morning bath
morning bath
Listen to this article

Beauty and health are hidden in the morning bath..!

Skin care is not about making the skin white. It is about revealing your original color without any impurities like blackheads, whiteheads, dead cells, and soft like a single petal of a rose. Ayurvedic cosmetologist Rekha Rao tells you natural ways to get such skin.

Does your skin glow naturally?

The first enemy of skin beauty is constipation. Eat a piece of papaya every night after dinner to prevent waste from accumulating inside the body. If the inside is clean, it will gradually start reflecting on the outside as well. Don’t forget to drink water no matter how much work you do. Eat one fruit every day, such as orange, grapefruit, or pomegranate. If there is no fruit at home, drink lemon juice mixed with honey. You will see a big difference in your skin’s glow within a month. Want to tighten loose skin?

Take equal amounts of gram flour, rice flour, and lentil flour, mix them with plain water and make a pack. Apply it on your face and neck wherever your skin is loose, soak it for 20 minutes, and then take a bath. Your skin will start to tighten. Even if you don’t have rice flour or lentil flour, at least make a pack with gram flour. Gram flour has a lot of skin tightening properties.

This is the way to remove dead skin cells!

Taking a bath within half an hour of waking up in the morning is the only proper way to remove dead skin cells. Because, every organ in our body starts working on removing waste from 11 pm. The last organ to remove waste in the morning is the skin. Therefore, if you take a bath within a short time of waking up, all the dead cells will come out.

Morning bath gives both beauty and health. Apart from that, lukewarm water will gently open the skin pores, remove the dead cells, and close the pores again. Hot water opens the pores of the skin and removes dead cells, but does not close them again. As a result, the skin gradually dries out and starts to sag. Those who want a natural scrub to remove dead cells can grind dried pomegranate peel with seaweed and rub it on the body and bathe.

If the skin is itchy, add a handful of neem leaves, basil leaves or a teaspoon of basil powder, and half a teaspoon of turmeric powder to the bath water and bathe in that water in the morning. Ways to brighten dull skin.

No spice items, only steamed foods, then one glass of water a day, fruits… These are the four natural beauty secrets to brighten.

To keep dry skin moisturized…

Everyone knows the way is moisturizer. But the best choice is extra virgin coconut oil, which is rich in natural vitamin E. When you are slightly damp after taking a bath, your skin pores are open. At this time, if you apply a small amount of coconut oil, the oil will be absorbed into the skin in 3 minutes. This natural moisturizer will last until night. Apart from this, if you want your skin to always be moisturized, you should eat a teaspoon of melted ghee every day with breakfast or lunch. Those who have diabetes or cholesterol problems should consult your doctor and follow these instructions!

How to know symptoms of Strep Throat?

How to know symptoms of Breast Cancer

How to know about kidney stone pain?

காலை நேர குளியலில் ஒளிந்திருக்கிறது அழகும் ஆரோக்கியமும்..!

ரும பராமரிப்பு என்பது சருமத்தை வெள்ளை வெளேரென்று மாற்றுவது கிடையாது. உங்களுடைய ஒரிஜினலான நிறத்தை பிளாக் ஹெட், ஒயிட் ஹெட், டெட் செல் என எந்த மாசு மருவும் இல்லாமல், ரோஜாவின் ஒற்றை இதழ்போல மென்மையாக வெளிப்படுத்துவதுதான். இப்படிப்பட்ட சருமத்தை நீங்களும் பெறுவதற்கு இயற்கை வழிகள் சொல்லித் தருகிறார் ஆயுர்வேத காஸ்மெட்டாலஜிஸ்ட் ரேகா ராவ்.

morning bath

நேச்சுரலா ஜொலிக்கணுமா உங்க ஸ்கின்?

சரும அழகுக்கு முதல் எதிரி மலச்சிக்கல். தினமும் இரவு உணவுக்குப் பிறகு கண்டிப்பாக ஒரு துண்டு பப்பாளிப்பழம் சாப்பிட உடம்பின் உள்ளே கழிவுகள் சேராது. உள்ளே சுத்தமாக இருந்தால், அது மெல்ல மெல்ல வெளிப்பகுதியிலும் எதிரொளிக்க ஆரம்பிக்கும்.

எத்தனை வேலைப்பளு இருந்தாலும் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை என்று தினமும் ஒரு பழம் கட்டாயம் சாப்பிடுங்கள். வீட்டில் பழமே இல்லையென்றால் லெமன் ஜூஸாவது தேன் கலந்து குடியுங்கள். ஒரு மாதத்திலேயே சரும பளபளப்பில் நல்ல வித்தியாசம் தெரியும்.தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்கணுமா?

கடலை மாவு, அரிசி மாவு, பாசிப்பயறு மாவு மூன்றையும் சம அளவு எடுத்து, வெறும் தண்ணீரில் கலந்து பேக் போல ரெடி செய்யுங்கள். முகம், கழுத்து என்று எங்கெல்லாம் சருமம் தளர்ந்துபோய் இருக்கிறதோ அங்கெல்லாம் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து குளியுங்கள். சருமம் இறுக்கமாக ஆரம்பிக்கும். அரிசி மாவும் பாசிப்பயறு மாவு கிடைக்கவில்லை என்றாலும் கடலை மாவிலாவது பேக் போடுங்கள். கடலை மாவுக்கு சருமத்தை இறுக்கமாக்கும் தன்மை அதிகம்.

சருமத்தின் இறந்த செல்களை நீக்க இதுதான் வழி!

காலையில் எழுந்ததில் இருந்து அரை மணி நேரத்துக்குள் குளிப்பது மட்டுமே சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கான முறையான வழி. ஏனென்றால், நம் உடலில் இரவு 11 மணியில் இருந்து ஒவ்வொரு உறுப்பாக கழிவு நீக்க வேலையை செய்ய ஆரம்பிக்கும்.

இதில் கடைசியாக காலையில் கழிவுகளை நீக்குகிற உறுப்பு சருமம். அதனால் கண் விழித்த சிறிது நேரத்துக்குள் குளித்துவிட்டால் இறந்த செல்கள் அத்தனையும் வெளியேறி விடும். அழகு, ஆரோக்கியம் இரண்டையும் காலை நேர குளியல் தரும். தவிர, நகச்சூடு அளவுள்ள தண்ணீர் தான் சருமத் துவாரங்களை மென்மையாகத் திறந்து இறந்த செல்களை வெளியேற்றுவதோடு, மறுபடியும் துவாரங்களை மூடவும் செய்யும். அதிகமாக சூடுள்ள தண்ணீர் சரும துவாரங்களைத் திறந்து இறந்த செல்களை வெளியேற்றுமே தவிர துவாரங்களை மறுபடியும் மூடாது. இதனால், சருமம் மெல்ல மெல்ல உலர்ந்து, தளர ஆரம்பிக்கும்.

இறந்த செல்களை வெளியேற்ற எங்களுக்கு இயற்கையான ஸ்கிரப்பரும் வேண்டும் என்பவர்கள் உலர்ந்த மாதுளைத் தோலை பாசிப்பயிறுடன் சேர்த்து அரைத்து, உடம்பில் தேய்த்துக் குளிக்கலாம். சருமத்தில் நமைச்சல் இருந்தால், கைப்பிடி வேப்ப இலை, துளசியிலை அல்லது ஒரு டீஸ்பூன் துளசிப் பொடி, அரை டீஸ்பூன் பூசு மஞ்சள் தூள் ஆகியவற்றை குளிக்கும் நீரில் போட்டு, காலையில் அந்தத் தண்ணீரில் குளித்து விடுங்கள்.மங்கிய சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்…

நோ மசாலா ஐட்டம்ஸ், ஒன்லி ஆவியில் வேக வைத்த உணவுகள், பிறகு தினமொரு இளநீர், பழங்கள்… இந்த நான்கும்தான் இயற்கையான பொலிவு தரும் அழகு ரகசியங்கள்.

வறண்ட சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க…

எல்லோருக்கும் தெரிந்த வழி மாய்ஸ்ரைசர்தான். ஆனால், அதைவிட இயற்கையான விட்டமின் ஈ நிறைந்த செக்கு தேங்காய் எண்ணெய்தான் பெஸ்ட் சாய்ஸ். குளித்தவுடன் லேசான ஈர உடம்புடன் இருக்கும்போது, உடம்பில் சருமத் துவாரங்கள் திறந்திருக்கும். இந்த நேரத்தில் சிறிதளவு செக்கு தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டால், 3 நிமிடங்களில் எண்ணெய் சருமத்தினுள்ளே போய்விடும்.

இந்த இயற்கை மாய்ஸ்ரைசர் இரவு வரை தாங்கும். இதைத் தவிர, உங்கள் சருமம் எப்போதும் ஈரப் பதத்துடன் இருக்க வேண்டுமென்றால், தினமும் ஒரு டீஸ்பூன் உருக்கிய நெய்யை காலை அல்லது மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். நீரிழிவு அல்லது கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்கள் உங்கள் மருத்துவரை ஆலோசித்து இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்!