Vitamin A Food Types: வைட்டமின் ஏ உள்ள காய்கறிகள்
Vegetables with vitamin A
It is necessary to take nutritious food to keep our body healthy. Vitamin A is very important for everything from skin beauty to hair growth. Vitamin A is used to prevent vision loss.
Vitamin A increases lymphocytes that fight disease-causing antigens. Because these are used to increase the immunity of the body. In this post we have listed a few foods that are rich in vitamin A.
Read and know what those foods are and start eating more of those foods from now on.
Carrot:
Carrots are one of the healthiest and most nutritious vegetables. Carrots are rich in beta-carotene. Carrots are rich in vitamin A. 100 grams of carrots are rich in 836mcg of vitamin A. Eating carrots improves eyesight. To increase vitamin A content, more carrots should be included in the diet.
Liver:
Goat and chicken livers are also rich in vitamin A and minerals. Therefore, by adding goat liver and chicken liver to the diet, the body will get the necessary vitamin A nutrients.
Seafood:
100 grams of tuna fish is rich in vitamin A with 50%. Therefore, seafood rich in omega 3 fatty acids improves health.
Sugarcane is rich in vitamin A:
There are many varieties of yams. Moreover, sugarcane is rich in Vitamin A. Since sugarcane is rich in beta-carotene, adding more of it to the diet will provide the body with more vitamin A.
Vitamin rich greens:
Green leafy vegetables are low in calories. And green leafy vegetables are rich in vitamin A nutrients. Apart from vitamin A, green leafy vegetables and greens are also rich in nutrients like potassium, calcium, protein and manganese.

How to know health benefits of Pistachio
How to know the rules on eating food?
How to know health the nut foods?
How to know the benefits of papaya?
வைட்டமின் ஏ உணவு வகைகள்:
வைட்டமின் ஏ உள்ள காய்கறிகள்
நம்முடைய உடல் எப்போதும் ஆரோக்கியமாய் இருக்க சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். முக்கியமாக சரும அழகு முதல் கூந்தல் வளர்ச்சி வரை வைட்டமின் ஏ சத்து மிகவும் முக்கியம். கண் பார்வை குறைபாட்டினை தடுக்க வைட்டமின் ஏ சத்து பயன்படுகிறது.
வைட்டமின் ஏ நோய்களை உருவாக்கும் ஆன்டிஜென்களை எதிர்த்து போராடும் லிம்போசைட்டுகளை அதிகரிக்கிறது. ஏனெனில் இவைகள் தான் உடலில் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. இந்த பதிவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ள ஒரு சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம்.
அது என்னென்ன உணவுகள் என்று படித்து தெரிந்து கொண்டு, அந்த உணவுகளை இனிமேல் அதிகம் சாப்பிட ஆரம்பியுங்கள்.
கேரட்:
கேரட் அதிக ஆரோக்கியம் சத்து நிறைந்துள்ள காய்கறி வகையாகும். கேரட்டில் பீட்டா கரோட்டின் என்ற சத்து அதிகளவு காணப்படுகிறது. வைட்டமின் ஏ சத்து அதிகமாக கேரட்டில் உள்ளது. 100 கிராம் கேரட்டில் 836mcg வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. கேரட் சாப்பிடுவதால் கண் பார்வைத்திறன் அதிகாரிக்கும். வைட்டமின் ஏ சத்து அதிகரிக்க உணவில் அதிகமாக கேரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஈரல்:
ஆடு, கோழி போன்றவற்றின் ஈரலில் கூட அதிகமாக வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. எனவே ஆட்டு கறியின் ஈரல் மற்றும் கோழிக்கறியின் ஈரலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்துக்கள் கிடைக்கும்.
கடல் வகை உணவுகள்:
100 கிராம் டுனா மீனில் 50% வைட்டமின் ஏ சத்து அதிகளவு நிறைந்துள்ளது. எனவே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த கடல் சார்ந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்தைமேம்படுத்துகிறது.
வைட்டமின் ஏ அதிகமுள்ள சர்க்கரைவள்ளி கிழங்கு:
கிழங்கில் பல வகையான கிழங்கு வகைகள் உள்ளன. அதிலும் சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ சத்தானது அதிகமாக உள்ளது. சர்க்கரைவள்ளி கிழங்கில் பீட்டா கரோட்டீன் அதிகமாக இருப்பதால், உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் வைட்டமின் ஏ அதிகமாக கிடைக்கிறது.
வைட்டமின் சத்தான கீரைகள்:
குறைந்த அளவு கலோரிகளே பச்சை இலை காய்கறிகளில் இருக்கிறது. மேலும் பச்சை இலை காய்கறிகள் தான் அதிகளவு வைட்டமின் ஏ ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பச்சை இலை காய்கறிகள், கீரைகள் போன்றவற்றில் வைட்டமின் ஏ சத்தினை தவிர பொட்டாசியம், கால்சியம், புரதம் மற்றும் மாங்கனீசு போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.