பொலிவான சருமத்திற்கு

பொலிவான சருமத்திற்கு அழகு குறிப்பு

பொலிவான சருமத்திற்கு வெண்ணெய்

வெண்ணெயில் அதிக அளவில் கொழுப்பு அமிலங்களும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு மென்மையையும் பளபளப்பையும் அளிக்கிறது. அதுமட்டுமில்லாமல், சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தினை அளித்து ஆரோக்கியமாக வைத்து கொள்கிறது.

எனவே, சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க வெண்ணெயுடன் என்னென்ன பொருட்களை சேர்த்து போட வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Butter Face Mask in Tamil:

பொலிவான சருமத்திற்கு

வெண்ணெய் அழகு குறிப்பு-1

இரண்டு ஸ்பூன் பாலுடன் 1/4 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் கழித்து ஈரத்துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

அதன் பிறகு, தண்ணீரில் முகத்தை நன்கு கழுவ வேண்டும். ஆரம்பத்தில் முகம் எண்ணெயாக இருப்பதுபோல் இருக்கும். ஆனால், சில நேரம் கழித்து முகம் பளிச்சென்று மென்மையாக மாறிவிடும். இதேபோல், இரண்டு முறை செய்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.

வெண்ணெய் அழகு குறிப்பு-2

பொலிவான சருமத்திற்கு

3 ஸ்பூன் தயிரில் 1/4 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் சருமம் மென்மையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், வறண்ட சருமம் உடையவர்கள் இதனை பயன்படுத்தி வந்தால் சருமம் விரைவில் மென்மையாக மாறிவிடும்.

வெண்ணெய் அழகு குறிப்பு-3

ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பாதாம் 3 சேர்த்து, அதனுடன் ஒரு சில துளிகள் பன்னீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 1/2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். அப்ளை செய்து 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு மாதம் ஒருமுறை செய்து வந்தால் முகம் மென்மையாக மாறும்.

வெண்ணெய் அழகு குறிப்பு-4

ஒரு மிக்ஸியில் பாதியளவு வாழைப்பழம் மற்றும் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை நீங்கள் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

அதன் பிறகு, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் முகம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *