Hormones
Hormones
Listen to this article

This hormone is a woman’s friend… This is the reason for all the changes..!

It is the estrogen hormone that makes a woman look feminine with curves and fatty tissue in the breasts. Apart from this, what are the other benefits of estrogen for women; when does estrogen decrease in a woman’s body; when does it increase; what problems arise when that happens? Endocrinologist Dr. Shruti tells us all about estrogen.

This is the most important sex hormone in the body of women. This is also the hormone that creates a feeling of ‘I am a woman’. Although it is produced from the ovaries, it is the pituitary gland at the base of the brain that commands it to ‘produce more from the time a girl is growing up’. What are the main functions of estrogen?

Estrogen is what turns a girl into a woman. It causes hair growth in the armpits and pubic area of ​​teenage girls.

It gradually makes the breasts, which were flat until then, plump up with fatty tissue.

It gives women a soft skin.

It develops the ovaries, produces an egg, nourishes it, and releases it as menstruation. This is what we celebrate as ‘she has become a woman’.

Even if periods are to come regularly every month, estrogen’s help is needed.

During sexual intercourse, it creates moisture in the genitals and makes intercourse painless.

It nourishes the uterus to the required extent. It helps the endometrium tissue inside the uterus to grow. It is in this endometrium tissue that the embryo will implant and develop. To put it simply, this endometrium is the mattress of the fetus in the fetus. Estrogen creates this mattress.

It makes the bones strong.

It causes metabolism in the body. Only when this metabolism occurs can the waste in the body be eliminated and we can be healthy.

It stores the necessary fat in the body. What happens if estrogen decreases?

Girls, puberty is delayed. Breast development, armpit hair, and pubic hair do not grow.

If it decreases after puberty, periods may come once every 3 or 4 months.

If it decreases after marriage, there may be pain during intercourse.

If it decreases during middle age, osteoporosis. A bone-thinning problem will occur.

Estrogen deficiency is the reason why the body suddenly gets hot during menopause, and the next moment the body returns to normal temperature, and the genitals become dry and sexual intercourse becomes painful.

What happens if estrogen increases?

Too much estrogen is a very rare thing. If cancer develops in the vagina, estrogen is secreted in excess.

This problem is more common in people who take birth control pills.

If you are taking vitamin pills, check if estrogen is mixed in the label.

If estrogen increases, body weight will increase.

During menstruation, bleeding may decrease or increase.

As estrogen decreases, the vagina may become dry and painful during intercourse.

Can estrogen levels be tested?

Yes. If a girl has not reached puberty, or if her periods occur every 6 months, her estrogen levels can be determined through a blood test for estradiol (E2). This test is done to determine whether the ovaries are developing and whether menopause is about to occur in those who have not had children. This test should be done within the 2nd to 5th day of menstruation.

There is a pill for this. However, it should not be taken without a doctor’s advice. Among foods, soy is high in estrogen. However, it is better to get a blood test and take the amount your body needs as recommended by your doctor.

How to know Does aspirin reduce blood sugar levels?

How to know to remove Lips Darkening

How to know some tips to retain youth?

பெண்களின் தோழி இந்த ஹார்மோன்… எல்லா மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்..!

ரு பெண்ணை வளைவு நெளிவுகளுடன், மார்பகங்களில்  கொழுப்புத் திசுக்களுடன்  பெண்மையாகக் காட்டுவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான். இதைத் தவிர, ஈஸ்ட்ரோஜன் பெண்களுக்கு செய்கிற மற்ற நன்மைகள் என்னென்ன; ஒரு பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் எப்போது குறையும்; எப்போது அதிகரிக்கும்; அப்படி நிகழும்போது என்னென்ன பிரச்னைகள் வரும் என ஈஸ்ட்ரோஜன் தொடர்பான அத்தனை விஷயங்களையும் சொல்கிறார் எண்டோகிரானாலஜிஸ்ட் டாக்டர் ஸ்ருதி.

Hormones

நான் ஒரு பெண் !

பெண்களின் உடலில் இருக்கிற முக்கியமான செக்ஸ் ஹார்மோன் இது. ‘நான் ஒரு பெண்’ என்கிற ஒரு உணர்வை ஏற்படுத்துகிற ஹார்மோனும்  இதுதான்.  உற்பத்தியாவது சினைப்பையில் இருந்து என்றாலும், ‘ஒரு சிறுமியின் வளர் இளம் பருவத்தில் இருந்து நீ அதிகமாக உற்பத்தியாக வேண்டும்’ என்று அதற்குக் கட்டளையிடுவது மூளையின் கீழ்ப்பகுதியில் இருக்கிற பிட்யூட்டரி சுரப்பிதான். ஈஸ்ட்ரோஜனின் முக்கிய பணிகள் என்னென்ன?  

Hormones
  • ஒரு சிறுமியை பெண்ணாக மாற்றுவது ஈஸ்ட்ரோஜன்தான். பதின்ம வயதுகளில் இருக்கிற சிறுமிகளின் அக்குள் மற்றும் அந்தரங்கப் பகுதியில் ரோம வளர்ச்சியை ஏற்படுத்தும்.
  • அதுவரை தட்டையாக இருந்த மார்புகளை கொழுப்புத் திசுக்களால் மெல்ல மெல்லப் பூரித்து எழும்ப  வைக்கும்.  
  • பெண்களுக்கே உரித்தான மெத்தென்ற சருமத்தைக் கொடுக்கும்.
  • சினைப்பைகளை வளர்த்து, கரு முட்டையை உருவாக்கி, அதை வளர்த்து, மாதவிடாயாக வெளிப்படுத்தும். இதைத் தான் ‘பெரியவளாகி விட்டாள்’ நாம் என்று கொண்டாடுகிறோம்.
  •  மாதந்தோறும் பீரியட்ஸ் ரெகுலராக வர வேண்டுமென்றாலும் ஈஸ்ட்ரோஜனின் உதவி தேவை.  
  • தாம்பத்திய உறவின்போது, அந்தரங்க உறுப்பில் ஈரப்பதத்தை ஏற்படுத்தி உறவு நேரத்தை வலியில்லாமல் வைக்கும்.
  • கருப்பையைத் தேவையான அளவுக்கு வளர்க்கும். கருப்பையின் உள்ளே இருக்கிற என்டோமெட்ரியம் திசு வளர உதவி செய்யும். இந்த என்டோமெட்ரியம் திசுவில்தான் கருவானது பதிந்து உருவாகும். சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால், கருவில் இருக்கிற சிசுவின் மெத்தை இந்த என்டோமெட்ரியம். இந்த மெத்தையை உருவாக்குவது ஈஸ்ட்ரோஜன்.

எலும்புகளை வலுவாக இருக்க வைக்கும்.  
உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த வளர்சிதை மாற்றம் நிகழ்ந்தால்தான் உடலில் இருக்கிற கழிவுகள் வெளியேறி, நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.  
உடம்பில் தேவையான கொழுப்புச் சத்தைச் சேமித்து வைக்கும். ஈஸ்ட்ரோஜன் குறைந்தால் என்ன நடக்கும்?

  • சிறுமிகள் என்றால், வயதுக்கு வரத் தாமதமாகும். மார்பக வளர்ச்சி, அக்குள் முடி, அந்தரங்க முடி வளராது.  
  • வயதுக்கு வந்த பிறகு குறைந்தால்,  3 அல்லது 4 மாதத்துக்கு ஒரு தடவை பீரியட்ஸ் வரலாம்.
  • திருமணத்துக்குப் பிறகு குறைந்தால் உறவின்போது வலி இருக்கலாம்.
  • நடுவயதின்போது குறைந்தால், ஆஸ்டியோபோரோசிஸ். என்கிற எலும்புத்தேய்மான பிரச்னை வரும்.  
  • மெனோபாஸ் நேரத்தில்  உடம்பு திடீரென்று சூடாவதற்கும், அடுத்த நொடி உடல் நார்மல் டெம்பரேச்சருக்கு வந்துவிடுவதற்கும், பிறப்புறுப்பு வறண்டு போய் தாம்பத்திய தருணங்கள் வலி மிகுந்து இருப்பதற்கும் ஈஸ்ட்ரோஜன் குறைபாடுதான் காரணம்.  
Hormones

ஈஸ்ட்ரோஜன் அதிகமானால் என்ன நடக்கும்?

  • ஈஸ்ட்ரோஜன் அதிகமாவது ரொம்பவும் அரிதாக நிகழ்கிற ஒரு விஷயம். சினைப்பையில் புற்றுநோய் வந்தால் ஈஸ்ட்ரோஜன் அதிகமாகச் சுரக்கும்.
  •  கருத்தடை மாத்திரை சாப்பிடுகிறவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வருகிறது.
  •  நீங்கள் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுகிறீர்கள் என்றால், அதன் லேபிளில் ஈஸ்ட்ரோஜன் கலக்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்.
  •  ஈஸ்ட்ரோஜன் அதிகமானால், உடல் எடை அதிகரிக்கும்.
  • மாதவிடாயின்போது ரத்தப் போக்கு குறையும் அல்லது அதிகரிக்கும்.
  • குறைவது போலவே ஈஸ்ட்ரோஜன் அதிகமானாலும் பிறப்புறுப்பு வறண்டுபோய், உறவின்போது வலி ஏற்படும்.
Hormones

ஈஸ்ட்ரோஜன் அளவைப் பரிசோதித்து தெரிந்துகொள்ள முடியுமா?

முடியும். ஒரு சிறுமி வயதுக்கு வரவில்லை என்றாலோ, அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் வந்தாலோ ஈஸ்ட்ரோஜன் அளவை அதற்கான ரத்த பரிசோதனை  estradiol (E2) மூலம் தெரிந்துகொள்ளலாம். குழந்தையில்லாமல் இருப்பவர்களுக்கு கருமுட்டை வளர்ச்சி இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளவும், மெனோபாஸ் வரப்போகிறதா என்று தெரிந்துகொள்ளவும் இந்தப் பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனையை மாதவிடாய் வந்த 2 -ம் நாளிலிருந்து 5-ம் நாளுக்குள் செய்ய வேண்டும்.  

இதற்கான மாத்திரையே இருக்கிறது. ஆனால், அதை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடவே கூடாது. உணவுப் பொருள்களில் சோயாவில் ஈஸ்ட்ரோஜன் அதிகம் இருக்கிறது. ஆனால், அதையும்கூட ரத்த பரிசோதனை செய்து, உங்கள் உடம்புக்குத்  தேவையான அளவுக்கு மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு சாப்பிடுவதே நல்லது.