Sensitive Teeth
Sensitive Teeth
Listen to this article

What are super sensitive teeth? மிகு உணர் பற்கள்

Sensitive teeth, also known as tooth sensitivity, is a common dental problem that causes tooth discomfort or pain.

What are the main effects and symptoms of the disease?

If you temporarily experience mild to severe discomfort when eating certain foods or being exposed to certain temperatures, you may have sensitive teeth. Symptoms can be mild or severe in many people. Sometimes it can occur for no apparent reason.

What are the main causes of infection?

Pain may occur in response to the following stimuli:

Hot and cold drinks.
Cold air.
Cold water.
Tooth brushing.
Sweet foods and drinks.
Acidic foods and drinks.
Enamel is the shiny, hard substance that surrounds the pulp of the tooth. It is the top layer of dentin that covers the crown of the tooth. Damage to the cementum or tooth enamel leads to hypersensitive teeth. This can be due to the following reasons.

Brushing too hard or brushing with a toothbrush that has too hard bristles.
Exposure to stomach acid (acid reflux disease).
At night, gnashing of teeth in sleep.
Eating or drinking acidic foods and drinks frequently.
Tooth fracture.
Filling molars with old fillings.
Teeth whitening.


How is it diagnosed and treated?

Usually, the patient complains of sensitive teeth to the doctor to determine whether there are any underlying dental problems (cavities, cavities) that need to be treated. To confirm the diagnosis, the sensitivity of your teeth is tested by how your teeth react to hot and cold foods. Oral X-rays help to make sure that there is no tooth decay that can lead to hypersensitive teeth.

Proper restoration of a fractured filling or denture is necessary to reduce hypersensitivity. Tooth enamel wear requires the use of toothpaste that tolerates irritation and a fluoride coating (varnish). Sometimes, fillings are made with dental amalgam (dental amalgam – a mercury alloy) or cement material to cover exposed dentin. .

Sensitive Teeth

If the cavity is deep or the pulp is exposed, there may be severe sensitivity to hot and cold foods. Orthodontic treatment corrects this.

If gingivitis is present, it is necessary to use mouthwashes that control hypersensitivity along with treatment to correct the gingivitis.

How to know symptoms of Vaginal Cancer?

How to know symptoms of Breast Cancer

How to know symptoms of Lung Cancer?

மிகு உணர் பற்கள் என்றால் என்ன?

மிகு உணர் பற்கள், அதாவது பல் கூச்சம் என்பது பற்களுக்கு அசௌகரியம் அல்லது வலியை  ஏற்படுத்தும் ஒரு பொதுவான பல் சார்ந்த பிரச்சினையே ஆகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

சில உணவுகள் உட்கொண்டிருக்கும் போது, ​​சில குறிப்பிட்ட வெப்பநிலைகளில் வெளிப்படும் போது, ​​நீங்கள் மென்மையானதில் இருந்து கடுமையானது வரையிலான அசௌகரியத்தை தற்காலிகமாக அனுபவித்தால், உங்களுக்கு மிகு உணர் பற்கள் இருக்கக்கூடும்.அறிகுறிகள் பல நபர்களில் லேசான அல்லது கடுமையானதாக இருக்கலாம்.சில நேரங்களில் இது வெளிப்படையான காரணமின்றி ஏற்படலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பின்வரும் தூண்டுதல்களின் எதிர்வினையாக வலி ஏற்படக்கூடும்:

வெப்ப மற்றும் குளிர் பானங்கள்.

குளிர்ந்த காற்று.

குளிர்ந்த நீர்.

பல் துலக்குதல்.

இனிப்பு உணவுகள் மற்றும் பானங்கள்.

அமில உணவுகள் மற்றும் பானங்கள்.

பல் மிளிரி (எனாமல்) எனப்படுவது பளபளப்பானதும் கடினமானதுமான பதார்த்ததாலான, பல்முடியில் இருக்கும் பன்முதலைச் சூழ்ந்திருக்கும் பகுதியாகும். இது டென்டைன் எனும் பல்லெலும்பின் (பற்தந்தம்) பற்கிரீடத்தை மூடும் மேற்புற அடுக்காகும்.பற்காரை (சிமென்டம்) அல்லது பல் மிளிரிக்கு ஏற்படும் சேதமே மிகு உணர் பற்கள்களுக்கு வழிவகுக்கிறது.இது பின்வரும் காரணங்களினால் ஏற்படக்கூடும்

மிகவும் கடினமாக பல் துலக்குதல் அல்லது மிகவும் கடினமான முட்கள் நிறைந்த பல் துலக்கும் தூரிகை (டூத்பிரஷ்) கொண்டு பல் துலக்குதல்.

வயிற்று அமிலத்திற்கு வெளிப்படுதல் (அமிலப் பின்னோட்ட நோய்).

இரவில், தூக்கத்தில் பற்களைக் கொறித்தல்.

அடிக்கடி அமிலம் நிறைந்த உணவுப்பொருட்கள் மற்றும் பானங்களை சாப்பிடுதல் அல்லது குடித்தல்.

பல் முறிவு.

பழைய நிரப்பிகளை கொண்டு சொத்தைப்பற்களை நிரப்புதல்.

பற்களை பளிச்சிட செய்தல்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

பொதுவாக, நோயாளியே தனக்கு மிகு உணர் பற்கள் இருப்பதாக மருத்துவரிடம் புகார் செய்து சிகிச்சையளிக்க வேண்டிய, அடிப்படை பல் சார்ந்த பிரச்சனைகள் (பற்குழி, பற்சொத்தை) ஏதேனும் உள்ளதா என்று உறுதி செய்து கொள்வார்.

உங்கள் பல் மருத்துவர் பற்களின் வேர்களில் கூச்சத்தை ஏற்படுத்தக்கூடிய எனாமல் தேய்மானம் அல்லது ஈறுகளில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்பதை அறிய பற்களை முழுவதுமாக பரிசோதித்துப் பார்ப்பார்.

நோயறிதலை உறுதிப்படுத்த, உங்கள் பற்களின் உணர்திறன் சூடான மற்றும் குளிர்ந்த உணவுப்  பொருட்களை உட்கொள்ளும் போது, அதற்கு உங்கள் பற்கள் எவ்வாறு எதிர்வினை அளிக்கிறது என்பதன் மூலம் சோதிக்க்கப்படுகிறது.வாய்  எக்ஸ்-கதிர்கள் மிகு உணர் பற்களுக்கு வழிவகுக்கக்கூடிய பற் சொத்தை ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய உதவுகிறது.

மிகு உணர்திறனைக் குறைப்பதற்கு முறிவு ஏற்பட்ட நிரப்புதல் அல்லது பற்சொத்தை ஆகியவற்றை முறையாக மறுசீரமைத்தல் அவசியமாகும்.பல் மிளிரி தேய்மானத்திற்கு பல் கூச்சத்திற்கு சகிச்சையளிக்கக்கூடிய பற்பசை மற்றும் ஃபுளூரைடு பூச்சு (வார்னிஷ்) பயன்படுத்த வேண்டும்.சில நேரங்களில், வெளிப்படும் டென்டைனை மறைப்பதற்கு ரசக்கலவை (டென்டல் அமால்கம் – ஓர் மெர்குரி உலோகக் கலப்பு) அல்லது சிமெண்ட் பொருளால் நிரப்புதல் செய்யப்படுகிறது.

பற்குழி ஆழமாக இருந்தால் அல்லது கூழ் வெளிப்படும் போது, ​​சூடான மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களுக்கு கடுமையான உணர்திறன் இருக்கக்கூடும்.பல் கால் வாய் சிகிச்சை இதனை சரிசெய்கிறது.

பல் ஈறு நோய் இருப்பின், ஈறு நோயை சரி செய்ய மேற்கொள்ளப்படும் சிகிச்சையுடன் மிகு உணர்திறனை கட்டுப்படுத்திக்கூடிய மவுத்வாஷ்களைப் பயன்படுத்துவது அவசியமாகும்.