார்.

தினமும் சரியான தூக்கம் இல்லாததால அந்த மனைவிக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டிருக்கு. இதனால, அவரோட ஒர்க் லைஃபும் பாதிக்கப்பட்டிருக்கு. இந்த டென்ஷன்ல வாஷிங் மெஷின்ல துணி போட மறக்கிறது, பயன்படுத்தின டவலை பாத்ரூமிலேயே மறந்து வச்சிட்டு வர்றதுன்னு சில விஷயங்களை செஞ்சிருக்கக்காங்க. மனைவியோட ஆஃபீஸ் பிரச்னை அத்தனையும் தெரிஞ்ச இந்த கணவர், அந்தப் பிரஷர்தான் மனைவியைப் போட்டு அழுத்துதுன்னு புரிஞ்சிக்காம தானும் தன் பங்குக்கு, நீ ஏன் வாஷிங் மெஷின்ல துணி போடல, டவலை பாத்ரூமிலேயே மறந்து வெச்சுட்ட. அதுல இருந்து ஸ்மெல் வருது பாருன்னு பேச ஆரம்பிச்சிருக்காரு. இதுதான் ஒரு காதலன் கணவனா இருக்காம மேனேஜர மாறுகிற தருணம். 

Respect for lust

கணவர் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டிக்கிட்டே இருந்தா தன்னுடைய கரியரே போயிடும்னு புரிஞ்சுகிட்ட இவரோட மனைவி, விளக்கை இனிமே நீங்க ஏத்துங்க, கோலத்தை கூட்டிப் பெருக்க வர அக்காவையே போட சொல்லிக்கிறேன்னு சொல்லியிருக்காங்க. அத செயல்லேயும் காட்டியிருக்காங்க. வருஷக்கணக்கா எட்டு மணி வரைக்கும் சொகுசா தூங்கிட்டிருந்தவருக்கு ஆறு மணிக்குள்ள எந்திரிச்சு குளிச்சு விளக்கேத்துறது மனஉளைச்சலை கொடுத்திருக்கு. அந்த நேரத்திலேயும் தன்னை மாதிரிதானே தன் மனைவியும் வேலைக்குப்போறா, அவளுக்கும் இந்த மனஉளைச்சல் இருந்திருக்கும்தானே அவருக்கு தோணல.தொடர்ந்து மனைவியை குறை சொல்லிக்கிட்டே இருந்திருக்கிறார். விளைவு அவங்க ரொம்ப காதலிச்ச கணவர் கிட்ட கடமைக்கு வாழ ஆரம்பிச்சிருக்காங்க. அதை இவரால தாங்கிக்க முடியல. 

பல கணவர்கள் இந்தத் தப்பை செஞ்சுகிட்டிருக்காங்க. காதலி மனைவியா மாறுகிறாங்க. அல்லது மனைவியா வர்ற பெண்கள் மனைவியா மட்டும்தான் இருக்காங்க. சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனா, ஆண்களைப் பொறுத்த வரைக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் பெரும்பாலும் மேனேஜர்களா அதாவது மனைவியை அதிகாரம் பண்ற மேனேஜர்களா மாறிடுறாங்க. இதுதான் இன்னைக்கு பல பேரோட தாம்பத்ய வாழ்க்கையில மனஉளைச்சலை கொடுத்துட்டிருக்கு.. கணவர்கள் இத புரிஞ்சுகிட்டா எல்லாரோட திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.”

`Are you your wife’s husband or manager..?’

‘Where did the love that you had when you were dating or the love that you had after the engagement end go?’ Such a question is on the minds of all married women. Sexologist Kamaraj will explain through an incident whether the love that was in the minds of men really disappears.

“Usually, women complain that my husband’s love for me has gone after marriage. But, in that incident, a husband said to his wife, ‘You used to love me a lot before marriage. But, within a few days of marriage, her love for me has completely gone, doctor. They say that the day of desire is thirty days of infatuation… In my case, my wife is the one who is doing that. She won’t even agree to have sex; If I force you, you will say it is your duty. I don’t know where our love with this woman before marriage went. If it continues like this, I am afraid that we will end up in divorce,” he said tearfully.

Regarding the husband-wife issue, we will not take a decision just because someone says so. That is why I said that I should talk to your wife too. Give me some time, doctor. The person who went out came back and gave him his cell phone. They talked to his wife. Many things became clear only after that.

That husband was sincere even when he made love. He was sincere even after marriage.. That wife was also very much in love with her husband. If our problem comes from this, that man who was a lover before marriage, became a manager after marriage, not a lover or a husband. But, the wife, as always, had only been in love with her husband.

He had said in the first week of marriage that the lamp should be lit in the puja room at six in the morning; that the door of the house should be enlarged and the people should come and do the kolam only. His wife had also said that it was okay because she used to watch the lights in the morning at her birthplace and that it was okay. She had an interest in painting and had also said that it was okay to do the kolam.

Respect for lust

Everything went smoothly for a month. But, the wife’s office had been downsized and due to this, her workload had increased, so she started coming in late every night. Besides, it was even later for both of them to cook, eat and go to sleep. Because of this, they could not take a bath at six in the morning, do the lights, and do the kolam as they did in the first month. She had done all this work for her husband, ruining his sleep for a few days. But, not realizing all this, she had been living her life as usual, enjoying her happiness, sleeping peacefully till eight o’clock.

Due to not getting proper sleep every day, the wife’s health had also been affected. Due to this, her work life had also been affected. In this tension, she had forgotten to put the clothes in the washing machine, and had forgotten to put the used towel in the bathroom. This husband, who knew all about his wife’s office problems, did not understand that the pressure was putting pressure on his wife, so he also said to her, why didn’t you put the clothes in the washing machine, and forgot to leave the towel in the bathroom. She had started talking about the smell coming from it. This is the moment when a lover becomes a manager instead of a husband.

Respect for lust

His wife, who understood that if her husband kept on doing whatever he said, she would only get worse, said that she would light the lamp herself and that she would ask her sister to come and light the lamp for her to increase the power. She also showed this in her actions. For a person who had slept comfortably until eight o’clock for years, having to take a bath and light the lamp at six o’clock was mentally stressful. At that time, he felt that if his wife had gone to work like him, she would have been mentally stressed too. He kept complaining about his wife. As a result, she had started living as a servant to her husband, whom she loved very much. She could not bear it.

Many husbands have made this mistake. The girlfriend becomes the wife. Or the women who become the wife remain the wife only. There may be some exceptions. “But, as far as men are concerned, after marriage, they often become managers, that is, managers who dominate their wives. This is what has caused mental distress in the married lives of many people today. If husbands understood this, everyone’s married life would be happy.”

How to know symptoms Tobacco habit Cancer?

How to know symptoms of Vaginal Cancer?

How to know symptoms of Testicular Cancer