symptoms of Phlegm
symptoms of Phlegm
Listen to this article

Phlegm is a thick, கபம் அறிகுறிகள் என்ன? fluid build-up of cells in the walls of the lungs. It is produced by the body’s immune system and medically known as mucus. Even when a person is healthy, a thin layer of mucus may be present, but not noticeable.

கபம் என்பது நுரையீரலின் சுவர் அணுக்கள் உருவாக்கும் ஒரு தடிமனான, திரவம் ஆகும். இது உடலின் தற்காப்பு அமைப்புகளால் தயாரிக்கப்படுகிறது, மருத்துவ ரீதியாக இது சளி என அழைக்கப்படுகிறது. ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்கும்போது கூட ,மெலிதாக ​சளி இருக்கும், அனால் தெரியவராது.

சில நோய்களின் போது, ​​நுண்ணிய துகள்கள் மற்றும் பாக்டீரியா போன்ற தொற்றுக்களை சிறைபிடித்து நோயை குணப்படுத்துவதற்க்காக சளி தடித்துவிடுகிறது. கபத்திற்க்கு, வித்தியாசமான துர்நாற்றம் மற்றும் வண்ணம் இருந்தால் அதை பொருத்து அதன் அடிப்படை நோயை ஆய்வு செய்ய வேண்டும். இது குளிர், மேல் சுவாசக் குழாய் தொற்று, நாள்பட்ட நுரையீரல் தடுப்பு, சிஓபிடி நோய், ஒவ்வாமை, ஆஸ்துமா, நிமோனியா மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களிலும் அதிகமாக உற்பத்தி ஆகலாம்.

அசாதாரண கபம் இருந்தால், இரத்த பரிசோதனையுடன் பொதுவாக மார்பக எக்ஸ்ரே அல்லது சி.டி ஸ்கேன், நுண்ணோக்கி மற்றும் நுண்ணுயிர் பரிசோதனை ஆகியவற்றின் மூலம்  உறுதிப்படுத்தலாம். சிகிச்சையின் நெறிமுறைகள் அடிப்படை காரணத்தை பொருத்து, நபருக்கு நபர் வேறுபடுகின்றன. கபம், சுவாசக்குழாயில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் திரவமாக இருப்பதால் அதை முற்றிலுமாக தடுப்பது சாத்தியமில்லை.

கபம் அறிகுறிகள் என்ன

அதிகமாக அல்லது அசாரதனமாக கபம் தோன்றினால் அது அடிபடையில் நோய் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. பொதுவாக இருமல் மூலம் உடலில் இருந்து கபம் வெளியேறும். அசாதாரணமான கபத்துடன் தோன்றும் அறிகுறிகள் கிழ்கண்டவை  

ஒழுகும் மூக்கு

படுத்திருக்கும் பொது மூக்கின் பின்புரதிளுருந்து தொண்டைக்குள் வழியும் கபம்

தொடர் செருமுதல் மற்றும் தொண்டையை சரி செய்யும் முயற்சி.

மூச்சு திணறல்

மூச்சு இழுப்பு

காய்ச்சல்

நடுக்கம்

குமட்டல்

வாந்தி.

மார்பில் எரிச்சல் அல்லது நெஞ்சு வலி

வாயில் புளிப்புதன்மை

கபத்தில் ரத்தம்

கரகரத்த குரல்

  • புகை பிடிப்பதை நிறுத்தவும்

எவ்வளவு விரைவில் முடியுமோ புகைபிடிப்பதை நிறுத்துங்கள்.புகைப்பிடிப்பதைத் நிறுதத்துவதர்க்கு  அதற்குள்ள உதவி குழுக்களில் சேரவும் அல்லது மருத்துவரிடமோ/நிபுனரிடமோ ஆலோசனை பெற்று புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு உதவியான தயாரிப்புகள் மற்றும் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் சேர்த்து-க்கொள்ளுங்கள்

எரிச்சலூட்டிகளை எதிர்கொள்ளுவதை தவிர்க்கவும்  

புகை, தூசி, மாசுபாடு ஆகியவற்றின் காட்டுதலை தவிர்க்கவும்

ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி

நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்க தினசரி உணவில் சத்தான பழங்கள், பழச்சாறுகள் மற்றும் காய்கறிகளின் சேர்க்கவும். தினசரி நடைபயிற்சி, நடையோட்டம், நீச்சல் போல உடல் பயிற்ச்சிகளை செய்தால், நல்ல ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொண்டு நோய்களைத் தவிர்க்க முடியும்.

  • கபம் சிகிச்சை

கபத்தின்  சிகிச்சை, அடிப்படை காரணத்தை பொருத்தது. சில சந்தர்ப்பங்களில், இதற்க்கு பல காரணங்கள் இருக்கலாம். சிகிச்சை திட்டம் கீழ் வருபவை:

Phlegm

மருத்துவர்கள் தோற்று என்றால் ஆண்டிமைக்ரோபியல் மருந்துகள், ஒவ்வாமைக்கான என்றால் ஒவ்வவாமைஎதிர்-ப்பிகள் மற்றும் ஆஸ்துமாவிற்கு என்றால் அழற்சி-எதிர்ப்பிகளை பரிந்துரைக்ப்பார். அசிட் ரிஃப்ளக்ஸ் சிகிச்சையளிக்க அண்டாசிட்ஸ் பரிந்துரைக்ப்படும். சரியான காரணத்தைத் தீர்மானிக்க முடியவில்லை என்றால், நிவாரணத்திற்கு இருமல் மருந்துகள் பரிந்துரைக்க-ப்படுகின்றன.

மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சில சூழ்நிலைகளில், மார்பு பிசியோதெரபி அதிகப்படியான கபத்தை அகற்ற உதவுகிறது. சுவாசத்தோடு தொடர்புள்ள தசைகள் செயல்படுவதன் மூலம் முச்சுவிடுவது எளிதாகி இதமாகவும் இருக்கும்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

திரவங்கள், சூடான சூப்புகள், பழச்சாறுகள் ஆகியவற்றை குடித்தல் கபம் மேலிதாகும்

இருமல் சொட்டு மருந்து மற்றும் மாத்திரைகள் ஆகியவை தொண்டையில் எரிச்சல் குறைக்க உதவுகின்றன.

நாசி நெரிசலைத் தடுக்க நீராவி பயன்படுத்தவும்.

புகைப்பதைத் தவிர்க்கவும் அல்லது அடுத்தவர் புகைப்பிடிக்கும் பொது ஒதுங்கவும்

ஒவ்வொரு உணவிற்கும் முன்பும் பின்பும், வாய் / மூக்கு தொட்ட பிறகு கைகளை கழுவவும்

யோகா அல்லது ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள் அதிகப்படியான கபத்தை குறைக்க உதவும்.

How to Know the Treatment of Obesity?

When is obesity treatment needed? உடல் பருமன் சிகிச்சையை எப்படி அறிவது?

How to know symptoms Erectile Dysfunction?

Erectile Dysfunction (ED) (விறைப்பு செயலிழப்பு அறிகுறிகள் என்ன)

How to know symptoms of bone cancer?

What is bone cancer? எலும்பு புற்று நோய் என்றால் என்ன?