Vulvitis
Vulvitis
Listen to this article

What are the main effects (புணர்புழை அழற்சி) and symptoms of Vulvitis the disease?

What is Vulvitis?

Cystitis is inflammation of the scrotum, the small folds of skin in the female genital area that cover the vagina. It is not a disease, but a symptom with many possible causes.

What are the main effects and symptoms of the disease?

Its effects and symptoms include:

Swelling, redness, pain in groin area.

Intense itching.

Painful blisters filled with clear fluid.

Scaly and thick white patches on the scrotum.

Touch sensitivity in the neck.

Pain while urinating.

What are the main causes of infection?

Bursitis can occur due to the following reasons:

Sexual intercourse with many people.

Having unprotected sex.

Bacterial infections of group A β-hemolytic Streptococcus hemiphilillus influenzae, Shigella, and Candida albicans.

Using perfumed or dyed toilet paper.

Using detergents with strong scents or harsh chemicals for laundry.

Laundry detergents that leave residue on underwear and come in contact with the genital area.

Vaginal sprays / male spermicide.

Certain clothing can cause chafing.

Engaging in sports activities such as swimming in chlorinated water.

Medical history of skin diseases such as pruritic dermatitis or eczema.

How is it diagnosed and treated?

Diagnostic evaluation includes a detailed medical history, examination of the pelvis and genitals. Laboratory tests such as complete blood count (CBC), urinalysis, and Pap smear test (examination of cervical cells) are performed to detect changes or inflammation/infection.

Treatment for cystitis depends on many factors, including age, cause, severity, and tolerance to certain medications.

Treatment includes topical application of anti-inflammatory medications including cortisone and the use of topical antifungal agents. If only vulvovaginitis is diagnosed, in cases where atrophic vaginitis is present, topical ethrosan preparations are used.

Self-help measures include avoiding the use of irritants, ensuring personal hygiene, washing the genital area several times a day, wearing cotton underwear, and keeping the genital area dry.

Vulvitis

Preventive measures include:

Use mild soaps that are fragrance and chemical free.

Avoid using perfumed or dyed toilet paper and wipe the genital area from front to back.

Avoid using external irritants and chemicals like foam, jelly etc.

Only cotton clothes and underwear should be worn.

Avoid swimming in chlorinated pools for long periods of time.

How to Know tips to have a healthy delivery

How to know Age death by blood test!

How to know The Nervous System in body?

புணர்புழை அழற்சி (உபத்தவழற்சி) என்றால் என்ன?

புணர்புழை அழற்சி என்பது கருவாயின் வீக்கம், அதாவது யோனியை மூடும் பெண் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள சிறு தோல் மடிப்புகள் ஆகும். இது ஒரு நோயல்ல, ஆனால் பல சாத்தியமான  காரணங்கள் கொண்ட ஒரு அறிகுறியாகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இதன் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

கருவாய் பகுதியின் வீக்கம், சிவத்தல், வலி மிகுதி.

தீவிரமான அரிப்பு.

தெளிவான திரவம் நிறைந்த வலியுடன் கூடிய கொப்புளங்கள்.

கருவாய் மீது செதில் மற்றும் அடர்த்தியான வெள்ளை திட்டுக்கள்.

கருவாயில் தொடு உணர்திறன்.

சிறுநீர் கழிக்கும் போது வலி.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பின்வரும் காரணங்களினால் புணர்புழை அழற்சி ஏற்படலாம்:

பலருடனான பாலியல் தொடர்பு.

பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டிருத்தல்.

குழு ஏ β- ஹீமோலிடிக் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஹெமிஃபிலிலஸ் இன்ஃப்ளூயன்ஸா, ஷிகெல்லா, மற்றும் கேண்டிடா அல்பிகான்கள் ஆகியவரின் பாக்டீரியா நோய்த் தொற்று.

வாசனை திரவியங்கள் அல்லது சாயமிட்ட டாய்லெட் பேப்பர்களைப் பயன்படுத்துதல்.

வலுவான மணம் அல்லது வலிய இரசாயனங்கள் கொண்ட சோப்புகளை சலவை செய்வதற்கு  பயன்படுத்துதல்.

உள்ளாடைகளில் எச்சங்களை விட்டுச் சென்று கருவாய் பகுதியுடன் தொடர்பு கொள்ளும் சலவை சோப்புகள்.

யோனி தெளிப்பான்கள் / ஆண்களின் விந்துக்களைக் கொல்கின்ற மருந்து.

சிராய்ப்ப்பை ஏற்படுத்தும் சில ஆடைகள்.

குளோரின் இருக்கும் தண்ணீரில் நீச்சல் போன்ற விளையாட்டு செயல்களில் ஈடுபடுதல்.

அரிப்புத் தோலழற்சி அல்லது காளாஞ்சகப்படை போன்ற சரும நோய்களுக்கான மருத்துவ வரலாறு.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

கண்டறிதல் மதிப்பீடு நோயின் விரிவான மருத்துவ பின்புலம், இடுப்பு மற்றும் அந்தரங்க பகுதிகளின் பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்குகிறது. மாற்றங்கள் அல்லது வீக்கம் / நோய்த்தொற்று ஆகியவற்றைக் கண்டறிய முழுமையான குருதி எண்ணிக்கை (சி.பி.சி), சிறுநீர் பரிசோதனை, மற்றும் பாப் ஸ்மியர் சோதனை (கருப்பை வாயின் உயிரணுக்களை பரிசோதித்தல்) போன்ற ஆய்வக சோதனைகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

புணர்புழை அழற்சிக்கான சிகிச்சை வயது, நோய் ஏற்படுவதற்கான காரணம், தீவிரத்தன்மை, மற்றும் சில மருந்துகளுக்கான சகிப்புத்தன்மை உட்பட பல்வேறு காரணிகளை பொறுத்தே அமைகின்றது.

சிகிச்சையில் கார்ட்டிசோன் உள்ளிட்ட அழற்சி எதிர்ப்பு மருந்துகளை மேற்பூச்சாக தடவுதல் மற்றும் மேற்பூச்சு பூஞ்சை எதிர்ப்பு முகவர்களின் பயன்பாடு ஆகியவை அடங்கும். புணர்புழை அழற்சி மட்டுமே கண்டறியப்படால், அட்ரோஃபிக் யோனியழற்சி இருக்கும் நிகழ்வுகளில், மேற்பூச்சு ஈத்திரோசன் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

சுய உதவி நடவடிக்கைகளில் எரிச்சலூட்டிகளின் பயன்பாட்டை தவிர்ப்பது, தனிப்பட்ட சுகாதாரத்தை உறுதிப்படுத்துதல், பிறப்புறுப்பை ஒரு நாளில் பலமுறை சலவை செய்தல், பருத்தி உள்ளாடைகளை உடுத்துதல், மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளை உலர்ந்து வைத்திருத்தல் போன்றவை அடங்கும்.

Vulvitis

நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு:

வாசனை மற்றும் இரசாயனம் அதிகம் இல்லாத மிதமான சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

வாசனை திரவியங்கள் அல்லது சாயமிட்ட டாய்லெட் பேப்பர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், பிறப்புறுப்பு பகுதியை முன்னில் இருந்து பின் வரை துடைக்க வேண்டும்.

வெளிப்புற எரிச்சலூட்டிகள் மற்றும் நுரை, ஜெலி போன்ற இரசாயனங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பருத்தி ஆடை மற்றும் உள்ளாடைகளை மட்டுமே அணிதல் வேண்டும்.

குளோரின் கலந்த தண்ணீர் உடைய நீச்சல் குளங்களில் நீண்ட காலம் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Read More:

How to know symptoms of Headache?

தலைவலி அறிகுறிகள் என்ன?

What is the rheumatoid arthritis?

முடக்கு வாதம் என்றால் என்ன?

What is rib signs and symptoms pain?

விலா வலி என்றால் என்ன?