தினமும் இந்த 3 மூலிகைகள் சாப்பிடுங்க, உடம்புல இந்த 8 நல்ல மாற்றம் உண்டாகும்!
பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, கிராம்பு இவை ஓவ்வொன்றும் தனித்துவமான மருத்துவ குணங்களை கொண்டது. செரிமானம் தொடங்கி எடை இழப்பு வரை உதவும் இந்த மூலிகைகளை அன்றாட உணவில் ஏதேனும் ஒரு வகையில் இதை எடுத்துவருவதன் மூலம் உடல் 10 நன்மைகளை பெறுகிறது.
அப்படி உடல் பெறும் நன்மைகள் என்ன, எந்த வகைகளில் இதை சேர்த்து சாப்பிடலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
தினமும் இந்த 3 மூலிகைகள் சாப்பிடுங்க, உடம்புல இந்த 8 நல்ல மாற்றம் உண்டாகும்!
மருந்தில்லாமல் உடல் ஆரோக்கியம் பாதுகாக்க விரும்பினால் நீங்கள் உங்கள் அன்றாட உணவு முறையில் மூலிகை மசாலாக்களை சேர்க்க வேண்டும். இது செரிமானத்தை எளிதாக்க உதவும். உணவில் இருக்கும் ஊட்டச்சத்தை உடல் உறிஞ்சும். உடலுக்கு போதுமான சத்துக்கள் கிடைப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் வலிமையாக இருக்கும்.
நோய் இல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். அப்படி நீங்கள் தினமும் சேர்க்க வேண்டிய முக்கிய 3 மூலிகைகள் என்னென்ன என்பதையும் அதன் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்துகொள்வோம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
இந்த 3 மூலிகைகளும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் கொண்டவை. இதனால் உடலுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நோய்க்கிருமி உடலுக்கு நுழையும் போது நமது நோயெதிர்ப்பு தூண்டப்பட்டு ஆன்டி பாடிகளை வெளியிடுகிறது. இது நோய்க்கிருமிகளில் உள்ள ஆன்டி ஜென்களுடன் இணைந்து கிருமித்தொற்றை அழிக்க செய்யும். இத்தகைய வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதில் இந்த 3 மூலிகைகளும் முக்கியமானவை.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
நீரிழிவு நோயாளிகள் உணவு முறையிலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். அப்படியான உணவுகளை எடுக்க விரும்பினால் கண்டிப்பாக இந்த 3 மூலிகைகள் உதவும். குறிப்பாக இந்த இலவங்கப்பட்டை இன்சுலின் அளவையும் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
நீரிழிவு இருப்பவர்களுக்கு மட்டும் அல்லாமல் இன்சுலின் உணர்திறன் உள்ளவர்களுக்கும் இவை ஏற்றது. இலவங்கப்பட்டை இன்சுலின் உடல் பயன்படுத்த உ தவுகிறது.
வாய் துர்நாற்றம் நீக்குகிறது
சோம்பு, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை மூன்றுமே நறுமண மசாலாக்கள் . இவை புத்துணர்ச்சியூட்டும் பண்புகளை கொண்டுள்ளன. மேலும் இவற்றில் உள்ள பண்புகள் வாய் துர்நாற்றம் கொண்டுள்ள பாக்டீரியாக்களை நீக்க செய்கின்றன.
வாய் துர்நாற்ற பிரச்சனை இருப்பவர்கள் உணவு முறையில் இதை நீக்க விரும்பினால் இந்த 3 மூலிகைகளை எடுத்துகொள்ளலாம். உணவுக்கு பிறகு இந்த மூலிகைகள் ஏதேனும் ஒரு வகையில் எடுத்துகொள்வது வாய் சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க செய்யும்.
நாள்பட்ட அழற்சி கோளாறுகள்
உடலில் நாள்பட்ட அழற்சி நிலை பல பாதிப்புகளை உண்டு செய்யும். நீரிழிவு, புற்றுநோய் மற்றும் மூட்டுவலி போன்ற நிலைமைகளை உண்டு செய்யலாம். பெரும்பாலும் இத்தகைய ஆபத்தை வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றங்கள் மூலம் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம். அவற்றில் இந்த மூலிகைகளும் உண்டு.

குறிப்பாக அழற்சி கோளாறுகளால் மூட்டுவலி, கீல்வாதம் போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள், சோம்பு, கிராம்பு, இலவங்கப்பட்டை போன்றவற்றை ஏதேனும் ஒரு வகையில் சேர்த்து வருவதன் மூலம் இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அழற்சியை குறைக்கின்றன.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
யர் இரத்த அழுத்த பிரச்சனைகள் கொழுப்பு போன்றவை இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். இவை இரண்டையும் கட்டுப்படுத்துவதில் உணவும் முறை முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் உங்கள் உணவில் ஏதேனும் ஒரு வகையில் கிராம்பு, இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் என்னும் சோம்பு போன்றவற்றை சேர்த்து வருவது இரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்துகின்றன. உடலில் கொழுப்பு அளவை குறைக்கின்றன. இதனால் ஆரோக்கியமான இதயம் மற்றும் இதய நோய் அபாயம் குறைகிறது.
மூளையின் செயல்பாடு மேம்படுத்தும்
மூளை ஆரோக்கியமாக இருந்தால் நினைவாற்றல் மேம்படும். அல்சைமர், டிமென்ஷியா போன்ற மறதி நோய்களின் தாக்கம் இருக்காது. அத்தகைய நன்மையை அளிப்பதில் உதவும் மூலிகைகளில் இந்த கிராம்பு, இலவங்கம், சோம்பு போன்றவை உதவும்.
இதுமூளையை தூண்டுவதற்கும் நினைவாற்றலை மேம்படுத்துவஹற்கு நரம்பியல் கடத்தல் நோய்களை தடுக்கவும் உதவும். அதனால் தினசரி வழக்கத்தில் இதை சேர்த்து வருவது நன்மை பயக்கும்.
உடல் எடை நிர்வகிக்க
உடல் பருமன் இருப்பவர்கள் எடை குறைய விரும்பும் போது உணவு முறையில் சேர்க்க வேண்டிய மூலிகைகளில் இவை மூன்றும் உண்டு. இந்த மூலிகைகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

உடலில் கொழுப்பு எரிப்பதை துரிதப்படுத்தும். இதனால் எடை நிர்வகிக்க செய்யலாம். மேலும் இவை பசியை கட்டுப்படுத்துவதிலும் முக்கியபங்கு வகிப்பதால் எடை குறைய விரும்புபவர்கள் இந்த மூலிகைகளை தினசரி வழக்கத்தில் சேர்த்து வரலாம்.
ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது
உடலில் ஹார்மோன் சமநிலையாக இருந்தாலே உடலில் பல இயற்கை மாற்றங்கள் அசாதாரணம் இல்லாமல் இயல்பாக நடக்கும். குறிப்பாக பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஹார்மோன் சமநிலையாக வைத்திருக்க வேண்டும்.
இந்த மூன்று மூலிகைகளும் அதற்கு உதவும். குறிப்பாக சோம்பு விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும். பெண்களில் பிஎம்எஸ் அல்லது மாதவிடாய் நிறுத்தம் போன்ற அறிகுறிகள் குறைக்கும்.

எப்படி சேர்க்கலாம்?
கிரேவிகளில் இதை பொடியாக அரைத்து வைத்து சேர்க்கலாம்.
சோம்பு , இலவங்கப்பட்டை, கிராம்பு மூன்றையும் தேநீர் வடிவில் எடுக்கலாம்.
ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டீஸ்பூன் சோம்பு, ஒர் துண்டு பட்டை, 2 கிராம்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கி தேவையெனில் தேன் சேர்த்து குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு:
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. உங்களுக்கு பாதுகாப்பான ஒன்றை தேர்வு செய்ய துறை சார்ந்த நிபுணரிடம் ஆலோசிக்கலாம்.