மெனோபாஸ் அறிகுறி – ஆண்களுக்கு இந்த 7 அறிகுறி இருந்தால் மெனோபாஸ் தொடங்கிடுச்சின்னு அர்த்தமாம்! டாக்டர் பதம்குமார் தகவல்!
மெனோபாஸ். இது பெண்களுக்கு மட்டும் அல்ல. ஆண்களுக்கும் உண்டு என்பது தெரியுமா? பெரிமெனோபாஸ், மெனோபாஸ், போஸ்ட் மெனோபாஸ் என்று பல அறிகுறிகள் பெண்களுக்கு மட்டும் தானா? ஆண்களுக்கும் உண்டு என்கிறார் டாக்டர். பதம்குமார். ஆண்களுக்கு மெனோபாஸ் ஆகும் வயது என்ன? எந்த மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் கூறியிருப்பது என்ன வாங்க தெரிஞ்சுக்கலாம்.

ஆண் மாதவிடாய் நிற்பதை ஆண் மெனோபாஸ் அல்லது ஆன் ட்ரோபாஸ் என்று அழைக்கிறோம். மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு குறிப்பிட்ட காலம் வரை மாதவிடாய் பெறாத போது அது மெனோபாஸ் என்று அழைக்கப்படுகிறது. இது போல் ஆண்களுக்கு இல்லை. ஆண்களின் உடலில் படிப்படியாக அறிகுறிகள் இல்லாமல் உடலில் மாற்றங்களை உண்டு செய்யும்.
பெண்களுக்கு மாதவிடாய் நின்றுவிட்டால் மெனோபாஸ் என்று சொல்கிறோம். ஆனால் ஆண்களுக்கு மெனோபாஸ் வந்துவிட்டது என்பதை கண்டறிய எந்த அறிகுறிகளும் இல்லை. இது படிப்படியாக அறிகுறி இல்லாமல் உடலில் மாற்றங்களை உண்டு செய்யும். ஆண்கள் 40 வயதை கடக்கும் போது உடலில் சில மாற்றங்கள் உண்டாகும். இது ஆன்ட்ரோபாஸ் தொடங்கியதன் அறிகுறியே. இந்த அறிகுறிகள் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க.
ஆற்றல் அளவு குறையும்

40 வயதை கடந்த பிறகு உடலில் ஆற்றல் அளவு குறைவதை உணர்வார்கள் என்கிறார்கள் டாக்டர் பதம்குமார்.
இதற்கு காரணம் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையலாம். பரபரப்பான வாழ்க்கையில் தொடர்ந்து சோர்வாகவும் தூக்க உணர்வுடன் இருப்பார்கள். இந்த குறைந்த ஆற்றல் நிலைக்கு காரணம் ஆற்றல் மட்டங்கள் குறைவது தான்.
எரிச்சல் கொண்ட மனநிலை இருக்கும்

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறையும் போது ஆண்களுக்கு கவனம் இழப்பு இருக்கும். மேலும் எரிச்சல் அல்லது மனச்சோர்வு போன்றவையும் இருக்கலாம். இந்த திடீர் மனநிலை மாற்றங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்ததற்கான அறிகுறிகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது.
டாக்டர் பதம்குமார் ஆண்களின் மெனோபாஸ் அறிகுறிகளில் மூட்ஸ்விங் ஒன்று என்று குறிப்பிடுகிறார். உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் நீங்கள் மெனோபாஸ் நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்,
பாலியல் ஆர்வம் இன்மை

ஆண்களுக்கு பாலியல் வாழ்க்கை மீதான ஆர்வம் 40 வயதுக்கு பிறகு சிறிது சிறிதாக குறைய தொடங்கும். இதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவு குறைவதால். இவை தான் பாலியல் உந்துதல் மற்றும் பாலியல் செயல்திறனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ரோபாஸ் நெருங்குகிறது என்பதை சொல்லும் அறிகுறிகளில் இந்த பாலியல் ரீதியிலான ஆர்வம் இன்மையும் ஒன்று என்கிறார் டாக்டர்.
தொப்பை அதிகரிக்க கூடும்

ஆண்களுக்கு 40 வயதுக்கு பிறகு தொப்பை போடுவதை பார்த்திருப்போம். வாழ்க்கை முறை உடல் பயிற்சியின்மை போன்றவை உடல் எடையை ஏற்படுத்துவது போன்று அவர்களது தொப்பைக்கு காரணம் இந்த ஆண் மெனோபாஸ் அறிகுறிகளில் ஒன்று என்கிறார் டாக்டர் பதம்குமார்.
ஆண்கள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொப்பை மட்டும் அதிகரித்தால் உணவு முறை வாழ்க்கை முறை போன்றவற்றில் கட்டுப்பாடு இருந்து எடை கூடினால் அது இந்த ஆன்ட்ரோபாஸ் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.
ஆண்களுக்கு மெனோபாஸ் அறிகுறிகள்
தூக்கத்தில் பிரச்சனை

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஹாட் ப்ளஷ் என்னும் தூக்கபிரச்சனை உண்டாகும் அதே போன்று ஆண்களுக்கும் இரவு நேரங்களில் ஆழ்ந்த தூக்கமில்லை என்றால் அது இந்த ஆண்மெனோபாஸ் உடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
ஆண்களுக்கு தூங்குவதில் சிரமம் இருந்தால் அது உடல் உழைப்பு காரணமாகவோ சோர்வு காரணமாகவோ இல்லாமல் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடுகளால் இருக்கலாம்.
தசை பலவீனம்

ஆண்கள் எப்போதுமே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் ஆண் மெனோபாஸ் காலத்தை எட்டும் போது தசை பலவீனம் படிப்படியாக ஏற்படும் என்கிறார் டாக்டர் பதம் குமார்.
டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும் போது அது தசை இழப்புக்கு வழிவகுக்கும். இது சர்கோபீனியா என்றும் அழைக்கப்படுகிறது. உடல் வலிமை குறையும் இந்த நிலைக்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு.
தன்னம்பிக்கை அளவு குறையலாம்

ஆண்களின் தன்னம்பிக்கை அளவு குறைய தொடங்கினால் அதுவும் ஆண் மெனோபாஸ் அறிகுறிகளில் ஒன்று தான் என்கிறார் டாக்டர் பதம்குமார்.
டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும் போது உடலில் பாலியல் ஆர்வம் இன்மை, மூட் ஸ்விங், தசை வலிமை குறைதல், தொப்பை போன்ற அறிகுறிகள் இணைந்து அவர்களது தன்னம்பிக்கையை அசைத்து பார்க்கலாம்.
டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு

ஆண் மெனோபாஸ் என்னும் நிலையில் உண்டாகும் அறிகுறிகளுக்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் அளவு படிப்படியாக குறைவதால் தான் உண்டாகிறது. பொதுவாக 40 வயதுக்கு பிறகு ஆண்களுக்கு ஹார்மோன் அளவு குறையும்.
ஆனால் உட்கார்ந்த முறை வேலை வாய்ப்பு, உடல் உழைப்பின்மை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவை இருந்தால் இவர்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகமாக இருக்கும்.
ஆன்ட்ரோபாஸ் கண்டறிவது எப்படி?

இந்த அறிகுறிகள் இருப்பதை உணர்ந்து 40 வயது அதிகமாகிவிட்டால் ஆன் ட்ரோபாஸ் அணுகிவிட்டோமா என்பதை அறிய சிம்பிளான பிளட் டெஸ்ட் செய்து கொள்ளலாம். சீரம் டெஸ்டோஸ்டிரோன் அளவு அவற்றிலும் ஃப்ரீ டெஸ்டோஸ்டிரோன் அளவு செய்தால் உங்களுக்கு ஆன்ட்ரோ பாஸ் இருக்கா இல்லையா என்பதை கண்டறிந்துவிட முடியும் என்கிறார் டாக்டர் பதம்குமார்.
பொறுப்பு துறப்பு:
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த கட்டுரை இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு பொறுப்பேற்காது.