What is Obsessive Compulsive Disorder (OCD)? தசை நடுக்கம்: திடீரென, தோள்பட்டையை அடிக்கடி அசைத்தல்/குலுக்குதல், கண் சிமிட்டுதல்
Obsessive compulsive disorder (OCD) is a disorder that affects a person’s mental health. This disorder can occur in both children and adults. A person suffering from this disorder will have repeated and uncontrollable painful thoughts for no reason. And compulsively urges you to engage in some urgent activity. Deep thoughts or images, compulsions can cause them great tension in their mind.
What are the main effects and symptoms of the disease?
The effects and symptoms of obsessive-compulsive disorder (OCD) include:
Triggers of repetitive thoughts and mental images that trigger tension.
Excessive sexual and religious thoughts to be avoided.
Repeatedly engaging in an activity or checking things. For example, checking hundreds of times a day to see if the gas is running or the door is locked.
Following certain patterns in performing daily activities, i.e. acting in a symmetrical pattern or in a more specific and precise way.
Compulsive counting (counting out loud / mentally (eg: seeing vehicles on the road, compulsively adding up the numbers on them).
Muscle tremors: Sudden, frequent shuddering/shaking of the shoulder, blinking, a sudden pulling sensation in the shoulder, and facial flushing. Nasal tics such as repeated grunting, throat clearing, sniffing.
Harsh thoughts about themselves or others.
Frequent hand washing or cleaning due to hygiene fear of dirt/germs.
What are the main causes of infection?
The main causes of obsessive-compulsive disorder (OCD) include:
An abnormal position in the brain.
environment.
Communication defects between different parts of the brain.
Genetic factors.
Abnormally low levels of serotonin.
How is it diagnosed and treated?
A psychological and physical examination is done to determine the cause of OCD. The doctor will ask how many times per hour the number of times per day your mood and activities of daily living are interrupted by symptoms such as being unable to control thoughts that are worrisome.
Treatment methods used to treat OCD include:
Medicines: Antidepressants are usually prescribed to the sufferer to help restore the balance of chemicals in the brain. Selective serotonin reuptake inhibitors (SSRIs) are prescribed to increase serotonin levels in the brain to help control the symptoms of OCD.
Psychotherapy: This type of therapy helps to control anxious and fearful thoughts.
Subconscious Brain Stimulation (TBS): This therapy is used to treat patients with OCD for at least five years. In this treatment, brain activity is stimulated by mild electric currents using electrodes.
How to know symptoms of Breast Cancer
How to know about kidney stone pain?
What are causes undeveloped breasts?
How to know symptoms of Premature puberty
பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (ஒ.சி.டி) என்றால் என்ன?
பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (ஒ.சி.டி) என்பது ஒரு நபரின் மனநலத்தை பாதிக்கும் ஒரு கோளாறு ஆகும். இந்த கோளாறு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் ஏற்படலாம். இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு காரணமே இல்லாத வேதனைப்படுத்தும் எண்ணங்கள் திரும்பத் திரும்ப அவர்களின் கட்டுப்பாடின்றி வந்துகொண்டே இருக்கும்.
மேலும் கட்டாயமாக சில அவசர செயல்பாடுகளில் ஈடுபடத் தூண்டுகிறது. ஆழ்ந்த எண்ணங்கள் அல்லது பிம்பங்கள், வற்பறுத்துதல் ஆகியவை அவர்களுக்கு பெருத்த பதற்றத்தை அவர்களது மனதில் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வின் (ஒ.சி.டி) தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
பதற்றத்தைத் தூண்டும் திரும்பத் திரும்ப வரும் எண்ணங்கள் மற்றும் மன ரீதியான பிம்பங்களின் தூண்டுதல்கள்.
அதிகப்படியான பாலியல் மற்றும் மதம் சார்ந்த விலக்கப்பட வேண்டிய எண்ணங்கள்.
மீண்டும் மீண்டும் ஒரு செயலில் ஈடுபடுதல் அல்லது காரியங்களை சரிபார்த்தல். உதாரணமாக, காஸ் வெளியேறுகிறதா அல்லது கதவு பூட்டப்பட்டதா என ஒரு நாளில் நூற்றுக்கணக்கான முறை சரி பார்த்தல்.
தினசரிச் செயல்பாடுகளை செய்யும்போது சில முறைகளை வரிசையாக கடைப்பிடித்தல், அதாவது ஒரு சமச்சீர் வடிவத்தில் அல்லது மிகவும் குறிப்பிட்ட மற்றும் துல்லியமான வழியில் செயல்படுதல்.
கட்டயமாக எண்ணுதல் (சத்தமாகவோ / மனதுக்குள்ளோ எண்ணுவது (எ.டு: சாலையில் வாகனங்களைப் பார்த்தால், அதிலுள்ள எண்களை கட்டாயமாக கூட்டிப் பார்ப்பது).
தசை நடுக்கம்: திடீரென, தோள்பட்டையை அடிக்கடி அசைத்தல்/குலுக்குதல், கண் சிமிட்டுதல், தோள்பட்டையில் திடீரென வெட்டி இழுத்தல் போன்ற உணர்வு மற்றும் முகச்சுளிப்பு போன்றவை ஆகும். மீண்டும் மீண்டும் உறுமுதல், தொண்டை கரகரத்தல், மோப்பம் பிடித்தல் போன்ற குறல் சார் நடுக்கங்கள்.
தங்கள் அல்லது பிறர் மீதான கடுமையான எண்ணங்கள்.
அழுக்கு / கிருமி பற்றிய துாய்மை கேடு பயத்தால் அடிக்கடி கை கழுவுதல் அல்லது சுத்தம் செய்தல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வு (ஒ.சி.டி) ஏற்பட முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
மூளையில் ஏற்படும் அசாதாரண நிலைப்பாடு.
சுற்றுச்சூழல்.
மூளையின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே உள்ள தகவல் தொடர்பு குறைபாடுகள்.
மரபணு காரணிகள்.
இயல்பற்ற குறைந்த அளவிலான செரோடோனின்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஓ சி டி ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிய உளவியல் மற்றும் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. உங்கள் தினசரி வாழ்க்கையின் மனவோட்டம் மற்றும் செயல்பாடுகள் அதாவது கவலையேற்படுத்தக்கூடிய இது போன்று எண்ணங்களை கட்டுப்படுத்தமுடியாமல் ஏற்படும் அறிகுறிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு ஒரு மணிநேரதில் எத்தனை முறை குறுக்கிடுகிறது என மருத்துவர் கேட்பார்.
ஓ சி டி நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
மருந்துகள்: மூளையில் உள்ள இரசாயனங்களின் சமநிலையை திரும்ப பெற உதவும் மனஅழுத்தம் நீக்கி மருந்துகள் பொதுவாக இந்நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. ஓ சி டி நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவும் வகையில் செலெக்டிவ் செரோடோனின் ரீஅப்டேக் தடுப்பான்கள் (எஸ்.எஸ்.ஆர்.ஐ) மூளையில் செரோடோனின் அளவை அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகின்றன.
உளவியல் சிகிச்சை: இந்த சிகிச்சை முறை கவலை தருகின்ற மற்றும் அச்சம் ஏற்படுத்துகிற எண்ணங்களை கட்டுப்படுத்த உதவுகின்றன.
ஆழ் மூளை தூண்டுதல் (டி பி எஸ்): இந்த சிகிச்சையானது குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஓ சி டி பாதிப்புடைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இச்சிகிச்சை முறையில் மின்முனைகளை பயன்படுத்தி மிதமான மின்சார மின்னோட்டங்கள் மூலம் மூளையின் செயல் திறன் தூண்டப்படுகிறது.