Way and Mode of Breastfeeding
Way and Mode of Breastfeeding
Listen to this article

Mode of Breastfeeding:

Wait patiently until the baby opens its mouth. Do not press the baby’s mouth on the mother’s breast. The baby’s mouth should be open.

The baby’s mouth should be inside the areola, not just the nipple. The baby’s lower lip should be open outwards.

Make sure that the lower jaw of the baby touches the lower part of the breast. Breastfeeding should be done whenever the baby asks for milk.

A baby does not need any food other than breast milk for six months after birth. Breast milk also contains the water that the baby needs.

If the baby urinates at least six times a day in the first month after birth, it means that the baby is absorbing breast milk well. If the urine is yellow or smelly, the mother should understand that the baby is not drinking enough breast milk.

In the first 10 days after birth, the baby loses six to seven percent of its weight. Birth weight is returned within 10 to 15 days. On the other hand, if you look thin, it means that you are not drinking enough breast milk.

It is wrong to alternate breast milk and formula milk. This will affect the baby’s digestive system. Problems like allergies, asthma, diarrhea may occur. Also, if the baby drinks the milk in one breath, it can cause respiratory problems.

There is no correlation between breast size and breast milk secretion in lactating women. The amount of breast milk secretion depends on the number of tissue glands in the breast and the way they are stimulated. Even the desire to breastfeed the baby can stimulate a mother’s mammary glands.

How to know Breast pain prevention?

How to know Causes of breast pain?

How to know types of Breast Pain?

தாய்(ப்)பால் புகட்டும் முறை:

குழந்தை வாய் திறக்கும்வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். குழந்தையின் வாயைத் தாயின் மார்பகத்தில் வைத்து அழுத்தக் கூடாது. குழந்தையின் வாய் திறந்த நிலையில் இருக்க வேண்டும்.

மார்பகக் காம்பில் மட்டுமே வாய் வைக்காமல், காம்புப் பகுதியைச் சுற்றி உள்ள கறுப்புப் பகுதி முழுவதும் (Aerola) குழந்தையின் வாய்க்குள் இருக்க வேண்டும். குழந்தையின் கீழ் உதடு வெளிப்புறமாகத் திறந்திருக்க வேண்டும்.

குழந்தையின் கீழ்த்தாடை மார்பகத்தின் கீழ்ப் பகுதியைத் தொட்ட நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பால் கேட்கும் நேரங்களில் எல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் குழந்தைக்குத் தேவை இல்லை. குழந்தைக்குத் தேவையான தண்ணீரும்கூட தாய்ப்பாலிலேயே இருக்கிறது.

குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது ஆறு முறை சிறுநீர் கழித்தால், தாய்ப்பாலை நன்றாக உறிஞ்சிக் குடித்திருக்கிறது என்று அர்த்தம். சிறுநீர் மஞ்சளாகவோ அல்லது நாற்றம் எடுத்தாலோ குழந்தை தனக்குத் தேவையான அளவு தாய்ப்பாலைக் குடிக்கவில்லை என்பதை அம்மா புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தை பிறந்த முதல் 10 நாட்களுக்குள் ஆறு முதல் ஏழு சதவிகிதம் எடை குறையும். 10 முதல் 15 நாட்களுக்குள் பிறந்தபோது இருந்த எடை மீண்டும் வந்துவிடும். மாறாக மெலிந்தே காணப்பட்டால் தாய்ப்பாலைச் சரிவரக் குடிக்காமல் இருக்கிறது என்று அர்த்தம்.

தாய்ப்பாலையும் புட்டிப்பாலையும் மாற்றி மாற்றிக் கொடுப்பது தவறு. இதனால் குழந்தையின் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். ஒவ்வாமை, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் வரலாம். மேலும், புட்டிப்பாலை ஒரே மூச்சில் குழந்தை குடித்துவிடுவதால் சுவாசப் பிரச்னைகளும் உருவாகும்.

தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் இல்லை. மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கை, அவை தூண்டப்படும் விதத்தைப் பொருத்தே தாய்ப்பால் சுரக்கும் அளவு அமைகிறது. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம்கூட ஒரு தாயின் தாய்ப்பால் சுரப்புத் திசுக்களைத் தூண்டும்.

Read More:

What causes underdeveloped breasts?

மார்பகங்களின்வளர்ச்சிகுறைவாகஇருப்பதற்குஎன்னகாரணம்? வளர்ச்சியடையாத மார்பகங்களுக்கு என்ன காரணம்?