What is nephritis? குண்டிக்காய் அழற்சி
Cystitis is a condition in which one or both of a person’s kidneys become inflamed. Kidneys are an essential organ of the body as they remove excess water from the body along with waste and retain protein. In case of kidney damage, our body loses important nutrients like protein through urine. Cysts are of two types:
Chronic glomerulonephritis is a condition in which the blood vessel clusters swell so watery wastes are not cleared from the body.
Interstitial nephritis is inflammation of the space between the kidney’s capillaries called the interstitium, affecting kidney function.
What are the main effects and symptoms of the disease?
Its main symptoms are as follows:
Fever and general malaise.
Body swelling or inflammation.
Weight gain due to water retention.
Vomiting, stool and blood in urine.
Change in urinary output.
Venakatti.
Nausea and vomiting.
diarrhea
What are the main causes of infection?
Although the exact cause of nephritis is unclear, the causes may vary depending on the type.
Causes of Glomerulonephritis:
Disorders of the immune system.
A history of cancer.
Exposure to a hydrogen solvent called a hydrocarbon solvent.
Blood and lymphatic system disorders.
Viral infection, heart infection and abscess.
Lupus nephritis.
Irregularity in the basal layer of blood vessel ensembles plays an important role in purification.
Kidney diseases caused by taking too many painkillers.
Causes of Interstitial Nephritis:
Side effects of drugs.
Increased uric acid and calcium in the blood.
Infection.
Potassium deficiency in the blood.
Dependent delusional disorder.
Allergic reaction.
How is it diagnosed and treated?
The following can help diagnose glomerulonephritis:
Abdominal CT Scan.
Chest X-ray examination.
Ultrasound imaging of the kidneys.
Venous pyelogram.
Examination of urine creatinine clearance rate, protein content, uric acid, red blood cell etc.
The following can help diagnose interstitial nephritis:
The amount of blood urea nitrogen and creatinine in the blood is called PUN.
Complete blood cell count.
Ultrasound imaging of the kidneys.
Urine test.
Kidney tissue examination (biopsy).
Treatment of both nephritis depends on its cause. Disease condition can be managed by controlling the causes. Some of the measures to be taken to deal with Nephritis are:
Reducing salt intake to manage blood pressure.
Reducing protein intake to control waste formation.
Anti-inflammatory drugs.
Anti-hypertensive drugs (Read more: High blood pressure treatment).
For the kidney, a kidney transplant or kidney transplant may be needed.
குண்டிக்காய் அழற்சி (நெஃப்ரிடிஸ்) என்றால் என்ன?
குண்டிக்காய் அழற்சி என்பது ஒருவரின் ஒன்று அல்லது இரண்டு சிறுநீரகங்களும் வீக்கமடையும் ஒரு நிலை. சிறுநீரகங்கள் உடலில் மிகுதியான நீரை கழிவுகளோடு வெளியேற்றி புரதச்சத்தை தக்க வைத்துக்கொள்வதால் இது உடலின் ஒரு அவசியமான ஒரு உறுப்பாக இருக்கிறது. சிறுநீரகத்தில் சிதைவு ஏற்பட்டால் நம் உடல் புரதம் போன்ற முக்கியமான சத்துக்களை சிறுநீர் வழியாக இழக்க நேரிடும். குண்டிக்காய் அழற்சி இரு வகைப்படும்:
இரத்தக்குழாய் குழுமங்கள் வீங்கி அதனால் நீரும் கழிவும் உடலிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் இருக்கும் நிலையான குளோமரூலோநெஃப்ரெட்டிஸ்.
இண்டெர்ஸ்டைட்டம் எனப்படும் சிறுநீரகத்தின் நுண்குழாய்களுக்கு இடையே இருக்கும் இடைவேளை வீக்கமடைந்து அதனால் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படும் இண்டெர்ஸ்ட்டிடியல் நெஃப்ரெட்டிஸ்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதன் முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:
காய்ச்சல் மற்றும் பொதுவான நோயுற்ற உணர்வு.
உடல் வீக்கம் அல்லது அழற்சி.
நீர்தேக்கத்தினால் உடல் எடை அதிகரிப்பு.
வாந்தி, மலக்கழிவு மற்றும் சிறுநீரில் இரத்தம்.
சிறுநீர் வெளிப்பாட்டில் மாற்றம்.
வேனற்கட்டி.
குமட்டல் மற்றும் வாந்தி.
வயிற்றுப்போக்கு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
நெஃப்ரெட்டிஸ் வருவதற்கான சரியான காரணம் தெளிவாக தெரியாமல் போனாலும் அதன் வகைகளை பொறுத்து காரணங்கள் வேறுபடலாம்.
குளோமரூலோநெஃப்ரெட்டிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள்:
நோயெதிர்ப்பு மண்டலத்தின் வேளைக்கோளாறு.
புற்றுநோய் தாக்குதலின் வரலாறு.
ஹைட்ரோகார்பன் சால்வெண்ட் எனப்படும் நீரகக்கரிமம் கரைப்பானுக்கு வெளிப்படுதல்.
இரத்த மற்றும் நிணநீர் மண்டலம் ஒழுங்கின்மை.
நச்சுயிரித் (வைரஸ்) தொற்றுநோய், இதய நோய்த்தொற்று மற்றும் சீழ்க்கட்டி.
லூபஸ் நெஃப்ரெட்டிஸ்.
சுத்திகரிப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் இரத்தக்குழாய் குழுமங்களின் அடித்தள அடுக்கில் ஒழுங்கின்மை.
அதிக அளவில் வலி நிவாரணிகளை உட்கொள்வதால் வரும் சிறுநீரக நோய்கள்.
இண்டெர்ஸ்ட்டிடியல் நெஃப்ரெட்டிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள்:
மருந்துகளின் பக்க விளைவு.
இரத்தத்தில் சிறுநீர் அமிலம் மற்றும் சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமாதல்.
நோய்த்தொற்று.
இரத்தத்தில் பொட்டாசியம் குறைபாடு.
தற்சார்பு ஏமக்கோளாறு.
ஒவ்வாமையின் எதிர்வினை.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
குளோமரூலோநெஃப்ரெட்டிஸை கண்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ளவை உதவும்:
வயிற்றுப்பகுதியில் சி.டி. ஸ்கேன்.
மார்புப்பகுதியில் எக்ஸ்-கதிர்கள் சோதனை.
சிறுநீரகத்தின் அல்ட்ராசவுண்ட் எனப்படும் கேளாஒலி உருவரைவு.
சிரைவழி பையிலோக்ராம்.
சிறுநீரில் கிரியாடினின் அகற்றல் விகிதம், புரதச்சத்து, சிறுநீர் அமிலம், சிவப்பு இரத்த அணு போன்றவற்றை பரிசோதித்தல்.
இண்டெர்ஸ்ட்டிடியல் நெஃப்ரெட்டிஸை கண்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ளவை உதவும்:
இரத்தத்தின் பி.யூ.என் எனப்படும் இரத்த யூரியா நைட்ரஜன் மற்றும் கிரியாடினின் அளவு.
முழுமையான இரத்த அணு எண்ணிக்கை.
சிறுநீரகத்தின் அல்ட்ராசவுண்ட் எனப்படும் கேளாஒலி உருவரைவு.
சிறுநீர் பரிசோதனை.
சிறுநீரக திசுப் பரிசோதனை (பயாப்சி).
இரு நெஃப்ரெட்டிஸ்களின் சிகிச்சை முறையும் அதன் காரணங்களின் அடிப்படையில் அமையும். காரணங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நோய் நிலையை சமாளிக்கலாம். நெஃப்ரெட்டிஸை சமாளிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகள் பின்வருமாறு:
இரத்த அழுத்தத்தை சமாளிக்க உப்பு உட்கொள்ளும் அளவை குறைத்தல்.
கழிவு உருவாகுதலை கட்டுப்படுத்த புரதம் உட்கொள்ளும் அளவை குறைத்தல்.
அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.
உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகள் (மேலும் படிக்க: உயர் இரத்த அழுத்த சிகிச்சை).
சிறுநீரகத்திற்கு, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை அல்லது சிறுநீரக தூய்மிப்பு தேவைப்படலாம்.