Actor Vijay watched the trailer of Alangu
Actor Vijay watched the trailer of Alangu
Listen to this article

‘உறுமீன், பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்கியிருக்கும் மற்றொருப் படம் ‘அலங்கு’. குணாநிதி காதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அம்பானி, ஸ்ரீரேகா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.

அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா செளமியா தயாரித்திருக்கும் இந்தப் படம், தமிழக – கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள், விலங்குகளின் கழிவுகளால் ஏற்படும் ஆபத்து மற்றும், புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கை ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

Actor Vijay watched the trailer of Alangu

இந்தப் படம் 27-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில், படக் குழு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை சந்தித்து வாழ்த்துப் பெற்றது. திரைப்படத்தின் டிரைலரைப் பார்த்த நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் படக்குழுவினரைப் பாரட்டியிருக்கிறார்.