சியா விதைகள் சாப்பிடுவதால் உடலில் இந்த 4 மாற்றங்கள் ஏற்படுஎடை இழப்பு தொடங்கி உடல் ஹெல்தியா இருக்க சியா விதைகள் சாப்பிடுங்க என்று உங்களுக்கு யாராவது சொல்லி இருக்கலாம். சியா விதைகள் 2 வாரங்கள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை டாக்டர் செளரப் செதி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி சியா விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் இந்த கட்டுரையில் தெரிஞ்சுக்கலாம் வாங்க.
2 வாரங்கள் சியா விதை சாப்பிடுவதால் உடலில் இந்த 4 மாற்றங்கள் ஏற்படுமாம் ! டாக்டர் என்னலாம் சொல்றாருன்னு பாருங்க!
சியா விதைகள் பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய மிகச்சிறிய விதைகள். நார்ச்சத்து நிரம்பிய இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் இவற்றில் மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளன. தாவர அடிப்படையிலான புரதம் கொண்ட உணவுகளில் இவையும் ஒன்று.
சிறிய அளவு விதைகளிலேயே இத்தகைய ஊட்டச்சத்து உடலுக்கு கிடைத்துவிடுகிறது. உங்கள் உணவு ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை பாதுகாக்க விரும்பினால் நீங்கள் உணவு முறையில் சியா விதைகளை சேர்க்க வேண்டும். தொடர்ந்து 2 வாரங்கள் சியா விதைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் மாற்றங்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்
நீரிழப்பு உடலில் பல பிரச்சனைகளை உண்டு செய்கிறது. உடல் நச்சுக்கள் வெளியேற்ற முடியாமல் போகலாம், ஆற்றல் இல்லாமல் உடல் சோர்வை எதிர்கொள்ளலாம்.
சிறுநீரக கோளாறு உண்டு செய்யலாம். இப்படி பல பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த சியா விதைகள் சாப்பிடுவது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இது குறித்து டாக்டர் செதி சொல்வதை கேட்கலாம்.
சியா விதைகள் அதன் எடையை விட 12 மடங்கு தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. இதை சாப்பிடும் போது நீரேற்றமாக வைத்திருக்க செய்யுமாம்.

செரிமானத்துக்கு சிறந்தது சியா விதைகள்
சியா விதைகள் சாப்பிடும் போது செரிமான மண்டலம் சீராக இருக்கும். இதில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து இதற்கு காரணம் என்கிறார் டாக்டர் செதி.
உங்களுக்கு செரிமானத்தொல்லை அவ்வப்போது இருந்தால் நீங்கள் தொடர்ந்து 2 வாரங்கள் சாப்பிடும் போது உங்களுக்கு இந்த அஜீரண கோளாறு மாற்றங்கள் குறைவதை பார்க்கலாம்.
மேலும் செரிமான இயக்கம் சீராக இருந்தால் குடல் இயக்கங்கள் சீராக இருக்கும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்,.
சியா விதைகள் எடை நிர்வகிக்க உதவும்
நீங்கள் எடை இழப்புக்கு முயற்சிக்கும் போது அடிக்கடி பசி உணர்வு இருந்தால் நீங்கள் சியா விதைகளை முயற்சிக்கலாம். தொடர்ந்து 2 வாரங்கள் சியா விதைகள் சாப்பிடுவதன் மூலம். உங்கள் பசி உணர்வு கட்டுக்குள் இருக்கலாம். இது குறித்து டாக்டர் செதி குறிப்பிடும் போது
நார்ச்சத்து நிறைந்த சியா விதைகள் சாப்பிடும் போது அவை வயிறு நிறைந்த திருப்திகரமான உணர்வை தரும் இதனால் பசி உணர்வு கட்டுப்பட்டு உடல் எடை நிர்வகிக்க உதவும்.
சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்
சியா விதைகள் நீரேற்றம் கொண்டவை. இது ஆன் டி ஆக்ஸிடன்ட்கள் கொண்டவை. இவை இரண்டும் இணைந்து சருமத்தை பராமரிக்க செய்யும். சருமத்துக்கு நுணுக்கமான பராமரிப்பை அளிக்கிறது.
சருமம் எத்தகைய பிரச்சனையும் இல்லாமல் பளபளப்பான சருமத்தின் தோற்றத்தை அளிக்கிறது. தொடர்ந்து 2 வாரங்கள் சியா விதைகள் பயன்படுத்தினால் உங்கள் சருமத்தில் இத்தகைய மாற்றங்களை நீங்கள் பார்க்கலாம்.
சியா விதைகளின் நன்மைகள் குறித்து ஆய்வு சொல்வது என்ன?
சியா விதைகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய நோய் அபாயத்தை குறைக்கும். இவற்றில் கரையக்கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைப்பதால் இதய நோய் ஆபத்துகள் குறையும் என்று சொல்லப்படுகிறது.
சியா விதைகள் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற எலும்பு ஆரோக்கியத்துக்கு வேண்டிய முக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. இவை எலும்பு தாது அடர்த்தி ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
சியா விதைகள் இரத்த சர்க்கரையை ஒழுங்குப்படுத்த உதவும். இதற்கு காரணம் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நன்மை பயக்கும் சேர்மங்கள் காரணமாக இருக்கலாம்.
பொறுப்பு துறப்பு:
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. இந்த கட்டுரை இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவை அடிப்படையாக கொண்டு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும்.