Dhat Syndrome
Dhat Syndrome
Listen to this article

Alopecia is a naturally occurring (spontaneous) (உயிரணுப்போக்கு அறிகுறிகள் என்ன?) ejaculatory disorder experienced by men. That is, ejaculation without any sexual activity. Emotional imbalance and alcohol consumption are some of the causes of cell death.

உயிரணுப்போக்கு என்பது, ஆண்கள் அனுபவிக்கும் ஒரு இயற்கையாய் வரும் (தன்னிச்சையாக) விந்து வெளியேறுதல் குறைபாடு ஆகும். அதாவது, எந்தவித பாலியல் செயல்பாடும் இல்லாமல் விந்து வெளியேறுதல் ஆகும். உணர்ச்சி சமநிலையின்மை, மது அருந்துதல் ஆகியன உயிரணுப்போக்கின் காரணங்களில் சில ஆகும்.

சில ஆண்கள் தூக்கத்தில் விந்து வெளியேறுதலால் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி ஏற்படும் உயிரணுப்போக்கு, ஒரு ஆணின் உடலில் பாதகமாக விளைவுகளை ஏற்படுத்துகிறது. உயிரணுப்போக்கு, உடம்பில் மிகையான விந்து உற்பத்தி ஆவதால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது, இருந்தாலும், இதில் முடிவான ஆய்வுகள் ஏதும் இல்லை.

வாலிபப் பருவத்தில் ஆண்கள், இந்த வயதில் ஹார்மோன் அளவுகள் அதிகரிப்பதால், விந்து உற்பத்தியும் அதிகரிக்கிறது. அதனால், அவ்வப்போது, அவர்கள் உயிரணுப்போக்கை உணரலாம். உயிரணுப்போக்கில், மிகையான விந்து, உடலில் இருந்து விந்து வெளியேறுதல் மூலமாக வெளியேற்றப்படுகிறது.

உயிரணுப்போக்கில் கவனிக்கப்பட்ட பொதுவான அறிகுறிகள் பின் வருமாறு:

கவனக் குறைபாடு.

பசியின்மை.

முதுகு வலி.

சோர்வு.

மன இறுக்கம்.

ஞாபகக் குறைபாடு.

மங்கலான கண்கள்.

இரவுகளில் வியர்த்தல்.

விதைப்பைகளை சுற்றி வியர்த்தல்.

ஈரப்பதமான மற்றும் வெதுவெதுப்பான தோல்.

சூடான மற்றும் ஈரப்பதமான உள்ளங்கால்கள் மற்றும் உள்ளங்கைகள்.

பெரினியத்தில் [விதைப்பைக்கும் (விதைகளை மூடியிருக்கும் தோல்)  ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதி] வலி ஏற்படுதல்.

உயிரணுப்போக்கைத் தடுப்பதற்கு தெளிவான வழிகள் எதுவும் இல்லை, ஆனால், உங்கள் உயிரணுக்களின் செயல்பாடு மற்றும் தரத்தை அதிகரிக்கவும், விந்து வெளியேறுதலில் உங்கள் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும் நீங்கள் யோகா பயிற்சி செய்யலாம். ஒரு ஆயுர்வேத மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மூலிகை மருந்துகள் மற்றும் வீட்டு நிவாரணிகளும் கூட உயிரணுப்போக்கைத் தடுக்க உதவிகரமாக இருக்கக் கூடும். அவற்றுள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

இரவுகளில் ஏற்படும் உயிரணுப்போக்கு குறைபாட்டில், சிகிச்சை எதுவும் தேவையில்லை. வழக்கமாக, 20 வயதிற்கு மேல் இந்த நிகழ்வுகள் குறைகின்றன. இந்த இரவு விந்து வெளியேறுதல், உடலுறவு அல்லது கைப்பழக்கம் குறையும் போது அடிக்கடி ஏற்படக் கூடும். உயிரணுப்போக்கின் காரணத்தைப் பொறுத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மூலிகை நிவாரணிகளும், உயிரணுப்போக்கு சிகிச்சையில் உதவிகரமாக  இருக்கின்றன.

உயிரணுப்போக்கை நீங்கள் சமாளிக்க உதவும், அன்னாசி பழம், பிளம்ஸ் பழம் மற்றும் இஞ்சி, வெங்காயம் போன்ற வேரில் விளையும் காய்கறிகளை நீங்கள் சாப்பிட வேண்டும்.

உயிரணுப்போக்குக்கான மூலிகை நிவாரணிகளில் அடங்கியவை பின் வருமாறு:

இரவு முழுவதும் பால்-இல் ஊற வைத்த பாதாம் கொட்டைகள்

இரண்டு மூன்று இழைகள் குங்குமப்பூ கலந்த ஒரு கோப்பை வெதுவெதுப்பான பால் அருந்துதல் .

தினமும் மூன்று நான்கு துண்டுகள் பூண்டு மெல்லுதல்.

அஸ்வகந்தா, பாலா மற்றும் விதார் போன்ற மூலிகை நிவாரணிகள் கலந்த, வெதுவெதுப்பான வெள்ளாட்டுப்பால் (பசுவின் பாலை விட வெள்ளாட்டுப் பால் சக்தி வாய்ந்தது, ஆனால் வெள்ளாட்டுப் பால் கிடைக்கவில்லை எனில், பசுவின் பாலும் வேலை செய்கிறது) அருந்துதல்.

தினந்தோறும் ஒரு மேஜைக்கரண்டி அஸ்பாரகஸ் கலந்த ஒரு கோப்பை சுடுநீர் அருந்துதல்.

தினமும் காலை ஒரு மேஜைக்கரண்டி லஜ்வந்தி பொடி கலந்த பால் அருந்துதல்.

symptoms of Dhat Syndrome

பின்வருவன உயிரணுப்போக்கை, நீங்கள் கையாள உதவும் சுய-பராமரிப்பு குறிப்புகளின் ஒரு பட்டியல் ஆகும்:

மிதமான இரவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.          

இரவில் தூங்கும் பொழுது கடினமான படுக்கை விரிப்புகளை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

தூங்கும் பொழுது இறுக்கமான உள்ளாடைகள் மற்றும் இறுக்கமான உடைகளைத் தவிர்க்க வேண்டும்.

பச்சையான, சுத்தமான காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த ஊட்டச்சத்து மிகுந்த ஒரு சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும்.

மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்.

வழக்கமாக அதிகாலை/ விடியலுக்குப் பின்னர் முதல் சில மணி நேரங்களில் தான் உயிரணுப்போக்கு நிகழ் கிறது. அதனால் ஒரு அலாரம் வைத்து அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்.

உங்கள் பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மலச்சிக்கல் காரணமாக நீங்கள் பாதிக்கப்பட்டால் ஒரு மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது ஆகும்.

கீகல் பயிற்சிகள் இடுப்புப் பகுதி தசைகளுக்கு வலுவூட்டுவதன் மூலம் உயிரணுப்போக்கை சமாளிக்க உதவக் கூடும். உங்கள் இடுப்புப் பகுதி தசைகளை ( சிறுநீர்ப்பை, குடல் மற்றும் சிறுநீர்க் குழாயைத் தாங்கும் தசைகள்) ஐந்து வினாடிகளுக்கு சுருக்க வேண்டும்.

பின்னர், சுருக்கிய இடுப்புப் பகுதி தசைகளை ஐந்து வினாடிகளுக்கு நிறுத்தி, ஐந்து வினாடிகளுக்குப் பிறகு தளர்த்த வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் பொழுது உங்கள் மூச்சை இயல்பாக வைக்கவும். இந்த பயிற்சியை செய்யும் போது நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தால், நிறுத்தி விட்டு சிறிது நேர ஓய்விற்குப் பிறகு மறுபடி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

காரமான உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

தூங்குவதற்கு முன் உங்கள் சிறுநீர் பையை காலி செய்ய வேண்டும்.

படுக்கப் போகும் முன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் மனதை திசைதிருப்ப மற்றும் மனதை நிறைவாக வைக்க நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல இசையைக் கேட்பது போன்ற பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உயிரணுப்போக்கு என்பது, விறைப்புத்தன்மை அல்லது உச்சக்கட்டம் இல்லாமல் (பாலியல் செயல்பாடு ஏதுமில்லாமல்) தன்னிச்சையாக விந்து வெளியேறுதல் ஆகும். உயிரணுப்போக்கு ஒரு பாலியல் உணர்வைத் தூண்டும் கனவின் காரணமாக ஏற்பட்டால், அந்த நபருக்கு ஈரமான கனவுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. உயிரணுப்போக்கில், வெளியேற்றம் உயிரணுக்களைக் கொண்டிருப்பதால் மற்ற வெளியேற்றங்களிலிருந்து இது வேறுபடுகிறது. உயிரணுக்கள் என்பவை, கர்ப்பத்திற்கு வழிவகுக்கும்படி, பெண்களின் கருமுட்டையை கருத்தரிக்கும் பொறுப்பினைக் கொண்ட கூறுகள் ஆகும்.

Read More:

how to know to Anal Cancer?

ஆசன வாய் புற்றுநோய் என்றால் என்ன? 

How to know symptoms of bone cancer?

எலும்பு புற்று நோய் என்றால் என்ன?

How to know symptoms of Colorectal Cancer

பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன?