புடவை என்பது பெண்கள் மிகவும் விரும்பி அணியக்கூடிய ஆடை. அதுமட்டுமில்லாமல் மற்ற ஆடைகளை விட புடவையில் தான் பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். எனவே இதனை விரும்பி அணிவார்கள்.
இருப்பினும், சரியான உடலமைப்பு இருந்தால் தான் புடவை கட்டினால் அழகாக இருக்கும். இதனால் குட்டையாக இருக்கக்கூடிய பெண்கள் புடவை கட்டுவதை அதிகம் விரும்ப மாட்டார்கள். உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் புடவை கட்டினால் இன்னும் குட்டையாக தெரிவார்கள்.
எனவே உயரம் குறைவாக இருக்கக்கூடிய பெண்கள் புடவையில் உயரமாக தெரிய என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
What To Do To Look Taller in Saree in Tamil:
பெரிய பார்டர் உள்ள புடவையை அணிய கூடாது:

உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் பெரிய பார்டர் உள்ள புடவையை அணிய கூடாது. ஏனென்றால், பெரிய பார்டர் உள்ள புடவைகள் அவர்களின் உயரத்தை இன்னும் குறைவாகவே காட்டும். அதற்கு பதிலாக, சிறிய பார்டர் கொண்ட புடவைகளையும், குறைவான டிசைன் உள்ள புடவையையும் அணிவதன் மூலம் உயரம் அதிகமாக தெரியும்.
லேசான புடவைகளை அணிய வேண்டும்:

உயரம் குறைவாக இருக்கக்கூடிய பெண்கள் சிஃப்பான், ஜார்ஜெட், சில்க் போன்ற மெல்லிய துணியால் தயாரிக்கப்பட்ட புடவைகளை அணிய வேண்டும். ஏனென்றால், லேசான துணியில் உள்ள புடவைகள் தான் உயரத்தை அதிகப்படுத்தி காட்டும்.
செங்குத்தான கோடுகளை உடைய புடவைகள்:
உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் செங்குத்தான கோடுகளில் வடிவமைக்கப்பட்ட புடவைகளை அணிவதன் மூலம் உயரமாக தெரிவார்கள். செங்குத்து கோடுகள் உயரமாக இருப்பதை போன்ற தோற்றதை அளிக்கும். எனவே உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு செங்குத்து கோடுகளை கொண்ட புடவைகள் நல்ல தீர்வாக இருக்கும்.

லாங் நெக் டிசைன் உடைய பிளவுஸ்களை அணிய கூடாது:
உயரம் குறைவாக இருக்கும் பெண்கள், சரியான அளவில் நெக் டிசைன்கள் உடைய பிளவுஸ்களை அணிய வேண்டும். லாங் நெக் டிசைன் உடைய பிளவுஸ்களை அணிய கூடாது. அதற்கு பதிலாக, V- வடிவ நெக் டிசைன்கள், சதுரம் மற்றும் ஸ்வீட் ஹார்ட் போன்ற வடிவங்களில் உள்ள பிளவுஸ்களை அணிய வேண்டும்.
கருப்பு நிற புடவை அணிதல்:

கருப்பு நிற புடவை உடலை ஒல்லியாக காட்டுவது மட்டுமின்றி உயரத்தையும் அதிகப்படுத்தி காட்டும். எனவே உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு கருப்பு நிற புடவை ஏற்றதாக இருக்கும்.