What is Wisdom Tooth Pain (கடைவாய்ப்பல் வலி அறிகுறிகள் யாவை?)
What is Wisdom Tooth Pain?
A wisdom tooth or wisdom tooth is a molar that erupts as the last or back tooth in any of the four cavities in the mouth. It sprouts between the ages of 17 (late teens) and 25 (early twenties), when a man acquires worldly knowledge (Jnana).
There are a total of four wisdom teeth, namely two in the upper jaws and two in the lower jaws. But some may have less, more or none, depending on certain factors that affect tooth eruption.
Toothache can be caused by many reasons. The most common of these are out of sequence and infection.
What are the main effects and symptoms of the disease?
Associated effects and symptoms include:
Cysts that cause inflammation.
Swelling and redness of the gums near the tooth.
Discharge of pus from the gums.
Dental property.
Bad breath.
fever
Difficulty swallowing.
Sore and swollen lymph nodes under the jaw.
What are the main causes of infection?
The main reasons for this are:
Inadequate space in the jaw prevents teeth from erupting properly (rowing) and causes pain.
If the teeth erupt in irregular order, it becomes difficult to brush the teeth. This causes food to get trapped between the teeth, causing bacterial growth, infection and pain.
How is it diagnosed and treated?
In case of severe periodontal pain, it is necessary to consult a dentist. The doctor will examine your teeth, mouth and gums to identify the cause of the toothache. X-rays are done to see the condition of the molars clearly and better.
Wisdom Tooth Pain
The exact treatment for toothache depends on its cause, but the following general treatments for toothache may be recommended:
Antibiotics to treat infections.
Over-the-counter pain relievers
Disinfectant mouthwashes.
If pain persists and other treatments don’t work, wisdom teeth are removed surgically.
If there is a severe infection, drainage of the pus from the inflammation is part of the treatment regimen.
Seeking immediate dental treatment for periodontal pain can help prevent bacterial growth and prevent the infection from spreading further.
How to Know tips to have a healthy delivery
How to know Age death by blood test!
How to know The Nervous System in body?
கடைவாய்ப்பல் வலி என்றால் என்ன?
அறிவுப்பல் அல்லது ஞானப்பல் என்பது வாயில் உள்ள நான்கு காற்பகுதியிலும் கடைசி அல்லது பின் பல்லாக முளைக்கக் கூடிய கடைவாய்ப்பல் ஆகும். இது 17 (டீன் வயதின் பிற்பகுதியில்) முதல் 25 (இருபது வயதின் தொடக்கத்தில்) வயதுக்குள், அதாவது ஒரு மனிதன் உலக அறிவைப் (ஞானம்) பெறும் வேளையில் முளைக்கிறது.
மொத்தம் நான்கு அறிவுப்பற்கள், அதாவது இரண்டு மேல் தாடைகளில் மற்றும் இரண்டு கீழ்த்தாடைகளில் உள்ளன. ஆனால் சிலரில் பல் முளைப்பதை பாதிக்கும் சில காரணிகளை பொறுத்து, குறைவாக, அதிகமாக அல்லது இல்லாமலும் இருக்கலாம்.
கடைவாய்ப்பல் வலி பல காரணங்களால் ஏற்படக்கூடும். இதில் மிகவும் பொதுவானது வரிசையை விட்டு விலகி இருத்தல் மற்றும் நோய்த் தொற்று.
- நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இதனோடு தொடர்புடைய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
வீக்கத்தை ஏற்படுத்தும் நீர்க்கட்டிகள்.
பல்லுக்கு அருகில் உள்ள ஈறுகளின் வீக்கம் மற்றும் சிவத்தல்.
ஈறுகளில் இருந்து சீழ் வடிதல்.
பற் சொத்தை.
வாய் துர்நாற்றம்.
காய்ச்சல்.
விழுங்குவதில் சிரமம்.
தாடை அடியில் உள்ள நிணநீர்கணுக்களில் புண் மற்றும் வீக்கம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
தாடையில் போதுமான இடம் இல்லாமையால் பற்கள் ஒழுங்காக (வரிசையாக) முளைப்பது தடைபட்டு வலி ஏற்படுகிறது.
ஒழுங்கற்ற வரிசையில் பற்கள் முளைத்தால் பற்களை துலக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பற்கள் இடையே உணவுப்பொருட்கள் தங்கி, பாக்டீரியா வளர்ச்சி, நோய்த் தொற்று மற்றும் வலியை ஏற்படுத்துகிறது.
- இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
கடுமையான கடைவாய்ப்பல் வலி இருந்தால், பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும். மருத்துவர் பல் வலியின் காரணத்தை அடையாளம் காண, உங்கள் பற்கள், வாய் மற்றும் ஈறுகளை பரிசோதித்துப் பார்ப்பார். கடைவாய்ப்பல்லின் நிலையை தெளிவாக மற்றும் சிறந்த முறையில் காண எக்ஸ்-கதிர்கள் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
பல் வலிக்கான சரியான சிகிச்சை அதன் காரணத்தை சார்ந்துள்ளது, ஆனால் பல் வலிக்கு பின்வரும் பொதுவான சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படலாம்:
நோய்த் தொற்றுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள்.
மருந்துச் சீட்டு இன்றி வழங்கப்படும் வலி நிவாரண மருந்துகள்.
கிருமிநாசினி உடைய வாய் கழுவும் மருந்துகள்.
மற்ற சிகிச்சை முறைகள் வேலை செய்யாமல் வலி நீடித்திருந்தால், அறுவை சிகிச்சை மூலம் அறிவுப்பல் அகற்றப்படுகிறது.
கடுமையான நோய்த் தொற்று இருப்பின், வீக்கத்திலிருக்கும் சீழை வடிகால் செய்வது சிகிச்சை முறையின் ஒரு பகுதியாகும்.
உடனடியாக பல்மருத்துவரை ஆலோசித்து கடைவாய்ப்பல் வலிக்கு உடனடியாக சிகிச்சைப் பெறுவது பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கவும் நோய்த்தொற்று மேலும் பரவாதிருக்கவும் உதவுகிறது.
Read More:
How to know symptoms of Jaundice?
மஞ்சள்காமாலை அறிகுறிகள் என்ன ?
How to know symptoms of Heart Attack?
மாரடைப்பு அறிகுறிகள் என்ன?
How to know symptoms of Breast Cancer
மார்பக புற்றுநோய் அறிகுறிகள் என்ன?