ஷாம்பு

வீட்டிலேயே ஷாம்பு தயாரிப்பது எப்படி.?

தலை முடி என்பது ஆண்கள், பெண்கள் இருவருக்குமே முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த தலைமுடியை பராமரிப்பதற்காக எண்ணெய், ஷாம்பூ போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.

ஷாம்பு

பெரும்பாலானவர்கள் செயற்கையான ஒன்றை தான் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனை பயன்படுத்தும் போது தலை முடி வளர்ச்சி இருந்தாலும் நாளடைவில் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும்.

அதனால் இயற்கையான முறையை பின்பற்றுவது நல்லது.  ஏனென்றால் நம் முன்னோர்கள் எல்லாம் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சீயக்காய் மற்றும் ஷாம்பூவை தான் பயன்படுத்தினார்கள்.

அதனால் தான் அவர்களுக்கு முடி உதிர்வு மற்றும் வெள்ளை முடி பிரச்சனை எல்லாம் இல்லாமல் இருந்தது. அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் ஷாம்பூ தயாரிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..

Neem shamboo தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • சந்தன பவுடர்- 100 கிராம்
  • சீயக்காய் தூள்- 500 கிராம்
  • வேப்பிலை- 2 கப்
  • கடலை மாவு – 500 கிராம்

ஷாம்பூ செய்முறை:

ஷாம்பு

முதலில் வேப்பிலையை நன்றாக வெயிலில் காய வைத்து கொள்ள வேண்டும். பின் இதனை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இதனுடன் சீயக்காய் தூள் 500 கிராம், வேப்பிலை தூள் 200 கிராம், கடலை மாவு 500 கிராம், சந்தன பவுடர் 100 கிராம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின் இதனை நன்றாக சலித்து கொள்ள வேண்டும். இதனை காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும்.

இந்த பவுடரை தலை குளிக்கும் போது ஒரு பவுலில் உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை தலையில் தேய்த்து தண்ணீர் ஊற்றி அலச வேண்டும். இந்த பவுடர் ஆனது அனைத்து விதமான முடி வகையினரும் இதனை பயன்படுத்தலாம்.

சீயக்காய் அரைக்க தேவையான பொருட்கள்

சந்தன ஷாம்பூ தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • சீயக்காய் -100 கி
  • சந்தன எண்ணெய் – 4 டீ ஸ்பூன்
  • தண்ணீர் – 1250 மிலி
  • ரிதா – 100 கி
  • ஆம்லா நெல்லிக்காய்த் தூள் – 50 கி
  • கசகசா – 50 கி
  • பூங்காகாய் – 50 கி

ஷாம்பூ செய்முறை:

 இயற்கை ஷாம்பு தயாரிப்பது எப்படி
ஷாம்பு

மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் சந்தன எண்ணெயை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒரு கடாயில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் சேர்க்கப்பட்டுள்ள தண்ணீரானது பாதியாகும் வரை காய்ச்ச வேண்டும். பின் இவை ஆறிய பிறகு சக்கை இல்லாமல் வடிகட்ட வேண்டும்.

உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து கொண்டு அதனுடன்  சந்தன எண்ணெய் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். இந்த ஷாம்புவை அதிகமான எண்ணெய் பசை உள்ளவர்கள் தேய்த்து குள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *