To Read this Post , Use Translator for Your language

How to know Molar Tooth Pain? - healthtamil.com
Molar Tooth Pain
Molar Tooth Pain
Listen to this article

What is Molar Tooth Pain ? கடைவாய் பல் வலி (மோலார் பல் வலி) என்றால்  என்ன?

Pain in the teeth, jaw, and surrounding areas of the jaw indicates dental pain, which is usually the result of tooth decay. Molar teeth can be located in the back of the mouth. There are four such teeth, two in the upper part of the jaw and two in the lower part of the jaw. Some of these molar teeth do not develop or all four molar teeth do not develop. In some people, such molar teeth grow obliquely. , putting pressure on the surrounding teeth or gums. Such crooked tooth growth can be painful and make cleaning the area around the tooth difficult.

What are its main signs and symptoms?

The main signs and symptoms of molar toothache include:

A stiff or painful jaw that may be near a molar tooth.

Difficulty swallowing, brushing teeth and feeling uncomfortable when opening the mouth.

Tooth decay.

Closely growing teeth.

Abscess formation in the gums.

Infection or inflammation of the gums around the molars.

Bad smell.

Discomfort.

Food and bacteria build up between the wisdom tooth and adjacent teeth.

Swelling of the lymph nodes.

Pain or irritation in the tongue, chin, upper or lower part of the mouth if the tooth grows in at the wrong angle.

Gum disease.

fever

What are the main causes of infection?

The main causes of molar tooth pain are:

Inflammation of the pulp (the inner layer of the tooth).

Dental abscess (a build-up of bacteria and infected material in the center of the tooth).

Receding gums can cause sensitivity at the roots of molar teeth.

Lack of hygiene.

pus formation.

What is its diagnosis and treatment?

The doctor may perform tests to determine the cause of the molar tooth pain and may order an X-ray test to determine which molar tooth is causing the pain.

Molar tooth pain is treated with the help of following methods:

Over-the-counter pain relievers.

Antibiotics are prescribed.

Cleaning the infected area.

Perhaps if the tooth is severely affected, the removal of such a tooth is necessary.

Gargling with lukewarm salt water.

Root canal treatment.

Molar Tooth Pain

கடைவாய் பல் வலி (மோலார் பல் வலி) என்றால்  என்ன?

பற்கள், தாடை மற்றும் தாடையை சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றில் ஏற்படுகின்ற வலி பல் வலியினை குறிக்கின்றது.இது பொதுவாக பல் சிதைவின் விளைவினாலேயே ஏற்படுகின்றது. கடைவாய் பற்கள் என்பது வாயின் பிற்பகுதியில் அமைந்திருக்கக் கூடியவை.இத்தகைய பற்கள் மொத்தம் நான்கு இருக்கின்றன, அவை தாடையின் மேல் பகுதியில் இரண்டு மற்றும் கீழ் பகுதியில் இரண்டு என அமைந்திருக்கின்றன.

இத்தகைய கடைவாய் பற்கள் சிலருக்கு வளராமலோ அல்லது நான்கு மோலார் பற்களும் உருவாகாமல் குறைவான பற்கள் உருவாகுதல் போன்றவை ஏற்படலாம்.ஒரு சிலருக்கு, இத்தகைய மோலார் பல் சாய்வாக வளர்வதால், சுற்றியுள்ள பற்களுக்கோ அல்லது ஈறுகளுக்கோ அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.இத்தகைய சாய்வான பல் வளர்ச்சி நேரும் போது அது வலிமிக்கதாக இருப்பதோடு அந்த பல்லை சுற்றியுள்ள பகுதியை சுத்திகரிப்பதிலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

மோலார் பல் வலியை சார்ந்த முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

மோலார் பல் அருகே இருக்கக்கூடிய தாடை விறைப்பாகவோ அல்லது வலிமிகுந்ததாகவோ இருத்தல்.

விழுந்குதலில் சிரமம், பல் துலக்குதல் மற்றும் வாயை திறக்கையில் அசௌகரியமாக உணர்தல்.

பல் சிதைவு.

நெருங்கி வளரக்கூடிய பற்கள்.

ஈறுகளில் சீழ் உருவாக்கம்.

கடைவாய் பல்லைச் சுற்றியுள்ள ஈறுகளில் ஏற்படும் தொற்று அல்லது அழற்சி.

துர்நாற்றம் ஏற்படுதல்.

அசௌகரியம்.

விஸ்டம் பல் மற்றும் அதற்கு அருகிலுள்ள பற்களின் இடையில் உணவு மற்றும் பாக்டீரியா திரண்டிருத்தல்.

நிணநீர் முனைகளில் வீக்கம் ஏற்படுதல்.

தவறான கோணத்தில் பல் வளரும் பட்சத்தில் நாக்கு, கன்னம், வாயின் மேல் அல்லது கீழ் பகுதியில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுதல்.

ஈறு நோய்.

காய்ச்சல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

கடைவாய் பல் வலி ஏற்பட முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

பல் அடிக்கூழ்ப் பொருளில் ஏற்படும் அழற்சி (பல்லின் உட்புற அடுக்கு).

பல் சீழ்கட்டி (பாக்டீரியாவின் உருவாக்கம் மற்றும் தொற்றினால் பாதிக்கப்பட்ட பொருட்கள் பல்லின் மையத்தில் இருப்பது).

விலகியிருக்கும் ஈறுகள் மோலார் பல் வேர்களில் உணர்திறனை உண்டாக்கக்கூடியது.

சுகாதாரமின்மை.

சீழ் உருவாக்கம்.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

மருத்துவர் கடையவாய் பல்லில் வலி ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய பரிசோதனைகளை மேற்கொள்வதோடு எந்த மோலார் பல்லினால் வலி ஏற்படுகின்றது என்பதை அறிய எக்ஸ்-ரே சோதனையையும் பரிந்துரைக்கக்கூடும்.

கடைவாய் பல் வலி பின்வரும் முறைகளின் உதவியால் சிகிச்சையளிக்கப்படுகிறது:

ஓவர்-தி கவுண்டர் வலி நிவாரணிகள்.

ஆண்டிபயாடிக்ஸ் மருந்து பரிந்துரைக்கப்படுகின்றன.

தொற்றினால் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தம் செய்தல்.

ஒருவேளை பல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால், அத்தகைய பல்லை அகற்றுதல் அவசியம்.

உப்பு கலந்த மிதமான சுடு தண்ணீரில் வாய் கொப்பளித்தல்.

ரூட் கேணல் சிகிச்சை.

How to know about kidney stone pain?

What are causes undeveloped breasts?

How to know symptoms of Premature puberty

How to know of Rheumatic Heart Disease?